Sunday 31 October 2021

இவரை நினைக்காமல் இருக்க முடியுமா..!! - ஜெ. ரேகா பிரியதர்ஷினி

 இவரை நினைக்காமல் இருக்க முடியுமா..!! - ஜெ. ரேகா பிரியதர்ஷினி


சேலம்_மாவட்டம்

இமயமாய்

உயர்வதற்கு

ஓயாமல் உழைத்தாரே

இவரை நினைக்காமல் இருக்க முடியுமா..!


நேர்கொண்ட பார்வையாய்

நிமிர் மிகு நடைபோட்டவரே

இவரை நினைக்காமல் இருக்க முடியுமா..!


எல்லோர்க்கும் நல்லவராய்

எவர் கேட்டார்

என்றாலும்

இல்லையெனச்

சொல்லாத வரை

இவரை நினைக்காமல் இருக்க முடியுமா..!


கல்லாதார் கற்றிடவே

ஒற்றும் வகைச் செய்வதிலே

கணக்கின்றிச்

செய்திட்டவரை

இவரை நினைக்காமல் இருக்க முடியுமா..!


கசப்பென்றே

எவரிடத்தும்

காணாத

பண்பாளரை

இவரை நினைக்காமல் இருக்க முடியுமா..!


இல்லாதார்

வளர்ந்திடவும்

ஏற்றங்கள்

கண்டிடவும்

ஏராளம் செய்திட்டவரை

இவரை நினைக்காமல் இருக்க முடியுமா..!


#எளிமைக்கு

உருக்கொடுத்தவர்

#இனிமைக்கு

கருக்கொடுத்தவர்

எளிமையும்

இனிமையும்

இவரிடமே

பிறப்பு

அவர் தானே

சேலத்தின்

சிறப்பு

மாவீரர்

வீரபாண்டியார்

இவரை நினைக்காமல் இருக்க முடியுமா..!


#பெரியாரின்

துணிவும்

#அண்ணாவின்

கனிவும்

#கலைஞரின்

அன்பும்

#தாரகமந்திரமாக

ஏற்று நடந்தவரை

இவரை நினைக்காமல் இருக்க முடியுமா..!


தமிழ்நாட்டில்

#விவசாய_மக்கள் மேம்படவே

மாண்புமிகு

#முதல்வர்_கலைஞர் அவர்களிடம்

#இலவச_மின்சாரத்தை

கேட்டு பெற்றுத்தந்தவரை

இவரை நினைக்காமல் இருக்க முடியுமா..!


சேலம் மாவட்டத்தில்

#இரயில்வே_கோட்டம்

பெற்றுத் தந்தவரை

இவரை நினைக்காமல் இருக்க முடியுமா..!


கல்வி அறிவு

வளர

சேலம் மாநகரில்

பெரியார் #பல்கலைக்கழகம்

வலிமையாய்

அமைத்தவரை

இவரை நினைக்காமல் இருக்க முடியுமா..!


சேலத்து மக்களுக்கு

வேலைவாய்ப்பை

உருவாக்க

#கரும்பு_இதயமாய்

#இரும்பு_மனிதராய்

போராடி

இரும்பு #தொழிற்சாலையை

நிறுவியவரை

இவரை நினைக்காமல் இருக்க முடியுமா..!


சேலம் வளரவே

தொழில் வளம்

உயரவே

#விமான_நிலையத்தை

விருப்பமாய் அமைத்தவரை

இவரை நினைக்காமல் இருக்க முடியுமா..!


#புகழ்மணக்க

வாழ்ந்தவரை

இல்லார்க்கு

#அகல்விளக்காய்

இருந்தவரை

இவரை நினைக்காமல் இருக்க முடியுமா..!


மாங்கனி

உள்ளவரை

சேலத்தின் பெருமை

சொல்லும்

உண்மையான

தொண்டர்கள்

உள்ளவரை

வீரபாண்டியாரின்

அருமை வெல்லும்


திமுக அரசு அமைந்தது

கண்டும்

மாண்புமிகு

தமிழக

#முதலமைச்சராக

பொறுப்பு ஏற்றுள்ள

நம் உயிர் தலைவர் தளபதி

முத்துவேல் கருணாநிதி

#மு_க_ஸ்டாலின்

அவர்களை ,

#வீரபாண்டியார் அவர்கள்

விண்ணிலிருந்து

வாழ்த்துகிறார்

மலர் தூவி

வாழ்த்துகிறார்

தமிழகம் செழிக்கட்டும் வீரபாண்டியார்

புகழ் நிலைக்கட்டும் ...!!


--திருமதி ஜெ. ரேகா பிரியதர்ஷினி

முன்னாள் மேயர்

சேலம் மாநகராட்சி

No comments:

Post a Comment