Sunday 31 October 2021

டி.என். சேஷன் - கார்த்திக் ராமசாமி

 டி.என். சேஷன் - கார்த்திக் ராமசாமி


வன் திருச்சி வந்து சரியாக ஒரு வருடம் முடிந்துவிட்டிருந்தது. ஒன்றிரண்டு நாட்கள் கூடக்குறைய ஆகியிருக்கலாம். சென்ற வருட ஜூலை மாதத்திலிருந்து ஹாஸ்டல் வாழ்க்கை,  பதினொன்றாம் வகுப்பிற்காக.  பத்தாம் வகுப்பு வரை ஊரில் இருந்த அரசினர் மேல்நிலைப்பள்ளி. எந்தத் தெருவில் யாரைக் கேட்டாலும் அவனைப் பற்றிச் சொல்வார்கள் “வாத்தியார் புள்ளையா? நல்ல புள்ளையாச்சே. இருக்கிற இடம் தெரியாது. படிப்பிலும் கெட்டி”


ஊரில் அவன் வயதை ஒத்தவர்களுக்கு யாராவது அறிவுரை கூற நேர்ந்தால் அதில் அவனைப் பற்றிய உதாரணம் கண்டிப்பாக இருக்கும், “வாத்தியார் புள்ளைய பாரு”


பத்தாம் வகுப்பில் எதிர்பார்த்த படியே பள்ளியில் முதலிடம். முதல் மதிப்பெண்ணிற்கும் இரண்டாம் மதிப்பெண்ணிற்கும் இடையே கிரிக்கெட் மைதானம் அளவு அகண்ட இடைவெளி இருந்தது.  அந்த அரசினர் மேல்நிலைப் பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு இருந்தாலும், “நல்லா படிக்கிற புள்ளையை டவுன்ல கொண்டு போய் விடலாம்ல?” எனும் பேச்சு  தந்ததையை அழுத்தியதன் விளைவு திருச்சியில் பிஷப் ஹீப்பர் பள்ளியில் ஹாஸ்டல் வாழ்க்கை. 


அங்கு பதினென்றாம் வகுப்பு என்பது உப்புக்குச் சப்பு. ஆசிரியர்களின் கவனம் முழுவதும் பனிரெண்டாம் வகுப்பு மாணவர்கள் மீதே இருக்கும். அவனுக்கு வாழ்க்கை இனிதே சென்றது. விடுதி மதில் சுவர் ஓட்டை வழியாக இராத்திரி பரோட்டா கடையில் உணவு. . சீருடையை மாற்றிவிட்டு சுவர் ஏறிக் குதித்தான்ன்றால் அவனையும் அவன் நண்பர்களையும் மாரீஸ் தியேட்டரில் பார்க்கலாம். 


ஒரு வருடம் சென்றதே தெரியவில்லை, பனிரெண்டாம் வகுப்பு மாணவர்கள் தேர்வு முடித்து வெளியேற, இவர்கள் மீது வெளிச்சம் வீசப்பட்டது. நண்பர்களில் பலரும் மருத்துவப் படிப்பை குறிவைத்ததால் போட்டி போட்டு படிக்க ஆரம்பித்தனர். மாரீஸ் இருக்கும் திசை மறந்து போனது. பரோட்டா அண்ணனோ அடுத்த செட் பதினொன்றாம் வகுப்பு மாணவர்களை எதிர்பார்த்து காத்திருக்க ஆரம்பித்தார். 


பொதுவாக எந்தப்பாடத்தையும் எளிதில் படித்துவிடும் அவனுக்கு, பனிரெண்டாம் வகுப்பு பாடங்கள் பெரிய சிரமமாக இருக்கவில்லை. இருந்தாலும் வழக்கத்தை விட அதிகமான உழைப்பைச் செலுத்த வேண்டியிருந்தது.  மருத்துவம், பொறியியல் என ஒவ்வொரு திசையில் ஓடிக்கொண்டிருந்த பலரும் புரியாத இயற்பியல் கணக்கீடுகளையும் வேதியியல் கரிமங்களையும் நினைத்து பயந்த போது அவன் பயம் வேறு மாதிரி இருந்தது. பனிரெண்டாம் வகுப்பில் யாரும் அலட்டிக் கொள்ளாத ஆங்கிலம் அவனுக்கு சுமையாக அமைந்தது. அதற்குக் காரணம் கிருஷ்ணமாச்சாரி. தார்ப்பாய்ச்சிக் கட்டிய வேட்டி, நடு நெற்றியில் நாமம், வளைந்த குடைக் காதுகள், துருத்தி நிற்கும் கூர்மையான மூக்கு. அவனைக் கண்டாலே அவருக்கு ஆகாது. ஏதேனும் பிரச்சனை என்றால் முன்னின்று பேசும் வழக்கம் கிராமத்தில் இருந்து இங்கும் அவனுடன் தொற்றிக் கொண்டு வந்துவிட்டது. அப்படி இரண்டொரு முறை நடந்த சம்பவங்களின் போது தூரத்தில் இருந்து அவர் அவனை முறைத்துக் கொண்டிருந்ததை அவன் அப்போது பெரிதாக எடுக்கவில்லை. அதுநாள் வரை ஶ்ரீரங்கத்து மாணவர்கள் முதலிடங்களை, முதல் மரியாதையைப் பெற்று வந்த பள்ளியில் சிறு கிராமத்தில் இருந்து வந்து விடுதியில் தங்கிப் படிக்கும் மாணவன் தட்டிப் பறித்ததை சில ஆசிரியர்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அதில் கிருஷ்ணமாச்சாரியாருக்கு முதல் இடம். 


பனிரெண்டாம் வகுப்பின் முதல் பருவத் தேர்வு நடந்து முடிந்தது. தேர்வு100 மதிப்பெண்களுக்குத்தான் என்றாலும் இந்தத் தேர்வின் அடிப்படையில்தான் ஆசிரியர்கள் மாணவர்களை எடை போடுவார்கள், இந்த மாடு எந்த அளவு வண்டி இழுக்கும் என. இதனால் அவர்கள் அனைவரும் முழுத்திறமையை பருவத்தேர்வில் காட்ட முக்கி முக்கிப் படித்தனர். ஓரளவு திருப்தியாகவே தேர்வும் எழுதினர். அவன் எதிர்பார்த்தைப் போலவே இயற்பியல், வேதியியல், கணிதத்தில் வகுப்பில் முதல் இடம் பெற்றான். உயிரியயில் இரண்டாம் இடம். மொத்த மதிப்பெண்களின் முதல் இடம். இன்னும் ஆங்கில விடைத்தாள் மட்டும் திருத்தித் தரப்படாமல் இருந்தது. ஆனால் அதற்குள் முதல் பருவத்தேர்வில் மூன்று பாடங்களில் முதலிடம் பெற்றவன் எனும் கவனம் அவன் மீது விழுந்திருந்தது. 


இரண்டு நாள் தாமதமாக கிருஷ்ணமாச்சாரி ஆங்கில விடைத்தாளுடன் வந்தார். வகுப்பில் நுழையும் போதே அவர் கண்கள் அவனைத் தேடின. ஒவ்வொருவரின் விடைத்தாளாக அவர்களின் மதிப்பெண்ண்ணை சத்தம் போட்டுப் படித்து பொறுமையாகக் கொடுத்தார். வகுப்பில் கிட்டத்தட்ட அனைவரின் விடைத்தாள்களும் வந்துவிட்டன. இறுதியாக ஒரே ஒரு பேப்பர் அவர் கையில். அவன் மட்டும் வகுப்பில் மீதம் இருந்தான். அவனது பெயரை உரக்க அழைத்தார். எழுந்து நின்றான். 


“முப்பத்து நாலரை மார்க்”


34 1/2. முப்பத்தைந்து எடுத்தால் தேர்ச்சி, ஏற்கனவே இருக்கும் மதிப்பெண் உதவியால் வகுப்பில் முதலிடம். ஆனால் இப்போது 34 1/2. ரேங்க் பட்டியலில் இடம் கிடையாது. வகுப்பில் தேர்ச்சி அடையாத சில மாணவர்களின் பட்டியலில் அவன் பெயர். 


