Friday 2 July 2021

எழையின் சிரிப்பில் இறைவனைக்... - ஹாஜாமைதீன்

 எழையின் சிரிப்பில் இறைவனைக்... - ஹாஜாமைதீன்


         திருச்சியில் இருக்கும் பலருக்கும் நன்றாகவே தெரிந்திருக்கும்,அரிஸ்டோ ரவுண்டானா,மன்னார்புரம் ஏரியாக்களில் காத்திருக்கும் தினக்கூலி தொழிலாளர்களை.அவர்களை கவனித்தவர்களுக்கு புரியும் அவர்களிள் பெரும்பான்மையானவர்கள் பெண்களே.அவர்கள் அவர்களுடைய வேலையை முடுத்தபின் 6 மணிக்குப்பிறகு வீட்டீற்குப்போக ,லோடு ஏற்றிவரும் லாரிகளுக்காக காத்திருப்பார்கள்.எனெனில் அவர்கள் பெரும்பாலும் அருகில் உள்ள ஊர்களிலருந்துதான் வருவார்கள்.மேலும் அவர்களின் ஊர்களும் மெயின் ரோட்டில் இருக்கும் வாய்ப்பும் இல்லை,ரோட்டில் இருந்து 2 அல்லது 3 கிலொமீட்டர் நடந்து செல்லவேண்டிய தூரமிருக்கும்.இப்படி இவர்கள் லாரி கிடைத்து அதில் ஏறி அதன் பின் நடந்து சென்று ,வீட்டை அடைந்து அவர்களின் பிள்ளை,கனவன்மார்ளை கவனித்து உண்டு உறங்கி,மீண்டும் அதிகாலையில்,இதேபோல லாரி பிடித்து புறப்பட்டு வேலைக்கு வரவேண்டும்.லாரியில் ஏறி செல்வதும் எளிதனது கிடையாது.இரண்டு அல்லது மூவருக்குதான் ஒரு லாரியில் இடம் கிடைக்கும் ,அனால் அங்கு காத்ததிருப்போர் 100க்கும் குறைவில்லாதவர்களாக இருப்பார்கள்,சில வேலைகளில் இது இரவு 9 மணியைக்கடந்தும் தொடரும்.சரி இவளவு சிரமம் ஏன் பஸ் புடித்து செல்லவேண்டியதுதானெ,பஸ் இல்லையா? என்று கேட்கலாம்.பஸ்சில் போவதை விட லாரியில் போவது சிலவு குறைவு 10 ரூபாயில் முடிந்துவிடும். ஆனால் ஆபத்தனதுக்கூட,இருந்த்தும் இந்த ஆபத்தனப் பயனதை செய்வது மூலம் சொற்பத்தொகையை மிச்சப்படுத்தினால் அது வேலை இல்லாத ஒரு நாளை சமாளிக்கவொ அல்லது தனது குழந்த்தைக்கு தின்பண்டம் வாங்கவோ உதவும்.தினக்கூலிகளுக்கும் ஏழைகளுக்கும் சொற்பமும் மிகப்பெரிய பனமே.


       இன்றைய முதல்வர் ஸ்டாலின் அவர்கள் தயன்போடு தீட்டியுள்ள,மகளிர்கான இலவச பேருந்து பயனத்திட்டம் என்பது, இத்தகையொர்களுக்கானதுதான்.இவர்களுக்கு இது ஒரு வரப்பிரசாதமென்றே சொல்லலாம்.இதனால் பயனடைவோர் ஏழைகளே அதிகமானோர்.இது அவர்களின் வாழ்வியல் தரத்தை நிச்சயம் உயர்த்தும்.சரியான நேரத்தில் பாதுகாப்பாய் வீடு சென்று ,காத்திருக்கும் தனது பிள்ளைகளை கண்டு உச்சிமுகரும் அந்த தருனத்தில் அந்த குழந்தைகளும்,ஸடாலினும்,கலைஞரும் ,அண்ணாவும்,பெரியாரும்,சேர்ந்த்தே சிரித்து மகிழ்வார்கள்.

“”எழையின் சிரிப்பில் இறைவனைக் காண்பது “

No comments:

Post a Comment