Tuesday 31 August 2021

இந்தியாவின் மூத்தகுடிகள் பூர்வகுடிகள் யார்? அவர்களின் மொழி என்ன? - சில்வர் பிளேஸ்

இந்தியாவின் மூத்தகுடிகள் பூர்வகுடிகள் யார்? அவர்களின் மொழி என்ன? - சில்வர் பிளேஸ்

தமிழர் திராவிடர் குறித்த மரபியல், தொல்லியல், மொழியியல் ஆராய்ச்சி முடிவுகள் என்ன சொல்கின்றன என்பது குறித்த அறிமுக தொகுப்பு 


ந்திய துனைக்கண்டத்தின் இந்தியாவின் மூத்தகுடிகள் யார் ? அவர்களின் மொழி என்ன ? ஆகிய கேள்விகளுக்கான விடைகளை நாம் பல வகைகளிலும் பெற முடியும்

ï வரலாறு (History)

ï தொல்லியல் (Archaelogy)

ï மொழியியல் (Linguistics)

ï மரபணுவியல் (Genetics)

மொழியியல், தொல்லியல், மரபணுவியல் போன்ற துறைகளிலும், இது தொடர்பான பிற துறைகளிலும் கடந்த 150 வருடங்களாக கால்டுவெல்லின் நூல், ஹராப்பா அகழ்வாராய்வு முதன் அன்மையில் கீழடி, நேச்சர் இதழின் கட்டுரை போல் பல நூறு ஆராய்ச்சிகள் நடந்துள்ளன.


இவை அனைத்தும் அறுதியிட்டு கூறும் செய்தி என்னவென்றால்

ï 3500 வருடம் முன்னர் இந்திய துனைக்கண்டத்தில் வசித்தவர்கள் பேசிய மொழி தமிழ்.

ï அந்த மொழியை மற்றவர்கள் திராவிடம் என்றும், அவர்களை திராவிடர்கள் என்று அழைத்தனர்.

ï ஆரியர்கள் பிற பகுதிகளில் இருந்து வந்தவர்கள். அவர்கள் பூர்வகுடியினர் அல்ல

இது குறித்து ஒரு சுருக்கமான அறிமுகத்தை இந்த நூல் அளிக்கிறது

இந்திய துனைக்கண்டத்தின் மூத்தகுடி யார் என்ற கேள்விக்கு விடையை நாம் பல வகைகளிலும் பெற முடியும்

1. வரலாறு (History)

2. தொல்லியல் (Archaelogy) 

3. மொழியியல் (Linguistics)

4. மரபணுவியல் (Genetics)  

இது குறித்து விரிவாக பேசுவதற்கு முன்னர் திராவிடர், தமிழர் ஆகிய சொற்களை வைத்து செய்யப்படும் குழப்பங்களை முதலில் தெளிவு படுத்திவிடுவோம். இது குறித்து முனைவர் கண்ணபிரான் ரவிசங்கள் அவர்கள் அறியப்படாத தமிழ் மொழி என்ற நூலில் (இந்த நூல் அமேசானில் https://amzn.to/2VtohF6  என்ற இணைப்பில் கிடைக்கிறது) கீழ்க்கண்டவாறு கூறுகிறார்.

_சேர/பாண்டிய கடல் வணிகம், கொடிகட்டிப் பறந்த காலத்தே.. தமிழ் என்று நம் சிறப்பு ‘ழ’ கரத்தை ஒலிக்கவியலாத, நம் நட்பு இனங்களால், தமிழுக்கு, இன்னொரு பெயரும் கிடைத்தது; அதுவே திராவிடம்! திராவிடம், சங்கத் தமிழில் இருக்குமா? = இருக்காது!_ 


_நமக்குத் தான் ‘ழ’கரம் நல்லா வருமே? நாம ஏன் திராவிடம் என்று சொல்லப் போறோம்?  ஆனால் உலக அரங்கின் தொன்மையான நூல்களில், திராவிடம் இருக்கும்! என்னவாக? திராவிடம் = தமிழாக இருக்கும்! அது தமிழையே குறிக்கும்!_ 