இப்படி முப்பத்தி நாலரை போடும் ஆசிரியரை இதுவரை அவன் பார்த்ததில்லை. பொதுவாக 32, 33 மதிப்பெண் எடுத்தாலே ஒன்றிரண்டு சேர்த்துப் போட்டு பாஸ் ஆக்கிவிடும் ஆசிரியர்களைத் தான் கண்டுள்ளான். விடைத்தாளை எடுத்துப் பார்த்தான், ஒரு ஒரு வார்த்தையாகத் தேடித் தேடி திருத்தியிருந்தார். காற்புள்ளி இல்லையென்றால் அரை மார்க் குறைவு, பெரிய எழுத்து P சின்ன எழுத்தாக உள்ளது, கேபிட்டல் லெட்டர் போடவில்லை என இரண்டு மதிப்பெண் கட். விடைத்தாள் முழுவதும் சிவப்பு வட்டம். இந்த மாதிரி அனைவரின் விடைத்தாளையும் திருத்தியிருந்தால் வகுப்பில் யாருமே தேர்ச்சி அடைந்திருக்க மாட்டார்கள். ஆனால் அவனுக்கு மட்டும் அந்த நல்வாய்ப்பை வழங்கியிருந்தார். 


இப்போது வேறு ஒரு பயம் வந்து அவனை ஆட்கொண்டது. நன்றாக படிக்கும் தைரியத்தில், விடுதி வார்டனுடன் ஏற்கனவே வம்பு வளர்த்து வைத்திருந்தான். பெயில் எனும் காரணம் கிடைத்தால் போதும் அவருக்கும் பழி தீர்க்க லட்டு போல காரணம் கிடைக்கும். அவன் பெயில் ஆன விசயம், வீட்டிற்கு, ஊருக்குத் தெரிந்தால் என்ன ஆகும்? “வாத்தியார் புள்ளையா இப்படி?”


எழுந்து நேரே கிருஷ்ணமாச்சாரியிடன் சென்றான். என்ன என்பது போல் பார்த்தார். 

“சார், இந்தக் கேள்விக்கு சரியான பதில் தான் எழுதியுள்ளேன். இன்னும் அரை மதிப்பெண் கொடுத்தால் நான் பாஸாகிவிடுவேன்” வார்த்தைகள் விழுங்கி விழுங்கி வந்தன.


வெடுக்கென பேப்பரை பிடுங்கினார். ஒரு zல் வட்டம் போட்டார்.

 “இங்க small z வரணும். ஆனா கேப்பிடல் Z போட்டுருக்க. அதனால இன்னும் அரை மார்க் கட்” பேப்பரை வெற்றிப் பெருமிதத்துடன் மேசை மீது அலட்சியமாக எறிந்தார்.  ஒரு புழுவைப் பார்ப்பது போல மேலும் கீழும் பார்த்தார். 


அவன் சுயமரியாதை சுண்டப்பட்டது. பேசாமல் பேப்பரை எடுத்துக் கொண்டு என்ன வந்தாலும் எதிர் கொள்வோம் என அவன் இடம் திரும்பினான்.


அன்று மாலை அவன் தந்தை தொலைபேசியில் அழைத்தார். பேசுவதற்காக தலைமை ஆசிரியர் அறைக்குப் பக்கத்தில் இருக்கும் தொலைபேசி அறைக்குச் சென்றான். அப்போது உடற்கல்வி ஆசிரியர் கிருஷ்ணமாச்சாரியிடம் பேசிக் கொண்டிருந்தார். சில வார்த்தைகள் மட்டும் காதில் விழுந்தது.


“நீங்க டி.என். சேஷன் மாதிரி நேர்மையான ஆளு சார்.”

திராவிட இயக்க தீரர் மன்னை நாராயணசாமி - நரசிம்மன் நரேஷ்

 திராவிட இயக்க தீரர் மன்னை நாராயணசாமி - நரசிம்மன் நரேஷ்


அய்யா #மன்னை_நாராயணசாமி அவர்களின் நினைவுநாள். இவர் போன்ற கொள்கையாளர்களை  நினைக்காவிடில்  கொள்கைகளுக்கு நினைவஞ்சலி செலுத்த வேண்டியிருக்கும். காலைமுதல் வெவ்வேறு பணிகளில் இருந்தாலும் பதிவு செய்ய வேண்டும் என கட்டாயத்தால் நினைவில் உள்ளதைக் கொண்டு நினைவஞ்சலி செய்கின்றேன். 


தமிழ்நாடே புயல், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நேரம். நினைவுகள் சரியென்றால்... 70களின் இறுதிப்குதியாக இருக்கலாம்.  தலைவர் கலைஞர் அவர்கள் தமிழகம் முழுவதும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட  பயணம் செய்து பாதிக்கப்பட்டவர்களுகு ஆறுதல் தெரிவித்து வந்தார். தஞ்சைப்பகுதியில் பாதிப்பு அதிகம் , அங்கு பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து ஆறுதல் தெரிவித்து, மன்னையை நோக்கி கார் சென்றுக் கொண்டிருந்தது. தலைவர் உடன் பேராசிரியர், மன்னை நாராயணசாமி அவர்கள் பயணித்தனர். அப்போது எதிரே வந்த ஒருவர் தலைவர் காரை மறித்தார். 


அவரிடன் என்னாச்சுப்பா எனக் கேட்க , அவரோ மன்னார்க்குடி பாலத்தின் அருகே அதிமுக மற்றும் காங்கிரசார் தலைவர் கலைஞருக்கு கறுப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடத்த கூடியிருப்பதாக சொன்னார். காரைவிட்டு கீழறிங்கிய மன்னை அய்யா தலைவரிடம் " நீங்க காப்பி சாப்டுட்டு பத்து நிமிடம் கழிச்சு வாங்க, நான் முன்னாடிப் போறேன் என வேறொரு காரில் சென்றார். 


பத்து நிமிடத்திற்கு பின்னர் தலைவர் பயணித்த கார் அங்கு சென்ற போது பாலத்தின் அருகே தண்ணீர் அல்லாத மணல் பகுதியில் அதிமுக, காங்கிரசார்  சிதறி ஓடிக் கொண்டிருந்தனர். அவர்களது செருப்புகள் எல்லாம் வழியில் கிடந்தன. அடுத்த சில அடி தூரத்தில் மன்னை நாராயணசாமி தலையில் முண்டாசுக் கட்டிக் கொண்டு கழகத் தோழர்களுடன் வெற்றி முழக்கமிட்டு தலைவர் கார் நோக்கி வந்து சால்வை அணிவித்து வரவேற்றனர். அப்படி ஒரு மாயாஜாலத்தை நடத்தியவர் அய்யா மன்னை நாராயணசாமி அவர்கள். 


இன்னொரு கறுப்புக் கொடி நிகழ்வும் நினைவுக்கு வருகின்றது. நெடுமாறன் காங்கிரஸ் தலைவராக இருந்த காலக்கட்டம் தலைவர் திருமணவிழா ஒன்றில் கலந்துக் கொள்ள மதுரை செல்வதாக அறிவிப்பு வெளியாகின்றது. தலைவர் மதுரைக்கு வரும்போது கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் செய்யப்போவதாக நெடுமாறன் அறிவிக்கின்றார். ஆயிரமாயிரம்  வாஞ்சிநாதன்கள் நம்மிடம் உண்டு என்பதை மெய்ப்பிப்போம் என அறிக்கை விடுகின்றார். தலைவர் கலைஞர் பின்வாங்கவில்கை. மதுரைக்கு சென்றாக வேண்டும் எனக் கிளம்பும் போது நானும் வருவேன் என தலைவர் உடன் பாதுக்காப்பாளராக கிளம்பினார்  மன்னை அய்யா மற்றும் ஆர்காட்டார் ஆகியோர். பயணத்தில் சின்ன மாற்றம் செய்யப்பட்டு கொடைரோட்டில் தலைவர் இறங்கி கார்மூலம் மதுரை சென்று நிகழ்வுகளில் கலந்துக் கொண்டார். 


அப்போது பேசிய அண்ணன் வை.கோ, ஆயிரமாயிரம் வாஞ்சிநாதன்கள் நெல்லையில் இருந்து வந்திருக்கின்றோம் எனப் பேசினார். தலைவர் பேசுகையில் வாஞ்சிநாதன் யாரென உங்களுக்கு தெரியும் , ஆஷ் துரையை சுட்டுக் கொன்றவர். எனக்கு வாஞ்சி நாதன் தேவையில்லை.  என் மீதும் அண்ணாவின் இலட்சியத்தின் மீதும் வாஞ்சை கொண்ட வாஞ்சைநாதன்கள் வேண்டும் என பேசினார்.  அப்பயணம் முழுவதும் தலைவருடன் மெய்க்காப்பாளராக பயணித்தவர் மன்னை அய்யா அவர்கள். 


