Saturday 31 July 2021

தளபதி மு.க. ஸ்டாலின் குறித்து பேராசிரியர் க.அன்பழகன்

 தளபதி மு.க. ஸ்டாலின் குறித்து பேராசிரியர் க.அன்பழகன்


அன்பகம் இளைஞர் அணியிடம் தரப்படும் போது தளபதி ஸ்டாலின் அவர்களைப் பாராட்டிப்  க. அன்பழகனார் பேசியது


“ஸ்டாலின் கூட முதலில் இந்த இடத்தைக் கேட்ட போது, இதை நாங்கள் பயன்படுத்துவதற்குப் பொதுச் செயலாளர் அனுமதி அளித்திருக்கிறார் என்று குறிப்பிட்டார்.


பத்து இலட்சம் ரூபாய் நிதி கட்ட வேண்டும் என்று கலைஞர் கேட்டதற்கு மிக முக்கியமான காரணம் இளைஞரணியைச் சேர்ந்தவர்கள், தொழிலாளர் அணியோ அல்லது கழகத்தின் இன்னொரு அமைப்போ, அவர்களும் பத்து இலட்சம் தர வேண்டும் என்று சொன்ன காரணத்தினால் ஸ்டாலினாக இருந்தாலும், பாலுவாக இருந்தாலும், பேரவைத் தலைவராக இருந்தாலும், அத்துணைப் பேருக்கும் ஒரே இலக்கணம் தான் என்று, அந்த முறையில் தான் பத்து இலட்சம் தரவேண்டும் என்று கலைஞர் வலியுறுத்தினார்.


இளைஞரணிச் செயலாளர் ஸ்டாலின் இளைஞரணித் தோழர்களையெல்லாம் ஊக்கப்படுத்தி செயல்படுத்தி ஒரு ஆறுமாத காலத்திலே பத்து இலட்சம் ரூபாய் நிதி திரட்டுகின்ற அளவுக்கு செயலாற்றல் மிக்கவராக, இளைஞர் ஸ்டாலின் இருப்பதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன், பெருமை கொள்கிறேன். கலைஞருடைய அந்த ஆற்றல் ஸ்டாலினுடைய செயலிலே இன்றைய தினம் அரும்பி நிற்பதைப் பார்க்கிறேன். மணம் வீசி இருப்பதைப் பார்க்கிறேன். நான் மகிழ்ச்சி அடைகிறேன்!


யார் யாரோ தமிழ்நாட்டில் ஆட்சிப் பீடத்தில் அமர்வதற்கு அலைகிறார்கள். அந்த அவமானம் துடைப்பதற்கு எங்களால் கூட முடியாது. அந்த ஆற்றல் இளைஞர்களுக்கு வர வேண்டும். அந்த இளைஞர்கள் உயர்ந்த நோக்கத்தோடு நிமிர்ந்த நடை போடவேண்டும். 


நம்முடைய பாசறை வீரர்களாக இளைஞரணி தம்பிமார்கள் இங்கே 

நிமிர்ந்து நிற்பதைப்போல், கட்டுப்பாட்டோடு நின்றதைப் போல,

கண்ணியத்தைக் காப்பாற்றியதைப் போல, நாடெல்லாம் இளைஞர்கள் 

காப்பாற்ற வேண்டும் என்று ஆசைப்படுகின்ற எனக்குத் தமிழ்நாட்டைப் பற்றி எண்ணி, எண்ணி, பல நேரங்களில் வேதனை அடைந்திருக்கின்ற எனக்கோ, கலைஞருக்கோ, அடுத்த தலைமுறைக்கு ஸ்டாலினைப் போல் நூற்றுக்கணக்கானவர்கள் தயாராகிற அளவுக்கு ஒரு நல்ல சூழ்நிலையை, நல்ல நம்பிக்கையை அடுத்த தலைமுறைக்குப் பாதுகாப்பு ஏற்படுத்தக்கூடிய இளைஞர்கள் தி.மு.. இளைஞர் அணியிலே உருவாகிறார்கள் என்பதில் மகிழ்ச்சி, அந்த மகிழ்ச்சியோடு இந்த இனிய விழாவில் நான் பங்கேற்கிறேன்".

No comments:

Post a Comment