_இது உலகெங்கும் இருக்கும் வழக்கமே! சீனம் = நாம்; Zhōngguó = அவர்கள் யவனம் = நாம்; Ionian/ Graikoi (Greek)= அவர்கள் கடாரம் = நாம்; Kedah (Malaysia)= அவர்கள் சாவகம் = நாம்; Java (Indonesia)= அவர்கள் Farsi = நாம்; Parsa (Persian)= அவர்கள் போலவே.. திரமிடம்/திராவிடம் = அவர்கள்; தமிழம்/தமிழகம் = நாம்! ஜ்ஹோன் என்று நமக்கு வாயில் வரவில்லை; தமிழில் அதற்கு எழுத்தும் இல்லை; அதனால் சற்றே நெருக்கமான ஒலிப்பு = சீன்; சீனம்! இன்று China என்றே உலக அளவில் ஆகி விட்டது. அட, அவர்களே Peoples Republic of China என்று தான் புழங்குகிறார்கள். Zhōnghuá என்பதே ஆதி! சீன அரசு, இரண்டுமே People's Republic of China மற்றும் Zhōnghuá Rénmín Gònghéguó புழங்குகிறது._


வரலாறு

3500 வருடங்களுக்கு முன்னர் இந்திய துனைக்கண்டத்தின் ஆதிகுடி மக்கள் பேசிய மொழி தமிழ் அல்லது திராவிடம். அவர்கள் இனத்தால் தமிழர்கள் அல்லது திராவிடர்கள். அவர்கள் தான் மொகஞ்சதாரோ, ஹராப்பா போன்ற நகரங்களை நிர்மாணித்தவர்கள். ஆரிய வருகை / படையெடுப்பிற்கு பிறகு ஆரியர்கள் பிராமணர், சத்திரியர், வைசியர் என்றும் திராவிடர்கள் சூத்திரர்கள், அட்டவனை மக்கள், பழங்குடியினர் என்றும் பிரிந்துவிட்டார்கள். பிறகு திராவிடமும் ஆரியர்களின் மொழியும் சேர்ந்து பல மொழிகள் உருவாகின. திராவிட மொழி தமிழ் மொழியாக நிலைத்து நின்றது. 


மொழியியல்

இது குறித்து முதலில் மொழியியல் ரீதியாக எழுதியவர் ராபர்ட் கால்டுவெல். திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் - தென்னிந்தியாவில் பரந்துள்ள பல்வேறு மொழிகள் தொடர்பான ஒரு ஒப்பீட்டு ஆய்வு (A Comparative Grammar of the Dravidian or South-Indian Family of Languages) என்ற 1856ல் வெளிவந்த நூலில்


_திராவிட மொழிகளின் மிகப் பழைய அமைப்பு முறை அவற்றின் தனிச் சிறப்பு ஆகியவை பற்றி முழு விளக்கங்களையும் பெறுவதற்கான ஆராய்ச்சிக்குத் துணை புரியும் நம்பிக்கையில் அவ்வினப் பல்வேறு மொழிகளின் இலக்கண விதிகளையும் அமைப்பு முறைகளையும் ஆராய்வதும், ஒன்றோடொன்று ஒப்பு நோக்குவதுமே இந் நூலின் நோக்கமாம்._


_.......திராவிட மொழிகளுக்குள்ளே மிகப் பழைய காலத்திலேயே திருந்திய நிலை பெற்றதும், நனி மிக நாகரிகம் உடையதாக ஆக்கப் பெற்றதும், பல வகையில் அவ்வின மொழிகளின் பிரதிநிதியாக விளங்குவதுமாகிய தமிழ் மொழியின் அமைப்பு முறை பற்றிய விளக்கங்களைப் பெரும் அளவில் தருவதே இந்நூலாசிரியரின் இடைவிடாச் சிறப்பு நோக்கமாம்._


தமிழ் மற்றும் ஏனைய திராவிட மொழிகள் உட்பட்ட எல்லா இந்திய மொழிகளுக்கும் தாய் சமஸ்கிருதமே எனப் பலரும் நம்பியிருந்த ஒரு கால கட்டத்தில், அதனை மறுத்துத் திராவிட மொழிகளின் தொன்மையையும், சிறப்பையும் தகுந்த சான்றுகளுடன் நிறுவி அவற்றுக்குரிய தனிப் பெருமையை உலகுக்கு உணர்த்திய பெருமையும் இந்நூலைச் சாரும். தமிழ், சமஸ்கிருதத்துக்குப் புறம்பான தனியான ஒரு மொழிக் குடும்பம் என்பது மட்டுமன்றி இம் மொழிகளிலிருந்து சமஸ்கிருதமும், பிற இந்திய-ஆரிய மொழிகள் பலவும் கூட சொற்களைக் கடன் வாங்கியுள்ளன என்றும் இந் நூல் எடுத்துக் காட்டுகின்றது.


அதன் பிறகு மொழியியல் ரீதியாக பல ஆராய்ச்சி முடிவுகள் இந்த கூற்றிற்கு வலு சேர்த்தன. 