இதனை தான் வாழ்நாள்  தலைவர் கலைஞர் அவர்கள் அன்னை வயிற்றில் பிறந்தேன் மன்னை மடியில் வளர்ந்தேன் என குறிப்பிட்டு இருப்பார்.  


இப்படியாக தலைவர் உயிருக்கு குறிவைத்து  உடலுக்கு குறிவைத்து தாக்குதல் செய்யபட்ட பல சர்ந்தப்பங்களில் , ஆப்பக்கூடல் மேடை சரிவு , வண்டிப்பெரியார்  கலவரம், சைதை கலவர்ம் உடன் இருந்தோர் பட்டியலில் இடம் பிடித்தவர் மன்னை நாராயணசாமி அவர்கள்.


கழகத்தலைவருக்கு மட்டுமில்லாமல் பகுதி கழகத் தொண்டர்களுக்கும் உறுதுணையாக இருந்த அய்யாவை தொகுதி, பகுதி, மாவட்டம் என்றில்லாமல் மாநிலமே மறவாமல் இருக்க வேண்டும். 


அய்யாவிற்கு நினைவஞ்சலி.

Dravidian Leaders – Rajarajan RJ

 Dravidian Leaders – Rajarajan RJSir A.T. Panneerselvam


Veteran Periyarist Ve. Aanaimuthu in his life documentary, faced a question from the interviewer, From when you became a dravidian ideologue? 


Ve. Aanaimuthu replied like this.. It was in March 1940, I was 15 years old then. I went to the river in my village for taking bath and returning back holding my Vetti on the hand in order to dry it. A friend of mine running towards me and said, “Hey, You know Panneerselvam died”. I said, “Ayyo!” in shock. Another guy who is a brahmin named Seetharaman said “Ozhinjaanaa Paavi” which means “Ah, That Sinner Died!”. That was a slap on my face. I realised the hatred they have on him. That day made me turn towards the Dravidian movement, the veteran said.


Why this hatred on Sir. A.T. Panneerselvam from the upper caste people? There are many reasons to it. Before, seeing the reasons, lets read what Thanthai Periyar had to say about the sudden demise of Sir.A.T Panneerselvam.


Periyar wrote in Kudiyarasu dated 17.3.1940


“I didn't cry when my wife died. When my mother died, I took it as natural. We should not feel bad for a person who lived 95 years. When my brother’s son who studied in London and returned back, died in his age 20, I was composed. But, Sir. A.T. Panneerselvam’s demise is shaking my mind. When I think about Tamil’s future, my heart is getting shocked” 


“The reason is, My Wife, My Mother, My Children’s demise is my personal loss. It is linked to my selfishness as well. When the selfishness fades off, their memory also fades off from me. The demise of Panneerselvam is linked to the public welfare. So, Whenever, I think of Tamils, Panneerselvam comes to my mind. When this will fade off? My mind struggles to find someone who can replace him.”


Periyar, who doesn't show his emotions often had written the above. This speaks about the life of Sir. A. T. Panneerselvam.


Sir.A.T. Panneerselvam born in a village named “Selvapuram” near Thiruvarur. His full name is Sir Arockiyasami Thamarai Selvam Panneerselvam. His family belongs to the Catholic religion. Panneerselvam did his schooling in Thanjavur and his college was in Tiruchirappali Saint Joseph College. He went to London to study Law. 


He got married to Ponnu Paappu Ammal and they had 6 children. After returning from London, He Practiced as a Lawyer in Thanjavur. He indulged himself into the public life. He became the Chairman of Thanjavur municipality. He also served as the leader of District Education. 


In his tenure, One of the notable issue was on the “Thiruvaiyaaru Raja’s College” which denied teaching or studying Tamil as they promoted Sanskrit. Tamil Scholar Karanthai Umamaheshwaranar who was a friend of Panneerselvam brought this issue to him. When the scholar approached the college, they showed a Sanskrit manuscript as an evidence and mentioned, Raja Sarfoji had given permission only to teach sanskrit. Sir A T Panneerselvam got the manuscript and gave it to Gnaaniyaar Adigal who was a scholar in both Tamil and Sanskrit. Gnaaniyaar Adigal said, there is no mentioning that only Sanskrit should be taught in the college. Sarfoji Raja mentioned that the college is “For Educational development” and not “For Sanskrit Development”.


Thus, the college started teaching Tamil as well and started producing many Tamil scholars. The college was renamed as “Rajas college” and later as “Arasar Kallori” in Tamil. 


Later, Sir A.T. Panneerselvam associated himself with the Justice Party.


He was the District Secretary of Thanjavur. 


He had implemented social justice in all possible ways in any position he holds. He nominated a scheduled caste member as the leader in Pattukottai (in Thanjavur District) when he was the district secretary. When pressure came from a dominant caste leader to remove the scheduled caste member, Sir. A.T Panneerselvam stood by his decision. Later, the chief minister intervened and informed the dominant caste leader to obey the decision of the party.


He had also held positions like Member of Chennai Legislative Assembly, Committee Member to the Chennai Governor, Finance and Home minister of Chennai Presidency, Opposition Leader, etc.,


In his tenure as the member of assembly, he ardently worked for the social justice of all people. His voice was always for the oppressed communities. He faced then congress and brahmin leaders like Rajaji directly in the assembly. Sir. A.T Panneerselvam is famous for his straight forwardness and boldness.


Selvam was a natural leader of the non-brahmin party like Justice party. 


After the demise of leaders like TM Nair, Sir.Pitti Thiyagarayar, Dr. Natesan the justice party was on the path of decline. Selvam saw Periyar EVR as the only leader who can save the justice party and Tamil Nadu. He also associated himself briefly with the Self-respect movement started by Periyar. 


Sir.A.T.Panneerselvam’s role in 1938 Anti Hindi protest is important. He roared in both Assembly and Public meetings. He spoke in the assembly that, “Through Hindi, not just Tamil language even the lives of Tamil people will get destroyed.” Periyar had seen Panneerselvam as a true Tamil leader.


When Periyar got arrested during the anti-Hindi protests, Sir.A.T Panneerselvam vociferously voiced against the Congress government in the assembly. 


There are instances where he was questioned by the congressmen for his association with Periyar. Once, a congress member asked Sir. A.T Panneerselvam, You being a Justice party leader meeting Periyar in Erode. What does it mean?


Sir A.T. Panneerselvam replies, If Vardah where Gandhiji live is a sacred place for you, Erode where Periyar lives is our sacred place.


When someone asked, “What is the meaning of Periyar?” Panneerselvam replied “Periyar means Mahatma”.


There was an interesting meeting between Sir. A.T Panneerselvam and Gandhi, wherein Sir.A.T panneerselvam told Gandhi on how Brahmins are dominating the political powers and not letting any non-Brahmin to grow. He openly mentioned Gandhi that Brahmins are just using him to attain and retain power. 


He participated in the round table conference in London representing non-Brahmin Tamils and Christians. 


Throughout his life, he put the lives of the common man as his priority. He didn’t save anything for his family. When he found a work in London and leaving to London, he mentioned to his son George that I’m going to save money from London for the family welfare. For that, George jokingly replied that, he could not save when you were earning 5000 rupees as a minister, but now you are saying you are going to save money. You don’t need to send us any money. Please don’t ask us to send money from here, George said and laughed. Sir.A.T. Panneerselvam also laughed!


Scenes were emotional when Periyar went to send off Panneerselvam. Both of them were emotional. No one would have imagined that, this was the last time, they two meet each other. Before starting to London, Selvam wrote a letter to Periyar from Karachi. 


The letter goes like this..Airport, Karachi

29.02.1940 


To My Beloved Leader,


Yesterday I reached here from Bombay. The flight I have to take from here had not reached yet. It seems the flight will only reach this evening. I will start tomorrow morning 7AM. So, I think, I will reach London by Monday,


With love,

A.T.Panneerselvam 


The unexpected death of Sir A.T Panneerselvam was definitely a setback for Tamil Politics. His education, political experience, elocution and most importantly the stand on social justice politics would have helped Tamils to attain a better life during his lifetime. 


Today, If you come across a Tamilan with the name Panneerselvam, high chances are there, that a Dravidian party member was the reason behind that name. Not just his name is alive, Sir.A.T. Panneerselvam is alive in the name of social justice.


