Saturday 31 July 2021

வாழ்த்துவதன்றோ தமிழர்க்கு வாழ்வு! - பேராசிரியர் க. அன்பழகன்

 வாழ்த்துவதன்றோ தமிழர்க்கு வாழ்வு! - பேராசிரியர் க. அன்பழகன்


வள்ளுவன் வாய்மொழியாம் தெள்ளிய குறளினை:

உள்ளுதொறும் உவக்கும்  ஒவியமாக்கிய திறத்தினும்‌,

இளங்கோ யாத்த முத்தமிழ்ச் சிலம்பினை

வளங்காண வழங்கிய பைந்தமிழ்த் திறத்தினும்‌,

பண்டைத்தொகை நூல்களிள் வகை யறிந்து:

பொங்குதமிம்ப் பாவியம் ஆக்கிய திறத்தினும்‌,

சங்கத்தமிழ்ப் பாக்களின் பொருளினைத் தேர்ந்து

மங்காத இசைச்கூத்து நிகழ்த்திய திறத்தினும்‌,

தென்பாண்டிச் சிங்கமும், ரோமாபுரிப் பாண்டியனும்

பொன்னார் சங்கரும் பண்டார வன்ணியனும்‌.

திரைப்படத் துறையில் வரைந்த கதைகளை

புனைந்திட்ட வகையால் காட்டிய திறத்தினும்‌,

நினைவினில் நிலைத்திடத் தீட்டிய மடல்களும்‌,

நிமிடத்தில் வடித்திட்ட அரங்கக் கவிதைகளும்‌,

நிமிர்ந்திடச் செய்யும் எழுச்சிதரு முரைகளும்‌,

நிலையான குறிக்கோள் நிறுத்திய கட்டுரைகளும்‌,

தலையான அறிவினைத் தாங்கிடும் திறத்தினும்‌,

தனக்குவமை இல்லாத் தகுதி மேம்படுத்தலின்

தன்னை வெல்வா ரில்லாப் பெற்றியினும்

தமிழக அரசின் முதல்வரே அன்றித்

தமிழின முதல்வராய் விளங்குபவரன்றோ!


அண்ணா வழியைக் காத்திடும் வகையால்

'அண்ணாவின் தம்பி' ஆகிடும் தகவினில் ‌

முன்னுரிமை கொண்ட முதல்வனே அன்றோ!

பகுத்தறிவுத் தந்தை பெரியாரின் பிள்ளையாய்ப் 

பயிற்சியில் தோ்ந்த தன்மான உணர்வால் 

இனமானம் காத்திடும் முதல்வன் அன்றோ!  

உரையில், எழுத்தில், கதையில், கவிதையில்‌,

முத்தமிழைத் தாக்கி நிறுத்தும் திறத்தினில்

நற்றமிழ்ச் தாயீன்ற முதல்வன் அன்றோ!

தமிழுக்கும் தமிழர்க்கும் வாழ்வு சிறந்திடத்

தன்வாழ்வை வழங்கி நிற்கும் திறத்தினால்

தியாகச் சிந்தையினும் முதல்வன் அன்றோ!

காலத்தின் விரைவினைக் கணித்திடும் திறத்தால்

காலத்திற் கடிதினில் கடமை ஆற்றலால்

காலஞ் சிதையாப் புகழுறு முதல்வன் அன்றோ!

தொண்டினில் கலங்கரை விளக்காய்த் திகழ்ந்து

ஆண்டினில் மூத்த இணையிலாத் தலைவர்தம் 

நினைவுச் சின்னம் நிறுவிய முதல்வனுமன்றோ!

பன்முகத் திறன் செறி முதல்வராம் கலைஞர் 

'வாழ்க எந்நாளும் வெற்றி பல கண்டு'' என 

வாழ்த்துவ தன்றோ  தமிழர்க்கு வாழ்வாம்! 


- பேராசிரியர் க.அன்பழகன்

No comments:

Post a Comment