தமிழர்கள் / திராவிடர்கள் தான் இந்தியாவின் மூத்த குடிகள். 3500 வருடங்களுக்கு முன்னர் இந்திய முழுவதும் பேசப்பட்ட மொழி தமிழ் / திராவிடம் என்பதற்கு 19ஆம் நூற்றாண்டின் இறுதியில்

தொல்லியல்

19ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் ஹராப்பா, மொகஞ்சதாரோ ஆகிய  இடங்களில் தொல்லியல் ரீதியாக செய்யப்பட்ட ஆராய்ச்சி என்பது இந்த கூற்றிற்கு வலு சேர்த்தது. அதன்பிறகு வந்த ஆராய்ச்சிகளில் தொல்லியல் ரீதியாகவும் திராவிட பாரம்பரியம் என்பது நிறுபிக்கப்பட்டுக்கொண்டே வந்தது. எனவே, தமிழர்கள் / திராவிடர்கள் தான் இந்தியாவின் மூத்த குடிகள். 3500 வருடங்களுக்கு முன்னர் இந்திய முழுவதும் பேசப்பட்ட மொழி தமிழ் / திராவிடம் என்பதற்கு  19ஆம் நூற்றாண்டின் நடுவில்

மரபணுவியல்

1953ல் வாட்சனும் கிரிக்கும் சேர்ந்து மரபணுக்களின் வடிவத்தை கண்டு பிடித்த பிறகு மரபணு ரீதியான சான்றுகள் வரத்துவங்கின. இவை அனைத்தின் முடிவுகளும் இன்று  இணையத்தில் உள்ளன 


அவற்றில் முக்கியமான சில ஆராச்சி முடிவுகளின் சுட்டியை மட்டும் அளித்துள்ளேன் 

1. Reconstructing Indian Population History https://www.ncbi.nlm.nih.gov/pmc/articles/PMC2842210/ 

2. Genetic Evidence for Recent Population Mixture in India https://www.ncbi.nlm.nih.gov/pmc/articles/PMC3769933/ 

3. The Genomic Formation of South and Central Asia https://www.biorxiv.org/content/biorxiv/early/2018/03/31/292581.full.pdf  


நா.நந்திவர்மனின் IS INDUS VALLEY THE CRADLE OR CATACOMB OF THE DRAVIDIAN CIVILIZATION? (https://academia.edu/resource/work/7381505) என்ற கட்டுரை இது குறித்து விரிவாக அலசுகிறது. இது போன்ற கட்டுரைகளை தொகுத்து ஆங்கில விக்கிபிடியாவில் https://en.wikipedia.org/wiki/Genetics_and_archaeogenetics_of_South_Asia என்று ஒரு கட்டுரையும் உள்ளது. 

 


ஆராய்ச்சி கட்டுரை எல்லாம் படிக்க முடியாது. ஏதாவது நூல் உள்ளதா என்று கேட்பவர்கள் டோனி ஜோசப் எழுதிய Early Indians: The Story of Our Ancestors and Where We Came From  என்ற நூலை வாசிக்கலாம். இந்த நூலும் அமேசனில் உள்ளது https://amzn.to/3jm6OGR 


மரபணுவியல் ஆராய்ச்சிகள் சொல்வது என்ன

1. இந்திய மக்களில் இரு பெரும்பாண்மையான மரபணுக்கள் உள்ளன. அவற்றை பழங்கால வட இந்திய மரபணுக்கக்கள் AncestralNorth Indian (ANI) Genes மற்றும் பழங்கால தென்னிந்திய மரபணுக்கள் Ancestral South Indian (ASI) Genes என்று பிரித்துள்ளனர்  

2. பெரும்பாலானவர்களில் செல்லில் இந்த இருவகை மரபணுக்களுமே உள்ளன. ஆனால் எந்த மரபணு எவ்வளவு சதவீதம் என்பது நபருக்கு நபர் மாறுபடுகிறது 

3. ஒரு பகுதியை சேர்ந்த நபர்களில் இந்த சதவீதம் ஒன்று போல் உள்ளது

4. வட இந்தியாவில் வசிப்பவர்களிடம் வட இந்திய மரபணுக்கக்கள் Ancestral North Indian (ANI) Gene அதிகம் உள்ளன. தென் இந்தியாவில் வசிப்பவர்களிடம் தென்னிந்திய மரபணுக்கள் Ancestral South Indian (ASI) Gene அதிகம் உள்ளன 

5. ஒரு ஜாதியை சேர்ந்த நபர்களில் இந்த சதவீதம் ஒன்று போல் உள்ளது

6. சில ஜாதிகளில் வட இந்திய மரபணுக்கக்கள் Ancestral North Indian (ANI) Gene அதிகம் உள்ளன. சில ஜாதிகளில் தென்னிந்திய மரபணுக்கள் Ancestral South Indian (ASI) Gene அதிகம் உள்ளன 