- Rajarajan RJ

Becoming (நூல் விமர்சனம்) - ராஜராஜன் ஆர்.ஜெ

 Becoming (நூல் விமர்சனம்) - ராஜராஜன் ஆர்.ஜெ

மெரிக்காவின் முன்னாள் First Lady மிச்சல் ஒபாமாவின் வாழ்க்கை வரலாறான “Becoming” நூலை அவரது குரலிலேயே முழுமையாக கேட்டு முடித்தேன்.

மிக நேர்மையான எழுத்து. புத்தகத்தை மூன்று பகுதியாக பிரிக்கிறார். 
Becoming Me,

Becoming Us,

Becoming More என்ற தலைப்புகளில் அவரது வாழ்க்கையை பிரித்து எழுதி இருக்கிறார்.

மிச்சல் ராபின்சன், அமெரிக்காவில் உள்ள சிகாகோ மாநகரின் தெற்கு பகுதியை சேர்ந்தவர். அவரது குடும்பத்தை குறித்து எழுதுகையில், அவரது தாத்தா, பாட்டி அமெரிக்காவில் நடந்த அடிமைமுறையால் பாதிக்கப்பட்டவர்கள் என்றுக் குறிப்பிடுகிறார். அவரது தந்தை பிரேசர் ராபின்சன்,  தாய் மேரியான் இருவரும் மிச்சலையும், அவரது அண்ணன் கிரேக்கையும் மிகவும் சுதந்திரமாக வளர்க்கிறார்கள். அவர்களை “வளர்ந்தவர்களாகவே” நடத்துகிறார்கள். எதைக்குறித்தும் பேசும் சுதந்திரம் அவர்கள் வீட்டில் இருக்கிறது. அவரது தந்தை Multiple sclerosis என்னும் நோயை பொருட்படுத்தாமல் பல காலமாக வாழ்கிறார். 

அமெரிக்காவின் எல்லா கறுப்பின குடும்பங்கள் போலவும், நிறவெறி என்றால் என்னவென்பதை உணர்ந்தே மிச்சல் வளர்கிறார். 1969 ஆம் ஆண்டு, மிச்சல் Kinder garden ல் படிக்கிறார். அன்றைய நாள், அனைத்து குழந்தைகளையும் ஒரு அட்டையில் எழுதி வைத்திருக்கும் நிறத்தை காட்டி, அது எந்த நிறம் என்று சொல்லச் சொல்கிறார்கள். மிச்சல் Black, Orange, Purple எனச் சொல்லி விட்டு White என்ற சொல்லை பார்க்கிறார். அவரால் பேச முடியவில்லை. அவரது டீச்சர் உட்கார சொல்லி விடுகிறார்.

இந்தக் குழந்தை தான் பின்னாளில் “White house” என்று சொல்லப்படும் வெள்ளை மாளிகையில் குடியேறினார் என்பது வரலாறு.

மிச்சலின் அண்ணன், கிரேக் ஒரு நல்ல கூடைப்பந்து வீரர். அவருக்கு Princeton University யில் படிக்கும் வாய்ப்பு கிடைக்கிறது. சிறுவயதில் இருந்தே தன் அண்ணனை ரோல் மாடலாக கொண்டிருக்கும் மிச்சல், தானும் Princeton University ல் படிக்கப் போவதாக சொல்கிறார். அப்போது, அவரிடம் “நீ பிரின்ஸ்டன் போகும் அளவுக்கான அறிவாளி கிடையாது” என்றுச் சொல்கிறார்கள். சொன்னவர்களின் வாக்கை பொய்யாக்க மிச்சல் உழைக்கிறார். படிக்கிறார். Princeton University யில் சேர்ந்து சட்டம் படித்து முடிக்கிறார்!

கல்வி தான் நம்மை உயர்த்தும் ஏணி என்பதை மிச்சல் ஆணித்தரமாக பல இடங்களில் பதிவு செய்கிறார்! 

மிச்சலுக்கு சில ஆண் நண்பர்கள் இருக்கிறார்கள். ஆனால், மிச்சல் தன் வாழ்க்கை பாதையில் முன்னேறுவதில் கவனமாக இருக்கிறார். 

படித்து முடித்து விட்டு, ஒரு கார்ப்பரெட் கம்பெனியில் வேலைப் பார்க்கிறார். அப்போது தான் பராக் ஓபாமா மிச்சலின் கஸ்டமராக அறிமுகம் ஆகிறார்.

பராக் ஓபாமாவின் பின்னணி என்னவென்றால், அவரது தந்தை Kenya நாட்டை சேர்ந்தவர். அவரது தாய் Hawaii ஐ சேர்ந்த ஒரு வெள்ளைப் பெண்மணி. இருவரும் திருமணம் ஆகி சில காலங்களில் பிரிந்துவிடுகிறார்கள். பராக் தன் தந்தையை ஒரு சில முறைகளே பார்த்திருக்கிறார். பராக்கின் அம்மா, இந்தோனேசியாவை சேர்ந்த இன்னொருவரை மணக்கிறார். பராக் Hawaii ல் இருக்கும் தனது தாத்தா பாட்டி வீட்டில் வளர்கிறார். நிறைய புத்தகங்களை வாசிக்கிறார். உலகை மாற்ற வேண்டும் என்கிற எண்ணமுடைய தீவிர கொள்கை வாதியாக வளர்கிறார்.

பராக் Harvard University யில் மேற்படிப்பு படிக்கச் செல்கிறார். அதற்கு முன்பு நிறைய சமூகப் பணிகளை சர்ச்சுகள் மூலம் செய்கிறார்.

பராக்கிற்கு மிச்சலை பார்த்ததும் பிடித்துவிடுகிறது. இருவரும் நண்பர்களாக பழகுகிறார்கள். பிறகு அது காதலாக மாறுகிறது. பராக் தன்னை திருமணம் செய்துக்கொள்ளுமாறு கேட்கிறார். மிச்சலும் ஒத்துக்கொள்கிறார். மிச்சலின் கண்டிப்பான குணம், தனக்கு பிடித்ததாகவும், அது தன்னை நேர்மையாக இருக்க வைப்பதாகவும் பராக் சொல்கிறார்.

மிச்சலின் அண்ணன் கிரேக், அவள் கல்யாணமே செய்யமாட்டாள் என்று நாங்கள் நினைத்தோம் என்கிறார். இப்படியாக பராக் - மிச்சல் திருமணம் நடந்தேறுகிறது. பராக் படித்து முடித்ததும் மிச்சல் வீட்டிலேயே தங்கிக்கொள்கிறார்.

மிச்சலின் தந்தை நெடுநாள் உடல் பி்ரச்சனையால் இறக்கிறார். மிச்சலின் உயிர் தோழி சுசேனும் அடுத்தடுத்து இறக்கிறார்கள். சுசேன், வாழ்க்கையை கொண்டாடும் ஒரு பெண்மணியாக இருக்கிறார். ஆனால், 26 வயதில் கேன்சரால் இறக்கிறார். இந்த இரண்டு இறப்புகளும் மிச்சலை வெகுவாக பாதிக்கிறது. 

பராக் அரசியலுக்குள் நுழைய வேண்டும் என்கிற எண்ணத்தை வெளிப்படுத்துகிறார். அரசியல் மீது மிச்சலுக்கு  நல்லக் கருத்தில்லை. இருப்பினும், பராக்கின் இலட்சியங்களை புரிந்த காதலியாக அவரது முடிவை ஏற்கிறார். அவருடன் வீடு வீடாக ஏறி இறங்கி வாக்கு சேகரிக்கிறார். பராக் நினைத்திருந்தால் அவரது ஹார்வெர்ட் படிப்புக்கு மில்லியனில் சம்பாதிக்கலாம். ஆனால், அவர் தனது கொள்கைக்காக வாழ்பவர். இந்த சமூகத்தில் ஏதேனும் மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்கிற நம்பிக்கையுடன் இருப்பவர். அந்த எண்ணத்தற்கு மிச்சல் எப்போதும் துணையாக இருக்கிறார்.

ஆனால், இன்னொரு பக்கம், சிறுவயதில் இருந்து குழந்தைகளின் மீது மிச்சலுக்கு தனிப்பிரியம். தன் வீட்டில் நிறைய பார்பி பொம்மைகளை வளர்த்ததை சொல்கிறார். பராக்-மிச்சல் குழந்தை பேறுக்கு தயாராகிறார்கள். ஆனால், குழந்தை பேறு எளிதாக கிட்டவில்லை. மிச்சல் ஒரு ஊரிலும் பராக் ஒரு ஊரிலும் இருப்பதும்.. பராக்கின் அரசியல் பணியும் தான் இதற்கு காரணம் என்கிற கோபம் மிச்சலுக்கு வருகிறது. இருப்பினும், அவரவர் கனவுகளை புரிந்து நடக்கிறார்கள். 

