Sunday, 31 October 2021

காவிரி படுகையில் கழகம் வளர்த்த பூண்டியார்

 காவிரி படுகையில் கழகம் வளர்த்த பூண்டியார்


ரியாதைக்குரிய திரு.பூண்டி என்கிற கிருஷ்ணசாமி அவர்கள் நீதி கட்சியின் உறுப்பினராக 1944 ஆம் ஆண்டு வரை இருந்தார்.பின் தந்தை பெரியார் மீது கொண்ட ஈர்ப்பால் திராவிடர் கழகத்தில் உறுப்பினராய் இணைந்து கழகத்தின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்தார். பின் 1949 ஆம் ஆண்டு திராவிடர் கழகத்திலிருந்நு திராவிட முன்னேற்ற கழகம் தோன்றிய போது பேரறிஞர் அண்ணா மற்றும் மண்ணின் மைந்தரும் தன் நண்பருமாகிய கலைஞர் மீது கொண்ட பற்றால் கழகத்தில் இணைந்து கொரடாச்சேரி கிளை கழகத்தின் செயலாளராய் தான் மறைந்த 1982 ஆம் ஆண்டு வரை இருந்தார்.1969 ஆம் ஆண்டு பேரறிஞர் அண்ணா அவர்கள் மறைந்தார் அதே ஆண்டு ஜீன் மாதம் தமிழ்நாட்டிலேயே முதன்முறையாக அண்ணா அவர்களுக்கு சிலை அமைத்து அப்போது முதல்வராக இருந்த தலைவர் கலைஞர் அவர்களை கொண்டு திறந்தார்.


பிறகு அவருடைய மூத்த மகன் கலைச்செல்வம் அவர்கள் 1984 இல் திமுக வின் கொரடாச்சேரி நகர கழக செயலாளர் ஆனார்.1993 ஆம் ஆண்டு வைகோ அவர்கள் கழகத்திலிருந்து பிரிந்தபோது கொரடாச்சேரி நகரத்தில் அவரருக்கு எதிராக கலைஞர், பேராசிரியர் அவர்களின் தலைமையில் மாபெரும் பொதுகூட்டத்தை நடத்தினார்.அன்றிலிருந்து பூண்டி செல்வம் என்று அழைக்க பெற்றார்.அப்போது இருந்த அசாதாரன சூழ்நிலையில் தஞ்சையில் நடந்த திமுக பொதுக்குழு செயற்குழுவின் போது பெரும் இளைஞர் படையோடு பொதுகுழுவிற்கு பாதுகாப்பு அரணாய் இருந்தார்.1997 ஆம் ஆண்டு திருவாரூர் மாவட்டம் உருவான பிறகு அதன் மாவட்ட துணை செயலாளராகவும் பின் மாவட்ட செயலாளர் தேர்தலில் வெற்றி பெற்று கழகத்தை பட்டி தொட்டி எங்கும் வளர்த்ததோடு இளைஞர் பட்டாளத்தின் பாசத்திற்குரியவராக விளங்கினார்.2006 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் கழகத்தின் கூட்டணியை திருவாரூர் மாவட்டத்தில் உள்ள நான்கு தொகுதிகளிலும் வெற்றி பெற செய்தார்.கழக முன்னோடிகளுக்கு பொற்கிளி வழங்கும் விழாவினை மாநாடு போல் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களின் தலைமையில் நடத்தினார்.அந்த விழாவிற்கு தளபதி அவர்களை குதிரைகள் பூட்டிய சாரட் வண்டியில் அழைத்து சென்றதை இன்றளவவும் தளபதி அவர்கள் நினைவு கூர்ந்து பேசுவார்.தலைவர் கலைஞரால் கழகத்தின் காளை பூண்டி செல்வம் என்று அழைக்கபட்டவர்.