7. அந்தமான் தீவுகளில் வசிக்கும் பழங்குடியினரில்  தென்னிந்திய மரபணுக்கள் மட்டுமே உள்ளன. பிற பழங்குடியினரிடம் தென்னிந்திய மரபணுக்கள் மிக அதிகமாகவும் ஒரு சில வட இந்திய மரபணுக்கக்களும் உள்ளன. பட்டியலின மக்களிடம் அதை விட மேலும் வட இந்திய சில மரபணுக்கள் உள்ளன. சூத்திரர்களில் வட இந்திய மரபணுக்களின் விகிதம் மேலும் அதிகரிக்கிறது. 

8. காஷ்மீர் பிராமணர்களிடம் மிக அதிக அளவு வட இந்திய மரபணுக்கள் உள்ளன. பிற பிராமணர்களிடம் ஒரு சில தென்னிந்திய மரபணுக்கள் உள்ளன. சத்திரியர், வைசியர் ஆகிய பிரிவுகள் தென் இந்திய மரபணுக்கள் படிப்படியாக அதிகரிக்கின்றன

9. கிமு 7000 ஆண்டுகளுக்கும் முன்னர் இந்திய துணைக்கண்டத்தில் இரு குழுக்கள்– மூத்த குடி இந்தியர்கள் பெரும்பாலும் மற்றும் கிழக்கு ஈரானிய விவசாயிகள் மேற்கு பகுதியிலும் - வசித்து வந்தனர். 

10. கிமு 7000 ஆண்டுவாக்கில் சைபியராவில் இருந்து சிலர் வந்து சேர்ந்தனர். அவர்கள் கிழக்கு ஈரானியர்களுடம் சேர்ந்து வாழத்துவங்கினார்கள். கிமு 5000 வாக்கில் சைபிரியாவில் இருந்து வந்தவர்கள் கிழக்கு ஈரானியர்களுடன் முழுவதும் கலந்து விட்டார்கள்

11. மூத்தக்குடி தென் இந்தியர்களும், கிழக்கு ஈரானியர்களும் சேர்ந்து கிமு 5000 – கிமு 2000வரை சிந்து நாகரிகத்தை உருவாக்கினார்கள். இந்த நேரம் பிற பகுதிகளில் எல்லாம் மூத்தக்குடி தென் இந்தியர்கள் மட்டும் வசித்து வந்தார்கள்

12. கிமு 2000 வருடம் ஐரோப்பிய ஸ்டெப்பி பகுதியில் இருந்து ஆரியர்கள் வந்தார்கள். சிந்து வெளி நாகரிகம் அழிந்தது. திராவிடர்களில் சிலர் மலைகளுக்கும் காடுகளுக்கும் சென்றார்கள். அவர்கள் பழங்குடியினரானார்கள். அவர்களுக்கும் பிற மக்களுக்குமான தொடர்பு மிகக்குறைவே. இந்த நேரம் பிற பகுதிகளில் எல்லாம் மூத்தக்குடி தென் இந்தியர்கள் மட்டும் வசித்து வந்தார்கள்

13. கிமு 2000 முதல் கிமு 200 வரை கங்கைவெளியில் வசித்த ஆரியர்கள் தங்களை (பிராமணர்கள், ஷத்திரியர்கள், வைசியர்கள் என்று) மூன்றாக பிரித்துக்கொண்டார்கள்.

14. கிமு 200க்கு பிற பிராமணர்களின் நேரடி ஆட்சியில் சாதி மேலும் வலுவாகியது. நாட்டினுள் உள்ள திராவிடர்கள் இரண்டாக பிரிக்கப்பட்டார்கள். ஊருக்குள் இருந்தவர்கள் சூத்திரர்களாகவும், ஊருக்கு வெளியில் அனுப்பப்பட்டவர்கள் பஞ்சமர்களாகவும் ஆனார்கள். இது கங்கை வெளியில் அதிகம் நடந்தது. பிற பகுதிகளில்  மூத்தக்குடி தென் இந்தியர்கள் வசித்தனர்.

15. கிமு 200 முதல் கிபி 1000 வரையில் அனைத்து பிரிவினருக்கும் இடையில் கலப்பு ஏற்பட்டது. இந்த காலகட்டத்தில் வட இந்தியாவில் சாதி வலுப்பெற்றது.  பிற பகுதிகளில், குறிப்பாக விந்திய மலைக்கு தெற்கே  மூத்தக்குடி தென் இந்தியர்கள் வசித்தனர். 