பராக் - மிச்சலுக்கு அறிவியலின் துணையுடன் IVF முறையில் அவர்களது முதல் குழந்தை மலியா பிறக்கிறார். பராக்கை ஒரு மிகச்சிறந்த தந்தை என்கிறார் மிச்சல். தனக்கு கிடைக்காத தந்தையின் பாசத்தையும், வழிகாட்டுதலையும் தன் பிள்ளைகளுக்கு பராக் தருகிறார்.

பராக் இல்லியானிஸ் மாகாணத்தின் செனட்டராக தேர்ந்தெடுக்கப்படுகிறார். அவர் தேர்ந்தெடுக்கப்படுவதற்கு முன்னர், அவரது தாய் கேன்ரசால் இறந்துவிடுகிறார். பராக் அரசியலுக்குள் நுழைந்த போதே, அவருக்கு கேன்சர் இருப்பது தெரிந்துவிடுகிறது. ஆனால், அவர் பராக்கிடம் என்னை நான் பார்த்துக்கொள்கிறேன். என் உடல்நிலையை காரணம் காட்டி, நீ உன் வாழ்வின் முக்கிய முடிவுகளை தள்ளிப்போடாதே என்கிறார். அது தான் பராக்கை செனட்டர் பதவிக்கு போட்டியிட வைக்கிறது. ஆனால், பராக் தன் அரசியல் பயணத்தின் முதல் வெற்றியை பெற்ற போது அவர் அம்மா உயிருடன் இல்லை. அவரது தந்தையும் அப்போது உயிருடன் இல்லை. மிச்சலின் குடும்பம் பராக்கை அரவணைக்கிறது. (பின்னாளில் பராக் ஒபாமா அமெரிக்காவின் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட நாளில், தேர்தல் முடிவுகளை பதட்டத்தோடு காணும் ஒரு புகைப்படம் இருக்கிறது. அதில் பராக்கின் பக்கத்தில் மிச்சலின் தாயார் மேரியான் அமர்ந்து அவரது தோளின் மேல் வாஞ்சையுடன் கை வைத்திருப்பார். இந்த நிகழ்வையும் மிச்சல் இந்தப் புத்தகத்தில் விவரித்திருப்பார்)

பராக் அரசியலில் கடுமையாக உழைக்கிறார்.மிச்சலும் அவரது வேலையில் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறார்.  எப்போதாவது கிடைக்கும் ஓய்வில் குடும்பத்தினருடன் நேரத்தை செலவழிக்கிறார்கள். ஒருமுறை, அவர்கள் குடும்பமாக Hawaii சென்றிருக்கிறார்கள். மலியாவின் முதல் பிறந்தநாளை கொண்டாடுகிறார்கள். எல்லாம் மகிழ்ச்சியாக சென்றுக்கொண்டிருந்த வேளையில், பராக்கிற்கு ஒரு செய்தி வருகிறது. அவர் செனட்டராக பாடுபட்டுக் கொண்டு வந்த “Gun control act” க்கு எதிராக வாக்கெடுப்பு நடக்க இருக்கிறது. அது நடக்கையில் பராக் அங்கே இருக்க வேண்டும் என்கிறார்கள். அது பராக்கிற்கும் முக்கியமாக தெரிகிறது. அவர் அங்கிருந்து கிளம்புவதற்கு ஆயுத்தமாகிறார். அப்போது, ஒரு வயதான மலியாவிற்கு உடல்நிலை சரியில்லாமல் போகிறது. என்ன பிரச்சனை என்றுத்தெரியவில்லை. மிச்சல் எழுதுகிறார், “பராக் ஒன்றும் பேச முடியாமல் உட்கார்ந்து இருக்கிறார். ஒருபுறம் தான் கொண்டு வந்த “Gun control act” தோற்கடிக்கப்படும் சூழ்நிலை. இன்னொரு பக்கம், தன் ஒரு வயது குழந்தைக்கு உடல்நிலை சரியில்லை. நான் அந்த சூழ்நிலையில், பராக் நான் குழந்தையை பார்த்துக்கொள்கிறேன். நீ உடனே கிளம்பு என்று சொல்வேன் என்று அவர் எதிர்பார்த்திருக்கக் கூடும். ஆனால், நான் அதைச்செய்யவில்லை. ஏனெனில், மலியாவுக்கு என்ன செய்கிறது எனக்குத் தெரியவில்லை. தனியாக என்னால் சமாளிக்க முடியும் என்றும் தோன்றவில்லை” என்கிறார்.

பராக், அவரது கட்சியினரிடம் அழைத்து, தான் வரவில்லை என்கிறார். அன்று அவர் மிச்சலுடன் தன் குழந்தையை பார்த்துக்கொள்கிறார்.

அந்த “Gun control act” ஆறு ஓட்டில் தோற்கடிக்கப்படுகிறது. பராக் கடுமையாக கட்சியினராலும், ஊடகத்தினாலும் விமர்ச்சிக்க படுகிறார். ஆறு ஓட்டில் தோல்வி. பராக் வந்திருந்தாலும் ஒன்றும் மாறியிருக்காதே? ஏன் இப்படி விமர்சிக்கிறார்கள்? என்று மிச்சலுக்கு புரியவில்லை. பராக்கின் அரசியல் வாழ்க்கைக்கு இந்த சம்பவம் ஒரு தடையாகிவிடுமோ எனப்பயப்படுகிறார். ஆனால், பராக், தனது நிலைப்பாட்டை விளக்கிச்சொல்கிறார். தன் குழந்தைக்கு உடல்நிலை சரியில்லாத போது, அவர் தங்குவதாக முடிவெடுத்ததை சரி என்று வாதிடுகிறார். ஒரு விசயத்தை நாம் இங்கே கவனிக்க வேண்டும், மிச்சல் இந்த விசயம் குறித்து விரிவாக எழுதி இருக்கிறார். பராக் ஓபாமாவின் “A promised Land” எனும் நூலையும் நான் வாசித்து வருகிறேன். அதில் ஓரிரு வரிகளில் இந்த விசயத்தை பராக் கடந்து செல்கிறார். இதை வைத்தே, நாம் இவர்கள் இருவருக்கும் உள்ள குணநலன்களை புரிந்துக்கொள்ளலாம். 

மிச்சல் ஒரு எளிமையாக பெண்மணி. எது சரி? எது தவறு? என்பதை எளிதாக சொல்லக்கூடிய ஒரு மனிதர். அவருக்கு பராக் இந்த விசயத்தில் தாக்கப்பட்டது மிகவும் வருத்தத்தை ஏற்படுத்துகிறது. ஆனால், பராக் ஒரு தேர்ந்த அரசியல்வாதியாக, மனித இயல்புகளை புரிந்துக்கொண்டவராக இந்த விசயத்தை எதிர்கொள்கிறார். எத்தனை முறை அடிப்பட்டாலும், அவர் அதை வெளிக்காட்டாமல், மீண்டும் அன்பைக் காட்டும் “நேர்மறை” எண்ணம் கொண்டவராக இருக்கிறார் என்பதே மிச்சலின் பார்வையாகவும் இருக்கிறது. இது தான் பராக்கை வாழ்வின் அடுத்தக் கட்டத்திற்கும் நகர்த்துகிறது.

அமெரிக்க ஜனாதிபதி வேட்பாளராக தான் போட்டியிடப் போவதாக பராக் ஓபாமா அறிவிக்கிறார். மிச்சலுக்கு இந்த நாடு, ஒரு கறுப்பினத்தவரை ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கும் அளவுக்கு முதிர்ச்சி அடைந்துவிட்டதா? என்கிற கேள்வி இருக்கிறது. ஆனால், பராக்கின் அரசியல் இந்த நாட்டிற்கு தேவை. அவரால் ஒரு மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்ற நம்பிக்கையும் மிச்சலுக்கு இருக்கிறது. 

பராக்கை விட பெரிய அரசியல்வாதிகள் போட்டியில் இருக்கிறார்கள். ஹிலாரி கிளின்டன், ஜோ பைடன் போன்ற பெரிய தலைவர்களை பராக் ஓபாமா தனது “நேர்மறை அரசியலால்” வெல்கிறார். அவரது பேச்சுக்கள் அமெரிக்கர்களிடையே ஒரு புதிய நம்பிக்கையை தருகிறது. விளைவு, அமெரிக்காவின் முதல் கறுப்பின ஜனாதிபதியாக “பராக் ஒபாமா” தேர்ந்தெடுக்கப்படுகிறார்.

