Friday 2 July 2021

மு க ஸ்டாலின், ஒரு சிறந்த நிர்வாகி என வரலாற்றில் அறியப்படத்தான் போகிறார் - முரளிக்கண்ணன்

 மு க ஸ்டாலின், ஒரு சிறந்த நிர்வாகி என வரலாற்றில் அறியப்படத்தான் போகிறார் - முரளிக்கண்ணன்



முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் இந்த பெருந்தொற்றை மக்கள் கடக்க மும்முனை நடவடிக்கைகளை மேற்கொண்டு உள்ளார். முதல் கட்டமாக ஆட்சிக்கு வருமுன்னர் (மே 7 க்கு முன்னர்) கோவிட் பெருந்தொற்று பாதித்து ஆபத்தான நிலையில் இருந்தவர்களுக்கு தமிழகம் முழுவதும் கூடுதல் படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டன. ஆக்ஸிஜன் கொண்டு வரும் முயற்சிகள் துவங்கின. மத்திய அரசு தொகுப்பு, வெளிநாட்டு இறக்குமதி, தமிழகத்தில் உற்பத்தி என என்னவெல்லாம் வழி இருக்கிறதோ அத்தனை வழிகளும் முயற்சிக்கப்பட்டன. வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டது. செவிலியர்கள் பணி நிரந்தரம் செய்யப்பட்டு ஊக்குவிக்கப்பட்டார்கள், சிறப்பு ஊதியம் மருத்துவர்களுக்கும் பணியாளர்களுக்கும் வழங்கப் பட்டது.

இரண்டாம் கட்டமாக தொற்று பரவலை கட்டுப்படுத்த லாக் டவுன் அறிவிக்கப்பட்டது. உதவித் தொகை ₹2000 வழங்கப்பட்டது.அம்மா உணவகங்கள் மூலம் சாப்பாடு, கோவில் அன்னதான திட்டம் மூலம்.சாப்பாடு என சாமானியர்கள் தங்கள் வாழ்வாதாரத்திற்கு வெளியே வருவது குறைக்கப்பட்டது. மேலும் பெரும்பாலான இடங்களுக்கு காய்கறி வண்டிகள் மூலம் அத்தியாவசிய தேவை பூர்த்தி செய்யப்பட்டது. சுகாதாரப் பணியாளர்கள் மூலம் வீட்டுக்கு வீடு நலம் கேட்கப்பட்டது.

மூன்றாவது கட்டம் தான் முக்கிய கட்டம், மூன்றாவது அலைக்கு முன் எல்லோரையும் தடுப்பூசி போட வைத்து விட வேண்டுமென்று. கையாலாகாத ஒன்றிய அரசை நம்பாமல் வெளிநாடுகளில் டெண்டர் கேட்கப்பட்டது. கிடைத்த மருந்தை கிராமங்கள் வரை பகிர்ந்தளித்து தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இன்று கூட நகராட்சி பணியாளர்கள் வீடுகளுக்கு வந்து அழைக்கிறார்கள்.

இப்படி கடந்தகால, நிகழ்கால, எதிர்காலம் என மூன்றுக்கும் யோசித்து செயலாற்றி வருகிறது தமிழக அரசு.

ஆனால் இதற்கெல்லாம் உதவ வேண்டிய ஒன்றிய அரசோ புது கல்விக் கொள்கையை அமல்படுத்துவேன், பாராளுமன்ற புது கட்டிடம், மாநிலத் தேர்தலில் வெல்ல மக்களை பலி கொடுப்பது, கேவலம் ஒரு நகராட்சி அளவு இடமான பாண்டிச்சேரி யில் அரசமைக்க குளறுபடிகள் என யார் எக்கேடு கெட்டால் எனக்கென்ன தன் அஜெண்டாவை நிறைவேற்றிக் கொள்வதிலேயே குறியாய் உள்ளது. தமிழக அரசு தன் முழு செயல் திறனில் செயல்பட விடாமல், தேவையான ஆஜ்ஸிஜன், நிதி கொடுக்காமல், புது கல்விக் கொள்கை அது இதுவென அலைக்கழிக்கிறது.

தகப்பன் சரியில்லாமல் மூத்த பையனின் சம்பாத்தியத்திக் தப்பிப் பிழைக்கும் குடும்பம் போல இப்போது தமிழ்நாடு இருக்கிறது. அது போக சித்தி கொடுமை போல காசுக்கு விலை போன ஊடகங்களும் தனி மனிதர்களும் குடைச்சல் கொடுக்கிறார்கள்.

இத்தனையும் தாண்டி மு க ஸ்டாலின், ஒரு சிறந்த நிர்வாகி என வரலாற்றில் அறியப்படத்தான் போகிறார்.

No comments:

Post a Comment