16. பார்ப்பனர்கள் சிலர் மட்டும் விந்திய மலைக்கு தெற்கே வரத்துவங்கினர். ஷத்திரியர்களும் சூத்திரர்களும் வரவில்லை. கிபி 6ஆம் நூற்றாண்டில்  மெதுவாக ஆரம்பித்த இந்த ஆரிய பார்ப்பனர்களின் வருகை கிபி 10ஆம் நூற்றாண்டிற்கு பிறகு அதிகரித்தது. 

17. ஆரியர்களின் வட இந்திய மரபணுக்கள் வட இந்தியாவில் பார்ப்பனர்கள், ஷத்திரியர்கள், வைசியர்கள் ஆகிய மூன்று பிரிவினரிடமும் உள்ளன. ஆனால் தென் இந்தியாவில் அது பார்ப்பனர்களிடம் மட்டுமே உள்ளது. தென் இந்தியாவின் வணிக குடிகளும், தென் இந்தியாவின் போர் குடிகளும் இந்த மூத்தக்குடி மரபணுக்களையே பெரும்பாலும் பெற்றுள்ளன. 

18. ஆரிய பார்ப்பனர்களின் வருகைக்கு பிறகு தென் இந்தியாவிலும் சாதி வலுப்பெற்றது. இந்த நிலையே கிபி 20ஆம் நூற்றாண்டு வரை தொடர்ந்தது. பஞ்சமர்கள் அட்டவனை பிரிவினர் / தலித் / ஹரிஜன் என்றும் சூத்திரர்கள் பிற்படுத்தப்பட்டவர்கள், மிகவும் பிற்படுத்தப்பட்டவர்கள் என்றும் அழைக்கப்பட்டனர்  


 எனவே, மரபணுக்களின் ஆராய்ச்சி மூலம் 

1. ஆரியர்கள் (வட இந்திய மரபணுக்கள் அதிகம் உள்ளவர்கள்) மற்றும் திராவிடர்கள் (சில தென்னிந்திய மரபணுக்கள் அதிகம் உள்ளவர்கள்) என்று இரு பிரிவினர் இருப்பதும். இந்த மரபணுக்களின் விகிதம் சாதிய படிமானத்தின் படி (ஆரியர்களிடம் அதிகம் வட இந்திய மரபணுக்க) உள்ளது என்பதும் 

2. வட இந்தியாவில் வசிக்கும் பிரிவினரிடம் வட இந்திய மரபணுக்கள் அதிகம் உள்ளதும், தென் இந்தியாவில் வசிக்கும் பிரிவினரிடம் தென் இந்திய மரபணுக்கள் அதிகம் உள்ளதும்

மீண்டும் மீண்டும் நிருபிக்கப்பட்டு விட்டது. வட இந்திய மரபணுக்களை வ..ம என்றும் தென் இந்திய மரபணுக்களை தெ..ம என்றும் குறிப்பிட்டு ஒரு அட்டவனையை எழுதினால் இப்படித்தான் இருக்கும் 

மரபணுக்கள் அடிப்படையில்

1. வட இந்திய பார்ப்பனர்கள், வட இந்திய ராஜ்புத்திரர்கள், வட இந்திய பணியாக்கள், தென் இந்திய பார்ப்பனர்கள் ஆகியோர் ஆரியர்கள்

2. வட இந்திய சூத்திரர்கள், வட இந்திய பஞ்சமர்கள், வட இந்திய பழங்குடியினர்கள், தென் இந்தியாவில் பார்ப்பனர்களை தவிர மீதி அத்தனை பேரும் திராவிடர்கள்  

என்ற முடிவு தெளிவாக உள்ளது. 


இதில் இனத்தால் திராவிடர்களாக இருக்கும் பலரும் இன்று வேறு மொழிகள் பேசினாலும், 2500 வருடங்களுக்கு முன்னர் அவர்கள் அனைவரும் பேசிய மொழி தமிழ்தான். அந்த மொழி தான் திராவிடம் என்று அழைக்கப்பட்டது


தமிழர்கள் / திராவிடர்கள் தான் இந்தியாவின் மூத்த குடிகள். 3500 வருடங்களுக்கு முன்னர் இந்திய முழுவதும் பேசப்பட்ட மொழி தமிழ் / திராவிடம் என்பதற்கு 21ஆம் நூற்றாண்டின்  ஆரம்பத்தில்
ஆனால் தொல்லியல் ரீதியாக ஒரு காலியிடமும், மொழியியல் ரீதியாக ஒரு காலியிடமும் இருந்தன. 