முதல் கறுப்பின “First lady” யாக மிச்சல் ஓபாமா இருக்கிறார். புத்தகத்தின் கடைசி பாகத்தில், அமெரிக்க வெள்ளை மாளிகை வாழ்க்கை, அங்கே மிச்சல் செய்த மாற்றங்கள், குழந்தைகளுக்கான சத்துணவு சட்டத்தை கொண்டு வந்ததில் மிச்சலின் பங்கு, இந்த பெரியா மாற்றம் தன் குடும்பத்தினரை, குழந்தைகளை எப்படி பாதித்தது என்பது குறித்து, பராக் எப்படி ஒரு நாட்டின் தலைவராகவும், வீட்டின் தலைவராகவும் நடந்துக்கொண்டார் என்பது குறித்து, இங்கிலாந்து ராணியை சந்தித்தது, நெல்சன் மண்டேலாவை சந்தித்தது என பல விசயங்களை மிச்சல் பகிர்ந்திருக்கிறார்!

மலியா ஓபாமாவின் Prom night ல் அவரை ஒரு இளைஞன் அழைத்துச்சென்ற அனுபவத்தை குறித்து  எழுதியிருக்கிறார். எப்படி தானும் தன் கணவனும் வெள்ளை மாளிகையில் இருந்து இறங்கி வந்து, தங்களது மகளை அனுப்பி வைத்தோம் என்று எழுதியிருப்பது உண்மையில் ஆச்சரியத்தை கொடுத்தது.

அமெரிக்க ஜனாதிபதியின் குழந்தைகள் என்கிற எண்ணத்தைவிட சிறந்த மனிதர்களின் குழந்தைகளாக அவர்கள் வளர்க்கப்பட்டிருக்கிறார்கள். உங்களது படுக்கையை நீங்கள் தான் அமைத்துக்கொள்ள வேண்டும். ஊழியர்களை செய்ய வைக்கக்கூடாது என்று அவர் சொன்னது ஒரு எடுத்துக்காட்டு. புகழ் வெளிச்சமும், அதிகார வெளிச்சமும் அதிகமாக தங்கள் குழந்தைகள் மேல் விழாத வகையில் இருவரும் பார்த்துக்கொண்டார்கள்!

மிச்சலைப் பொறுத்தவரை, தான் ஒரு “கோபக்கார கறுப்பின பெண்ணாக - An angry black women” பார்க்கப்படுவதை சொல்கிறார். ஒருக்கட்டத்தில் தான் மனதில் பட்டதை பேசுவதால் எந்தளவுக்கு Bully செய்யப்பட்டேன். Troll செய்யப்பட்டேன் என்பதை எழுதுகிறார். Teleprompter வைத்து பேச வேண்டிய கட்டாயத்திற்கு தான் தள்ளப்பட்டத்தை சொல்கிறார். தான் எத்தனை உயர்ந்த இடத்தில் இருந்தாலும், இறுதியாக தனது தோலின் நிறமும், பாலினமும் தான் பலரது கண்களுக்கு தெரிகிறது என்பதையும் பகிர்கிறார். தனது சிறிய சறுக்கலும் ஒட்டுமொத்த கறுப்பின மக்களின் சறுக்கலாக கட்டமைக்கப்படும் என்பதை தன்னியல்பாக இருவருமே கொண்டிருக்கிறார்கள்!

மிச்சலையும், பராக்கையும் இயக்குவது ஒரு கொள்கை தான். இதை இருவருமே அவரவர் புத்தகத்தில் பதிவு செய்கிறார்கள். 

You give up or you work for the change. “Whats better for us? Do we settle with the world as it is, or do we work the world as it should be?”

இருவருமே தங்களது பாதையை “இந்த உலகம் எப்படி இருக்க வேண்டும்” என்கிற நிலைக்காக உழைத்தார்கள். உழைத்துக்கொண்டிருக்கிறார்கள்!

இந்த புத்தகத்தை அனைவரும் வாசிக்க வேண்டும். குறிப்பாக பொதுவாழ்வில் ஈடுப்பட்டிருப்பவர்களின் வீட்டில் கட்டாயம் இருக்க வேண்டிய நூல். எனக்கு தெரிந்த சிலருக்கு இந்த நூலை அன்பளிப்பாக கொடுக்க இருக்கிறேன்!

நன்றி!

- ராஜராஜன் ஆர்.ஜெ


எழுதப்பட்ட சம்பிரதாயங்களும், எழுதப்படாத சட்டங்களும் - ரவிகுமார் சுதர்சனம்

 எழுதப்பட்ட சம்பிரதாயங்களும், எழுதப்படாத சட்டங்களும் - ரவிகுமார் சுதர்சனம்


யிற்சி அளிப்பதனாலேயே எல்லோரும் அர்ச்சகராகிவிடமுடியுமா? பிறவியின் பயனும், பயிற்சியின் பயனும் ஒன்றா? போன்ற பெரிய கேள்விகளுக்கு எனக்குத் தெரிந்த எளிமையான பதில்,

பொருளாதாரத்தில் ஒருவன் என்னை விட உயர்ந்தவன் இருக்கலாம்.

கல்வியில் ஒருவன் என்னை விட உயர்ந்தவன் இருக்கலாம்.

பதவியில் ஒருவன் என்னை விட உயர்ந்தவன் இருக்கலாம்.

அறிவில் ஒருவன் என்னை விட உயர்ந்தவன் இருக்கலாம்.

ஆற்றலில் ஒருவன் என்னை விட உயர்ந்தவன் இருக்கலாம்.

ஆனால் பிறப்பால் என்னைவிட உயர்ந்தவன் என்று யாருமே இருக்க முடியாது

என்று ஒரு மேடைப் பேச்சில் தொல்.திருமாவளவன் சொன்னதையே வழிமொழிந்து, இன்னும் சிலர் எழுப்பும் கேள்விகளுக்குப் போகலாம். அனைத்துச் சாதியையும் அர்ச்சகர் ஆக்கிட்டா மட்டும் உன்னுடைய பிள்ளைகளை அர்ச்சகர் ஆவதற்கான பயிற்சியில் உடனேயே சேர்த்துவிடப் போறியா என்ற கேள்வி ஒருபக்கம். அனைத்து தரப்பினரும் அர்ச்சகர் ஆவதைக் காட்டிலும் அனைவருக்கும் சீரான கல்வி வாய்ப்பு, கல்விக்கேற்ற வேலை அமைதல், அதிகாரத்தில் அமர்தல் போன்றவையே நமக்குத் தலையாயத் தேவையல்லவா என்கிற கேள்வி இன்னொரு பக்கம். மேலே கேட்கப்பட்ட கேள்வியின் நோக்கம் எத்தன்மையதாயினும், அதற்கான பதில் எளிமையாக விளக்க முயற்சிக்கலாம்.


நீங்கள் ஒரு இடத்தில நிற்கிறீர்கள். உங்கள் முன் நான்கு சாலைகள் பிரிகிறது. ஒவ்வொரு சாலையின் முடிவில் ஒரு ஊர் இருக்கிறது. எல்லா ஊர்களின் தன்மை குறித்தும், வசதி குறித்தும்,சவால்கள் குறித்தும் உங்களுக்குத் தெளிவாகத் தெரிவிக்கப்பட்டு, எந்தச் சாலை வழியே பயணம் செய்து எந்த ஊருக்குப் போக வேண்டும் என்ற முடிவு உங்களிடம் விடப்படுகிறது. முக்கியமாக எல்லா ஊரிலும் ஒரே மாதிரியான வசதிகள் இல்லை. இருக்க வாய்ப்புமில்லை. இந்த எல்லாத் தகவலையும் அறிந்தபிறகு நீங்கள் எந்த வழியைத் தேர்ந்தெடுப்பெதென்பது உங்கள் விருப்பம். இங்கே நாம் எதிர்பார்க்கப் படுவது எல்லா ஊருக்கும் செல்லும் பயணம் செய்வதற்கான சாலைகள் செப்பனிடப் பட்டிருக்க வேண்டும்.