2007 ஆம் ஆண்டு அவர் மறைவிற்கு பிறகு தமிழத்தில் நடைபெற்ற இடைதேர்தல்களில் சிறப்பாக பணியாற்றி தனக்கு ஒதுக்கப்பட்ட பகுதிகளில் கழக வேட்பாளரை பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வைத்து கழகத் தலைவர் கலைஞர் மற்றும் தளபதி அவர்களின் நம்பிக்கையை பெற்று 2008 ஆம் ஆண்டு கழகத்தின் அமைப்பு தேர்தலில் போட்டியின்றி வெற்றி பெற்று மாவட்ட செயலாளரானார் பூண்டி செல்வம் அவர்களின் தம்பி பூண்டி.கே.கலைவாணன்தன் அண்ணின் பாதையில் கழகத்தை கட்டுகோப்பாக வளர்த்து வந்தார்.2009 ஆம் ஆண்டு அண்ணா நூற்றாண்டு விழாவில் அப்போது நடந்த இடைத்தேர்தல்களில் சிறப்பாக பணியாற்றியதற்காக கழக தலைவர் கலைஞர் அவர்கள் பூண்டி.கே.கலைவாணன் அவர்களுக்கு தங்க சங்கிலி பரிசளித்தார்.கழக தலைவர் முத்தமிழறிஞர் மீது கொண்ட அளப்பறிய பற்றால் 2011 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் திருவாரூர் தொகுதிக்கு தன் தலைவர் பெயரில் மட்டுமே அனைத்து நிர்வாகிகளையும் விருப்ப மனு அளிக்க வைத்து கலைஞரிடம் நீங்கள் திருவாரூர் தொகுதியில் தான் போட்டியிட வேண்டும் என்று உரிமையோடு கேட்டுக் கொண்டார்.தலைவரும் தன் உடன்பிறப்புகளின் கோரிக்கையை ஏற்று திருவாரூர் தொகுதியில் முதல்முறையாக போட்டியீட்டு 50,249 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.


அதிமுக அரசின் கடும் நெருக்கடிக்கிடையில் மாவட்ட மக்களுக்காக தலைமை அறிவிக்கும் பல போராடங்களை முன்னேடுத்ததால் 40க்கும் மேற்பட்ட வழக்குகள் பாய்ந்தன. 2011 ஆம் ஆண்டு ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின் ஜெயலலிதா அம்மையார் அரசு சமச்சீர் கல்வி திட்டத்தை நிறுத்தியது, இதனை கண்டித்து தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்த தலைவர் கலைஞர் உத்தரவிடுகிறார், அதனை திருவாரூர் மாவட்டத்தில் எழுச்சி மிகு போராட்டமாக நடத்தினார் மாவட்ட கழக செயலாளர் திரு பூண்டி.கே.கலைவாணன் அவர்கள் 

அந்த மறியல் போராட்டத்தில் பள்ளிக்கு வந்த மாணவன் பேரூந்தில் திரும்பி செல்லும் போது எதிர்பாராத விதமாக தவறி விழுந்து இறக்க நேரிட்டது.சட்டமன்ற தேர்தலில் திருவாரூர் மாவட்ட திமுக பணியாற்றிய விதம் அடுத்து நடக்க இருந்த உள்ளாட்சி தேர்தல் இவை எல்லாம் ஏற்கனவே மாவட்ட செயலாளர் மீது கோபத்தில் இருந்த அதிமுக தலைமைக்கு பொய் வழக்கு போட நல்ல வாய்ப்பாக அமைந்தது அந்த போராட்டம், டெல்டாவை பொறுத்தவரை அன்றும் பூண்டி.கே.கலைவாணன் அவர்கள் மீதே வழக்கு பதிவானது .


தற்போதைய முதல்வர் தலைவர் தளபதியார் திருவாரூர் வருகையின் போது திருத்துறைபூண்டி சாலையில் பூண்டி.கே.கலைவாணன் அவர்களை சுற்றி வளைத்து கைது செய்ய முயல்கையில், என்னையும் கைது செய்யுங்கள் என்று சாலையில் உட்கார்ந்து தர்ணா செய்தார் , இருவரையும் கைது செய்தனர். அன்று மாலை தளபதியாரை மட்டும் விடுவித்து, மாவட்ட செயலாளரை சிறையில் அடைத்து மேலும் பல பொய் வழக்குகளை அம்மையார் அரசு பதிவு செய்தது .


பொய் வழக்கில் மாவட்ட செயலாளர் கைதானதை தொடர்ந்து கண்டன பொதுக்கூட்டம் நடத்த தலைமை உத்தரவிட்டது, அதன் பெயரில் தற்போதைய கழகத்தின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அவர்களும், துணை பொதுச்செயலாளர் பொன்முடி அவர்களும் தலைவர் கலைஞரிடம் சென்று உங்களின் உடல்நிலை சரியில்லை, நாங்கள் மட்டும் சென்று போராட்டத்தில் கலந்து கொள்கிறோம் என்று கூறிய நிலையில், தலைவர் கலைஞரோ கலைவாணன் நான் வென்ற தொகுதியின் மாவட்ட கழக செயலாளர், அவருக்காக நானே வரவேண்டும் என்று கூறி போராட்டத்தில் கலந்து கொண்டார்... 