1. இந்தியா முழுவதும் திராவிடர்கள் வாழ்ந்திருந்தால் வட இந்தியாவில் இருக்கும் ஹாராப்பா, மொகஞ்சதாரா போல் தென் இந்தியாவில் ஏன் இல்லை என்ற கேள்வி 

2. ஒரு காலத்தில் இந்திய துனைக்கண்டம் முழுவதும்  தமிழ் பேசப்பட்டிருந்தால், அதன் எச்சங்கள் இன்று பிற மொழிகளில் உள்ளனவா ?  என்ற கேள்வியும்

இருந்தன


இதில் முதல் கேள்விக்கு விடை கூறுவது தான் கீழடி போன்ற இடங்களில் நடைபெறும் அகழ்வாராய்ச்சி. கீழடி போன்ற இடங்களில் நடைபெரும் அகழ்வாராய்ச்சியின் முடிவுகள் மூலம் ஹாராப்பா முதல் குமரி வரை ஆண்டவர்கள் தமிழர்கள் / திராவிடர்கள். அவர்கள் பேசியது தமிழ் / திராவிடம் என்று தெளிவாக தெரியவருகிறது. இந்நிலையில் தமிழர்கள் / திராவிடர்கள் தான் இந்தியாவின் மூத்த குடிகள். 3500 வருடங்களுக்கு முன்னர் இந்திய முழுவதும் பேசப்பட்ட மொழி தமிழ் / திராவிடம் என்பதற்கு கிழடி ஆகழ்வாராய்ச்சியில் தெளிவான ஆதாரங்கள் கிடைத்ததை அடுத்து 
ஆக, எஞ்சிருந்தது ஒரு காலத்தில் இந்திய துனைக்கண்டம் முழுவதும்  தமிழ் பேசப்பட்டிருந்தால், அதன் எச்சங்கள் இன்று பிற மொழிகளில் உள்ளனவா ?  என்ற ஒரு கேள்வி மட்டும்தான். இந்த கேள்விக்கும் இந்த வாரம் தெளிவான  விடை கிடைத்துள்ளது. 


நேச்சர் (Nature) என்பது 1869 ஆம் ஆண்டு நவம்பர் 4 ஆம் நாள் தொடங்கி இன்றும் தொடர்ந்து ஆங்கில மொழியில் இங்கிலாந்திலிருந்து வெளிவந்து கொண்டிருக்கும் உயர்தரமான ஓர் அறிவியல் ஆய்விதழ் ஆகும். உலகின் மிக உயர்ந்த உள்ளொழுக்கமுள்ள அறிவியல் ஆய்விதழ்களில் ஒன்றாக இது பார்க்கப்படுகிறது. இந்த இதழில் 2021 ஆகஸ்ட் மூன்றாம் நாள் பகதா அன்சுமலி முக்கோபத்யாய் (Bahata Ansumali Mukhopadhyay) அவர்கள் எழுதிய சிந்து நாகரிகத்தில் பாரம்பரிய திராவிட மொழிகள் : திராவிட மொழியின் “பல்” வார்த்தை ஆழமான மொழியியல் பாரம்பரியத்தை வெளிபடுத்தி மரபியல் ஆய்வுமுடிவுகளுக்கு வலு சேர்க்கிறது (Ancestral Dravidian languages in Indus Civilization: ultraconserved Dravidian tooth-word reveals deep linguistic ancestry and supports genetics) என்ற கட்டுரை இடம்பெற்றுள்ளது


சிந்து நாகரிகம் கண்டிபிடிக்கப்பட்டதில் இருந்து அந்த மக்களில் மொழியியல் அடையாளங்கள் குறித்த விவாதங்கள் நடைபெற்றே வந்துள்ளன. சிந்து சமவெளி நாகரிகம் / சிந்து நதி பள்ளத்தாக்கு நாகரிகம் / சிந்துவெளி நாகரிகம் என்று பல பெயரில் குறிப்பிட்டப்பட்டாலும் சிந்து நாகரிகம் என்பது அனைத்தையும் (பள்ளத்தாக்கு மற்றும் சமவெளி) உள்ளடக்கும் என்பதால் அந்த பெயரை பயன்படுத்துவோம்

இந்த நிலையில் பகதா அன்சுமலி முக்கோபத்யாயின் ஆராய்ச்சி (1) தொல்லியல் (archaeological), (2) மொழியியல் (linguistic), (3) தொல்மரபியல் archaeogenetic மற்றும் (4) சரித்திர (historical) ஆதாரங்களை முன்னிருத்தி கீழ்க்கண்ட கருத்துக்களை நிருபிக்கின்றது 