இங்கே ஊர்கள் என்பது வேலைகள் அல்லது சேவைகளாகவும், வாய்ப்புகள் என்பது சாலைகளாகவும் பொருத்திப்பார்த்தால் நீங்கள் முதலில் எதிர்கொண்ட கேள்விகளுக்கு விடை கிடைக்கலாம். நம் நாட்டில் என்ன என்ன வாய்ப்புகள் இருக்கிறது. அதன் சாதகப் பாதகங்கள் என்ன போன்ற எல்லாத் தகவல்களும் எல்லாருக்கும் கிடைக்கப் பெறச் செய்ய வேண்டும். அப்படித் தகவல்கள் கிடைக்கப் பெற்றவன், அவன் தேர்ந்தெடுக்கும் துறையை அடையச் சட்டங்களும் சம்பிரதாயங்களும் கை கொடுக்க வேண்டும். அப்படியென்றால் அந்தத் துறையில் உள்ள சிக்கல்களைக் கண்டுகொள்ளத் தேவையில்லையா என்றால், கண்டிப்பாக அந்தச் சிக்கல்களை அறிந்து, ஆய்ந்து படிப்படியாகக் களைய வேண்டும். முதல் படியாக யார் முயன்றாலும் அடைய வேண்டும். அதற்கான தகுதிகளை வளர்த்துக் கொள்ள வழி காட்டுதல் வேண்டுமேயன்றி, வழிகளை அடைத்து விட்டு நீ தகுதியற்றவன் என்று விரட்டுவது சரியல்ல.


கடவுள் படைத்த உலகம் அனைவருக்கும் சமம் என்று சொல்லும் மண்ணில் நின்று கொண்டு கடவுளே எல்லோருக்கும் சமம் இல்லை என்பது எத்தனை முரண். சொல்லுக்கும் சக்தி உண்டு. நம் சொல்லைக் கடவுள் கேட்கும் என்று நம்பிக்கையில் சொல்கின்றவர், அந்தச் சொற்களைக் கொண்டு எல்லோரையும் கடவுள் அருகே நெருங்கி வர பிரார்த்தனை செய்யுங்கள். நம் மண்ணில் எத்தனையோ சம்பிரதாயங்கள்,நம் முன்னோர்களால் எழுதப்பட்டிருக்கலாம். ஆனால் அது எதுவும் சட்டமாகப் படாமலேயே இன்று வரை நடைமுறையில் இருக்கலாம். இது சரி தவறு என்பதைத் தாண்டி, அவற்றில் எது தேவை, எது தேவையில்லை என்று ஆய்ந்து அவற்றை நடைமுறை படுத்த முன்னெடுப்புகள் வேண்டும். இதில் நம் சொந்த விருப்பு வெறுப்பு இருக்கக் கூடாது.


மனிதனுக்கான நீதி கிடைக்குமென்றால் எழுதப்பட்ட சம்பிரதாயங்கள் திருத்தப்படவேண்டும். எழுதப்படாத சட்டங்கள் எழுத வேண்டும்.

-- ரவிகுமார் சுதர்சனம்

உலகின் நீள அகலத்தை அறிய வைத்த திராவிட நாடு.. - வீ.வைகை சுரேஷ்

 உலகின் நீள அகலத்தை அறிய வைத்த திராவிட நாடு.. - வீ.வைகை சுரேஷ்


மிழ்நாடு,  கொங்குநாடு, அகன்ற பாரதம்,  Clerical Error என்ற விவாதங்கள் எல்லாம ஓய்ந்து விட்டது.  அன்று பேரறஞர் அண்ணா அவர்கள் 'அடைந்தால் திராவிட நாடு, இல்லையேல் சுடு காடு,  என்ற  தனிநாடு கோரிக்கையினை மட்டும் கை விட்டு விட்டோம், ஆனால்  இதர கோரிக்கைகள் இன்னும் கைவிடப்பட வில்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறோம் என்றார். 


இன்றைய இளைய சமுதாயத்திற்கு ஆகஸ்ட் மாதத்தில் பிறந்த விஜய்காந்த்,  அர்ஜுன வேண்டுமானால் பாக்கிஸ்தான் எதிரி என படம போட்டு காட்டுவார்கள்.  இன்று ஆளும் பாஜக அரசும்,  மோடியும் இந்தியாவின் அனைத்த பிரச்சனைகளுக்கும் பாக்கிஸ்த்தானே காரணமென தினமும் பாடம் எடுத்துக் கொண்டு உள்ளார்கள் . 

அன்று சீனா இந்தியா மீது படையெடுக்க அதன் அடிபடையாக  திரைப்படங்கள் எல்லாம் வந்தது.


. 1962 அக்டோபரில் வேலூர் சிறையிலிருந்து விடுதலையடைந்த அண்ணா, இந்திய- சீனப் போரினைக் கருத்தில்கொண்டு நாட்டின் ஒருமைப்பாட்டுக்குத் தீங்கு ஏற்பட்டுவிடக் கூடாது என்று திராவிட நாடு கோரிக்கையைக் கைவிட்டார். ‘வீடு இருந்தால்தான் ஓடு மாற்ற முடியும். நாடு இருந்தால்தான் கட்சி நடத்தலாம். நாட்டுக்கே ஆபத்து என்று வந்திருக்கிற நிலையில் நாம் பிரிவினை பேசுவது அயலானுக்கு இடம் .

இப்போது நாம் நாம் கொஞ்சம் பின்னோக்கி செல்வோம் 


அது விமானம்,  தொடர்வண்டி, மகிழுந்து, பேருந்து என எதுவுமே கண்டுபிடிக்க படாத காலம். குதிரைகள் மூலமாக தரை வழி பயணம், கப்பல்கள் மூலமாக கடல் வழி பயணமென உலகம் இருந்த காலம் .

கொலம்பஸ் இந்தியவை தேடி அமெரிக்கவை கண்டது என வரலாறு படித்திருக்கிறோம். இந்தியாவில் திராவிட நாடு என்ற ஒன்றினை தேடி புறப்பட்ட போதே இருந்த உலகின் நீளம்-அகலம் தூரம் எல்லாம் தெளிவாக தெரிய வந்தது என்பதை இங்கே காண்போம்.  


பண்டைய காலத்தில் பணமே இல்லாத காலத்தில் பண்டமாற்று முறை இருந்த காலத்தில், அட நம்ம பாரதி கூட  பாடி இருப்பாரே "கங்கை நதிப்புறத்து கோதுமை பண்டம், காவிரி வெற்றிலைக்கு மாறு கொள்வோம்" என , அப்படித்தான் பண்ட மாற்று முறை இருந்த காலமது.  

மேற்கத்திய நாடுகள் கடுமையான குளிர் பிரதேசமாக இருந்த காலம் அது. ஆறு மாதம் வெய்யில் ஆறுமாத குளிரென பனி போர்த்தி கிடக்க வெளியே எவரும் வர முடியாத,  மர வீடுகளுக்குள் இருக்கும் மக்கள்,  மிகப்பெரிய மரப்பெட்டிகளில் குதிரை,  மாடு, ஆடு போன்றவற்றை வெட்டி பனி கட்டிகளுக்குள் பத்திரமாக வைத்திருக்க, சிறிது சிறிதாக வெட்டி எடுத்து சமைத்து சாப்பிடுவார்கள்.  அந்த மாமிசங்களை பத்திரமாக வைக்க, சமைக்க,  மிளகு,  சீரகம்,  பட்டை, கிராம்பு, லவங்கம் போன்றவை வெகுவாக பயன்படுத்திய காலம் அது.  


அமெரிக்காவைக் கண்டுபிடிச்சது யாரு?'னு கேட்டா... சட்டுனு 'கொலம்பஸ்' பேரைச் சொல்லிடுவீங்க. அதுவே, 'மிளகாயை அறிமுகப்படுத்தினது யாரு?'னு கேட்டாக்கா... மண்டை காயாதீங்க. அதுவும் கொலம்பஸ்தான்! செவ்விந்தியர்களுக்கு மட்டுமே அறிமுகம் ஆன மிளகாயை உலகின் மற்ற பகுதிகளுக்கு அறிமுகம் செய்தது கொலம்பஸ். அதற்கு முன்பாக இந்தியாவில் கார சுவையாக மிளகையே பயன்படுத்தி வந்த காலம் அது. மேற்கத்திய நாட்டு மக்கள் மாமிசம சமைக்க மட்டுமல்ல, மாமிசத்தை கெட்டுப்போகாமல்  இயற்கை preservative பாதுகாப்பு பொருளாக பயன்படுத்தி வந்த காலம் அது. ஆப்கானி்ஸதான் காபூல் நகர சந்தையில் சந்தித்து பண்டமாற்று முறையில் வாங்கி கொடுக்கும் பழக்கம் இருந்து  வந்தது.