அப்போது தலைவர் கலைஞர் பேசியது கலைவாணனுக்கு பெயர் வைத்ததே நான்தான் அதனால்தான் என்னவோ நான் அடைக்கப்பட்ட பாளையங்கோட்டை சிறையிலேயே அவரும் அடைக்கப்பட்டு இருக்கிறார் என்று பேசினார், இறுதியாக தொண்டனுக்காக வந்த தலைவர் என்று அன்றைய நக்கீரன் இதழில் ஒரு பக்கத்திற்கு கட்டுரையும் வந்தது. மாவட்ட கழக செயலாளர் 8 மாதமாக பாளையங்கோட்டை சிறையில் இருந்தார் அந்த காலகட்டத்தில் நடந்த உள்ளாட்சி தேர்தலில் சிறையில் இருந்தபடியே மாவட்ட கவன்சிலர் பொருப்புக்கு போட்டியிட்டு வென்றார் , அம்மையார் பதிவு செய்த அனைத்து வழக்களும் ஆதாரமற்ற பொய் குற்றச்சாட்டு என நிருபனம் ஆனது.


சிறை சென்று மீண்ட பிறகு புத்துணர்வுடன் கழகம் எதிர்கட்சியாக இருந்த 10 வருடமும் தலைமை அறிவித்த அனைத்து போராட்டங்களையும் எழுச்சியுடன் நடத்தி காட்டினார். 2013 ஆம் நடைபெற்ற கழக அமைப்பு தேர்தலில் மீண்டும் திருவாரூர் மாவட்ட செயலாளராக போட்டியின்றி தேர்வானார்.2016 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் தலைவர் கலைஞர் அவர்கள் திருவாரூரில் மீண்டும் போட்டியீட்டு தமிழ்நாட்டிலேயே அதிக வாக்கு வித்தியாசத்தில் (68,366) வெற்றி பெற மிக தீவிரமாக களப்பணியாற்றினார்.2016 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் திருவாரூர் மாவட்டம் திருத்துறைபூண்டி தொகுதியை 45 ஆண்டுகளுக்கு பிறகு திராவிட முன்னேற்ற கழகம் வெல்ல பெரு முயற்சி செய்து வெற்றி பெற வைத்தார். தலைவர் கலைஞர் நம்மை விட்டு மறைந்த பிறகு நடந்த திருவாரூர் சட்டமன்ற இடைத்தேர்தலுக்கு முதல்முறையாக விருப்ப மனு அளித்தார்.கழகம் அளித்த வாய்ப்பினை பயன்படுத்தி 64,571 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.தஞ்சாவூர் - நாகை சாலை விரைந்து செப்பனிட 5 மணி நேரம் சாலை மறியல் போராட்டம் ,விவசாயிகளுக்காக பல ரயில் மறியல் போராட்டங்களை நடத்தினார்.அதிமுக அரசின் கடும் நெருக்கடிக்கிடையில் மாவட்ட மக்களுக்காக தலைமை அறிவிக்கும் பல போராடங்களை முன்னேடுத்ததால் 40 க்கும் மேற்பட்ட வழக்குகள் பாய்ந்தன. கழகம் எதிர்கட்சியாக இருந்த இந்த ஆண்டின் தொடக்கம் வரை ஒன்றிய அரசால் கொண்டு வரப்பட்ட வேளாண் சட்டங்களுக்கு எதிராக தலைவர் தளபதி அறிவித்த டிராக்டர் பேரணி சென்றதால் பல வழக்குகள் பாய்ந்தது.அவரின் அண்ணன் பூண்டி செல்வம் அவர்களின் மகனும் (வயது -22) இந்த டிராக்டர் பேரணியில் கலந்து கொண்டதற்காக ஒரு மாத காலம் புதுக்கோட்டை சிறையில் அடைத்தது அடிமை அரசு.2021 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலிலும் பெருவாரியான வாக்குகள் வித்தியாசதில் வெற்றி பெற்று திருவாரூர் மாவட்ட மக்களின் நீண்ட கால குறைகளை முதல்வர் தலைவர் தளபதியாரின் சிறப்பான ஆட்சியில் சரி செய்து கொண்டு இருக்கிறார்.

1 comment:

  1. Casinos Near Harrisburg | MapyRO
    The state is awash 청주 출장샵 in online gambling, and 광주광역 출장샵 you can't 충주 출장마사지 have 안동 출장마사지 a casino near Harrisburg, but there are casinos and poker 익산 출장안마 rooms in town.

    ReplyDelete