1. வெண்கல யுக மெசப்போட்டோமியாவில் யானையை குறிக்க பயன்படுத்தப்பட்ட “பிரி”, “பிரு” போன்ற சொற்களும், கிமு 1400ல் அமர்னா கடிதங்களில் யானயை குறிக்க ஹூரியனில் பயன்படுத்தப்பட்ட சொல், கிமு ஆறாம் நூற்றாண்டு பாராசீக சான்றுகளில் உள்ள யானைத்தந்தத்தை குறிக்கும் “பிரஸ்” என்ற சொல் ஆகியவை சிந்து நாகரிகத்தில் பயன்படுத்தப்பட்ட பாரம்பரிய திராவிட மொழியின் “பிளு” என்ற யானையை குறிக்கும் சொல்லில் இருந்து பெறப்பட்டவை 

2. இந்த ”பிளு” என்ற வேர்ச்சொல்லானது பாரம்பரிய திராவிட மொழியின் “பல்” மற்றும் அதன் வடிவங்களான “பில்”, “பீல்”, “பெல்” ஆகியவற்றுடன் தொடர்புடையது 

3. ”பிரிப்பது” “நசுக்குவது” என்று பொருள்தரும் “பில்”, “பீல்” என்ற பாரம்பரிய திராவிட மொழியின் வேர்ச்சொற்கள், பல், தந்தம் ஆகிய சொற்களுடன் சொற்பொருளியல் ரீதியாக தொடர்புடையவை

4. சிந்துவெளியில் பரவலாக காணப்படும் Salvadora persica  என்று அழைக்கப்படும் பல்துலக்கி மரத்தின் (toothbrush tree ) வேர்களும் சிறுகிளைகளும் (twigs ) பல்தூரிகையாக / பல்தூரியாக ஆதிகாலம் தொட்டே இந்த பகுதிகளில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த மரத்தின் மிக பொதுவான மற்றும் பாரம்பரியமான தாவரப்பெயர் “பிலு”, “பீலு” என்பதாகவே உள்ளது

5. இந்த “பீலு” என்ற தாவரப்பெயர்  பல்லிற்கான பாரம்பரிய திராவிட சொல்லில் இருந்து வந்திருக்கிறது. மேலும் சிந்து வெளி மக்கள் பல்துலக்கி மரத்திற்கும், யானைக்கும் பல்லை குறிக்கும் சொல்லையை பயன்படுத்தியுள்ளார்கள். மேலும் இந்த சொற்கள் சிந்துவெளிபகுதிமுழுவதும் பரவலாக பயன்படுத்தப்பட்டு வந்துள்ளன. எனவே சிந்துவெளியில் இருந்த பெரும்பாலான மக்கள் இந்த சொல்லை தங்களது அன்றாற வாழ்க்கையின் பயன்படுத்தியிருக்கவேண்டும். 

6. “பல்” என்பது பேசும் குழுவின் அடிப்படையான, கடன்வாங்கமுடியாத,  மிகுபழமையான சொற்குவியலில் ஒன்று என்பதால் (‘tooth’ belongs to the core non-borrowable ultraconserved vocabulary of a speech community) சிந்து வெளிமக்களில் பெரும்பாண்மையானவர்கள் ஒரு பாரம்பரிய திராவிட மொழியையே பேசியிருக்கவேண்டும் 

7. சமீப காலங்களில் கீழடி போன்ற இடங்களில் நடக்கும் அகழ்வாராய்ச்சிகளும் இந்த மொழியியல் சான்றுகளுக்கு வலு சேர்க்கின்றன

இந்த முழு கட்டுரையையும் இணையத்தில் https://www.nature.com/articles/s41599-021-00868-w  என்ற சுட்டியில் வாசிக்கலாம் 


ஹாராப்பா முதல் குமரி வரை ஆண்டவர்கள் தமிழர்கள் / திராவிடர்கள். அவர்கள் பேசியது தமிழ் / திராவிடம் என்று தெளிவாக தெரியவருகிறது. இந்நிலையில் தமிழர்கள் / திராவிடர்கள் தான் இந்தியாவின் மூத்த குடிகள். 3500 வருடங்களுக்கு முன்னர் இந்திய முழுவதும் பேசப்பட்ட மொழி தமிழ் / திராவிடம் என்பதற்கு  தற்சமயம்

ï மொழியல் ரீதியாக – முழு ஆதாரம் கிடைத்துள்ளது

ï தொல்லியல் ரீதியாக – முழு ஆதாரம் கிடைத்துள்ளது

ï மரபணுவியல் ரீதியாக – முழு ஆதாரம் கிடைத்துள்ளது


எனவே இந்த ஆராய்ச்சி மூலம் 3500 வருடம் முன்னரே திராவிடம் தான் தமிழ் என்றும் திராவிடர்கள் தான் தமிழர்கள் என்றும் அவர்கள் தான் இந்திய துனைக்கண்டத்தின் மூத்தக்குடி என்றும், ஆரியர்கள் வருகை தந்தவரகள் என்றும் மரபணுவியல் ரீதியாக, தொல்லியல் ரீதியாக, மொழியியல் ரீதியாக    சந்தேகத்திற்கு இடமின்றி நிருபிக்கப்பட்டுள்ளது 
மேலும் சில கேள்விகள் 