மிளகு,  சீரகம், லவங்கம்,  பட்டை கிராம்பு, ஏலக்காய் போன்ற இயற்கையான பாதுகாப்பு பொருட்கள் இந்தியாவில் அதிலும் குறிப்பாக தென்னிந்தியாவில் திராவிட நாட்டில் மிகுதியாக கிடைத்தது. பாரதி பாடியது போல் வெற்றிலை கூட திராவிட நாட்டில் இருந்துதான் சென்றது.  பாக்கிஸ்தான், ஈரான், ஈராக் கடந்து ஆப்கானி்ஸதான் காபூல் நகரில் வைத்து மேற்கத்திய நாட்டினர்  இத்தகைய   இயற்கை பாதுகாப்பு பொருட்கள் மட்டுமின்றி முத்து,  பவளம் போன்ற பொருட்களை  வாங்கி கொள்ள,  மேற்கத்திய நாடுகளில் இருந்து கண்ணாடிகள், மது போத்தல்கள்,  குதிரைகள்  போன்றவற்றை பண்ட மாற்றாக வாங்கி வருவார்கள்.  


பண்டைய சங்க இலக்கியத்தில் அகம்,  புறம் என திணைகளை வகுத்தவர்கள் குறிஞ்சி,முல்லை, மருதம்,  நெய்தல், பாலை என ஐவகை நிலங்களாக பிரித்தவர்கள் பாலை நிலத்தில் வாழ்பவர்களின் தொழிலாக வழிப்பறி செய்தல், சூறையாடல் என வகுத்துள்ளது வரலாறு.  காபூல் செல்லும் வழி பாலைவனமாக இருந்தமையால் நிறைய வழிப்பறிகள் மூலமாக நிறைய இழப்புகள் ஏற்பட்டது. இதன் பொருட்டு மேற்கத்திய நாடுகள் நாம் ஏன் இந்த பாலைவனமாக உள்ள பாதையினை நம்பி இருக்க வேண்டிய நிலை.  நாமே நேரடியாக திராவிட நாட்டிற்கு கடல் வழியாக பாதையை கண்டறிந்தால் இத்தகைய இழப்புகளை தவிர்க்கலாம் என யோசித்து அதற்கான முயற்சிகளில் முழுமூச்சுடன் இறங்கினார்கள். 


இயக்குநரும், ஒளி பதிவாளருமான சந்தோஷ் சிவன அவர்களுடைய உருமி என்ற திரைப்படம கூட மிளகு வாங்க கோழிக்கோட்டில் வந்து இறங்கிய வாஸ்கோடகாமா பற்றிய கதைதான். பிரபுதேவா,  பிருத்விராஜ் ஆகியோர் நடித்திருப்பார்கள்.  இந்த இடத்தில் ஒரு பெட்டி இல்லாமல் குட்டி செய்தி.  

ஆப்கானிஸ்தான் காபூலில் இருந்து இந்திரபிரஸ்தம் என அழைக்கப்பட்ட டெல்லி  வரை வந்து இருந்தனர்.  பாபருடைய காலத்திற்கு பிறகு அவருடைய மகன் ஹுமாயுன் ஒப்புக்கு சப்பாணியாக இருக்க,  ஹுமாயுன் சகோதரர்கள் ஆளுக்கொருபுரமாக  ஆவர்த்தனம் செய்ய,  ஹுமாயுன் தனது  கர்ப்பினி மனைவியுடன் கிளம்பினார் இந்தியாவை விட்டு. கர்ப்பிணியாக  இருந்த மனைவியுடன் பாக்கிஸ்த்தான் அமரக்கோட்டையில் இருந்தாராம். கர்ப்பிணியாக இருந்த ஹுமாயுன் மனைவி  தனக்கு மாதுளம் பழம் வேண்டுமென கேட்க,  அந்த பாலைவன பகுதியாக ஒட்டகத்தில் சென்ற வியாபாரியை வழிமறித்து அவருடைய பெட்டிகளை பறிக்க,  பெட்டிகள் முழுக்க மாதுளம் பழங்கள் இருந்ததாம்.  மாதுளம் பழங்களை மனைவியிடம் கொண்டு வந்த ஹுமாயுன் 'உனது வயிற்றுக்குள் இருப்பது யார்,  இந்த பாலை வனத்தில் கூட  நீ கேட்ட மாதுளம் பழங்கள் கிடைக்கிறதே ' என சிரித்தாராம்.  வயிற்றுக்குள் இருந்தவர்தான் தீன்இலாஹி என தேடிய அக்பர்.  மகேஷ்பாபு என்ற இயற்பெயர் கொண்ட மகேஷ்பாப அக்பருடன் கொண்ட நட்பால் பின்னாளில் பீர்பால் என மாற்றியதும், பீர்பாலின் மகளை அக்பரே மணம் முடிக்க விரும்பிய கதை ஜோதா அக்பர் என திரைப்படமானது வரலாறு.  


பாக்கிஸ்தான்,  ஈரான் ஈராக்,  ஆப்கானிஸ்தான், ஜெருசலம் என பாலைவன பிரதேசத்தில் வழிப்பறி,கொள்ளை,  கொலை என இருந்தவர்களை திருத்தி நல்வழிப்படுத்திய  நல்ல மனிதர்கள்தான் முகமது நபி அவர்களும், யேசு அவர்களும்.  பாலைவன பிரதேசத்தில் அந்நாளில் கொலை, கொள்ளை என ஈடுபட்டமையால்  நிறைய ஆண்கள் உயிரிழக்க நேர்ந்தது,நிறைய பெண்களுடைய வாழ்வு நிராதரவாக நிற்க, பல இளம் பெண்களை மணம் முடிக்க போதிய ஆண்களே இல்லாத நிலையிலேதான் இஸ்லாமியர்கள் பலதார மணம் முடிக்க முகமது நபி அறிவுரை வழங்கியதாக வரலாறு.  


மிளகு,  சீரகம், ஏலக்காய், பட்டை,  கிராம்பு,  லவங்கம்,  வெற்றிலை தாரளமாக,  ஏராளமாக விளைந்த திராவிட நாட்டை தேடி மேற்கத்தியர்கள் கிளம்பிய நிலையில்தான் இந்த உலகத்தினுடைய நீளம்,  அகலமே உலகம் அறிந்து  கொள்ளும் வாய்ப்பாக அமைந்தது என்றால் மிகையல்ல,  உண்மையும் கூட.

மரேற்கு பாக்கிஸ்தான், கிழக்கு பாக்கிஸ்தான் என இருந்த நாடு வங்க தேசம் என தனி நாடாக பிரிந்த நிலையில், மேற்கு வங்கத்து கவி.ரவிந்திரநாத் தாகூர்,  தேசப்பிதா  காந்தி அவர்களுக்காக  மகாத்மா என்ற பட்டத்தை வழங்கிவருமான தேசிய கவி இயற்றிய தேசிய கீதத்தில் "திராவிட உத்தல வங்கா 'என்ற சொற்றொடர் இன்று வரை நீடிக்கிறது.  இந்திய தேசிய கீதம் எழுதிய ரவீந்திர நாத் தாகூர்தான் வங்க தேசத்திற்கும் தேசிய கீதம் எழுதியவர்.  

பாபர் முதல்,  ஹுமாயுன்,  அக்பர்,  ஜஹாங்கீர், ஷாஜஹன்,  ஒளரங்கசீப் வரை எவரும் எட்டி பார்க்க இயலாத நாடாக இருந்ததுதான் திராவிட நாடு . இந்தியா மொழிவாரி மாநிலங்களாக பிரிக்க படாத காலத்தில் தமிழகம்,  கேரளம், கர்நாடகம்,  ஆந்திரம் என அனைத்துமே ஒன்றுபட்ட திராவிட நாடாக இருந்ததுதான்  வரலாறு.  


டி எம். நாயர்,  பனகல் அரசர், தியாகராயர்,  அயோத்திதாசர்,  பெரியார் என திராவிட ஆளுமைகள் வசம் சமூக நீதிக்காக விடிவெள்ளியாக திராவிட நாடு இருந்ததும்,  இருப்பதும்,  இருக்க போவதுமே வரலாறு.  வெல்க திராவிடம்.  


வீ.வைகை சுரேஷ்,தேனி. 


தொடர்புக்கு:- 9677448300.