1. கங்கை கொண்ட சோழன் என்று பெயர் உள்ளது. கலிங்கத்துப்பரணி உள்ளது. ஆனால் இந்திய துணைக்கண்டத்தின் பிற பகுதிகள் குறித்து அவ்வளவு செய்திகள் இல்லையே, ஏன் ? 

விடை தெரியவேண்டுமென்றால் இந்த படத்தை பார்க்கவும். இது இந்திய துணைக்கண்டத்தின் முப்பரிமாண வரைபடம் இந்திய துணைக்கண்டத்தின் பெரும்பகுதி தக்கான் பீட பூமியாகவே உள்ளது. சமவெளிகள் என்பது தமிழகம், கலிங்கம், சிந்து சம்வெளி, கங்கை சமவெளி தான். எனவே ஆதிகால சமவெளி விவசாய நாகரிங்கள் இங்கு தான் தோன்றியுள்ளன.  இது குறித்து மேலும் விரிவாக அறிய ஜாரெத் டையமண்ட் எழுதிய  Guns, Germs And Steel (அமேசனில் வாங்க:  https://amzn.to/3yAkG6Z ) என்ற நூலை வாசிக்கலாம் 

2. இந்த கருத்தை பிறர் ஏற்றுக்கொள்கிறார்களா ? 

மெதுவாக ஏற்றுக்கொள்வார்கள். 

*****

இந்த நூலின் நிறைகளை மற்றவர்களிடம் தெரிவியுங்கள்

குறைகளை writer.silver.blaze@gmail.com மின்னஞ்சலில் தெரிவியுங்கள்

நடராசனும் தாளமுத்துவும் - விக்கிபீடியாவில் இருந்து சில தகவல்கள்

https://ta.wikipedia.org/s/3wyy

அப்போதைய சென்னை மாகாணத்தின் முதலமைச்சரான இராசாசி பள்ளிகளில் இந்தியை கட்டாய பாடமாக ஆக்குவதாக 1938. ஏப்ரல் 21 அன்று அறிவித்ததை எதிர்த்து, 1938-39இல் நடந்த இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டக் காலத்தில் மரணமடைந்த இருவர் மொழிப்போர் தியாகிகள் என போராட்டக்காரர்களால் போற்றப்பட்டனர். அவர்களது மரணம் போராட்டத்திற்கு மேலும் வலுசேர்த்தது. நடராசன் என்ற இளைஞர் திசம்பர் 5, 1938 அன்று கைது செய்யப்பட்டார். அவர் 30 திசம்பர், 1938 அன்று மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு 15 சனவரி 1939 அன்று மரணமடைந்தார். 13 பிப்ரவரி 1939 அன்று தாளமுத்து நாடார் என்பவர் இந்து தியோசாபிகல் உயர்நிலைப்பள்ளியருகே மறியல் செய்ததாகப் பிறருடன் கைது செய்யப்பட்டார். அவரும் காவலில் இருக்கும்போது நோய்வாய்ப்பட்டு 6 மார்ச் அன்று மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு 11 மார்ச் அன்று மரணமடைந்தார். அவரது இறப்பிற்கு அவரது உடல்நிலைக்குறைவும் கடும் வயிற்றுப்போக்குமே காரணம் என்று அரசு கூறியது. சட்டமன்றத்தில் இவ்விறப்புக்கள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டபோது இராசாசி அவற்றை மிகவும் சாதாரணமாக எடுத்துக்கொண்டு மறுத்தார். இத்தகைய அரசின் போக்கு போராட்டக்காரர்களை மேலும் கோபமுறச் செய்தது. சென்னையில் நடந்த அவர்களது இறுதிச்சடங்குகளில் ஆயிரக்கணக்கானவர்கள் பங்கேற்றனர்; அரசுக்கெதிரான ஆவேசப்பேச்சுகள் நடந்தேறின. இவ்விருவரையும் விடுவிக்க முன்னரே அரசு இணங்கியபோதும் இந்தித் திணிப்பு எதிர்ப்பைக் கைவிட்டுவிடவேண்டுமென்ற அரசின் நிபந்தனைகளுக்கு உட்பட மறுத்ததால் சிறையில் அடைபட்டிருந்தனர்.No comments:

Post a Comment