Sunday 31 October 2021

திராவிட இயக்க தீரர் மன்னை நாராயணசாமி - நரசிம்மன் நரேஷ்

 திராவிட இயக்க தீரர் மன்னை நாராயணசாமி - நரசிம்மன் நரேஷ்


அய்யா #மன்னை_நாராயணசாமி அவர்களின் நினைவுநாள். இவர் போன்ற கொள்கையாளர்களை  நினைக்காவிடில்  கொள்கைகளுக்கு நினைவஞ்சலி செலுத்த வேண்டியிருக்கும். காலைமுதல் வெவ்வேறு பணிகளில் இருந்தாலும் பதிவு செய்ய வேண்டும் என கட்டாயத்தால் நினைவில் உள்ளதைக் கொண்டு நினைவஞ்சலி செய்கின்றேன். 


தமிழ்நாடே புயல், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நேரம். நினைவுகள் சரியென்றால்... 70களின் இறுதிப்குதியாக இருக்கலாம்.  தலைவர் கலைஞர் அவர்கள் தமிழகம் முழுவதும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட  பயணம் செய்து பாதிக்கப்பட்டவர்களுகு ஆறுதல் தெரிவித்து வந்தார். தஞ்சைப்பகுதியில் பாதிப்பு அதிகம் , அங்கு பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து ஆறுதல் தெரிவித்து, மன்னையை நோக்கி கார் சென்றுக் கொண்டிருந்தது. தலைவர் உடன் பேராசிரியர், மன்னை நாராயணசாமி அவர்கள் பயணித்தனர். அப்போது எதிரே வந்த ஒருவர் தலைவர் காரை மறித்தார். 


அவரிடன் என்னாச்சுப்பா எனக் கேட்க , அவரோ மன்னார்க்குடி பாலத்தின் அருகே அதிமுக மற்றும் காங்கிரசார் தலைவர் கலைஞருக்கு கறுப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடத்த கூடியிருப்பதாக சொன்னார். காரைவிட்டு கீழறிங்கிய மன்னை அய்யா தலைவரிடம் " நீங்க காப்பி சாப்டுட்டு பத்து நிமிடம் கழிச்சு வாங்க, நான் முன்னாடிப் போறேன் என வேறொரு காரில் சென்றார். 


பத்து நிமிடத்திற்கு பின்னர் தலைவர் பயணித்த கார் அங்கு சென்ற போது பாலத்தின் அருகே தண்ணீர் அல்லாத மணல் பகுதியில் அதிமுக, காங்கிரசார்  சிதறி ஓடிக் கொண்டிருந்தனர். அவர்களது செருப்புகள் எல்லாம் வழியில் கிடந்தன. அடுத்த சில அடி தூரத்தில் மன்னை நாராயணசாமி தலையில் முண்டாசுக் கட்டிக் கொண்டு கழகத் தோழர்களுடன் வெற்றி முழக்கமிட்டு தலைவர் கார் நோக்கி வந்து சால்வை அணிவித்து வரவேற்றனர். அப்படி ஒரு மாயாஜாலத்தை நடத்தியவர் அய்யா மன்னை நாராயணசாமி அவர்கள். 


இன்னொரு கறுப்புக் கொடி நிகழ்வும் நினைவுக்கு வருகின்றது. நெடுமாறன் காங்கிரஸ் தலைவராக இருந்த காலக்கட்டம் தலைவர் திருமணவிழா ஒன்றில் கலந்துக் கொள்ள மதுரை செல்வதாக அறிவிப்பு வெளியாகின்றது. தலைவர் மதுரைக்கு வரும்போது கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் செய்யப்போவதாக நெடுமாறன் அறிவிக்கின்றார். ஆயிரமாயிரம்  வாஞ்சிநாதன்கள் நம்மிடம் உண்டு என்பதை மெய்ப்பிப்போம் என அறிக்கை விடுகின்றார். தலைவர் கலைஞர் பின்வாங்கவில்கை. மதுரைக்கு சென்றாக வேண்டும் எனக் கிளம்பும் போது நானும் வருவேன் என தலைவர் உடன் பாதுக்காப்பாளராக கிளம்பினார்  மன்னை அய்யா மற்றும் ஆர்காட்டார் ஆகியோர். பயணத்தில் சின்ன மாற்றம் செய்யப்பட்டு கொடைரோட்டில் தலைவர் இறங்கி கார்மூலம் மதுரை சென்று நிகழ்வுகளில் கலந்துக் கொண்டார். 


அப்போது பேசிய அண்ணன் வை.கோ, ஆயிரமாயிரம் வாஞ்சிநாதன்கள் நெல்லையில் இருந்து வந்திருக்கின்றோம் எனப் பேசினார். தலைவர் பேசுகையில் வாஞ்சிநாதன் யாரென உங்களுக்கு தெரியும் , ஆஷ் துரையை சுட்டுக் கொன்றவர். எனக்கு வாஞ்சி நாதன் தேவையில்லை.  என் மீதும் அண்ணாவின் இலட்சியத்தின் மீதும் வாஞ்சை கொண்ட வாஞ்சைநாதன்கள் வேண்டும் என பேசினார்.  அப்பயணம் முழுவதும் தலைவருடன் மெய்க்காப்பாளராக பயணித்தவர் மன்னை அய்யா அவர்கள். 


இதனை தான் வாழ்நாள்  தலைவர் கலைஞர் அவர்கள் அன்னை வயிற்றில் பிறந்தேன் மன்னை மடியில் வளர்ந்தேன் என குறிப்பிட்டு இருப்பார்.  


இப்படியாக தலைவர் உயிருக்கு குறிவைத்து  உடலுக்கு குறிவைத்து தாக்குதல் செய்யபட்ட பல சர்ந்தப்பங்களில் , ஆப்பக்கூடல் மேடை சரிவு , வண்டிப்பெரியார்  கலவரம், சைதை கலவர்ம் உடன் இருந்தோர் பட்டியலில் இடம் பிடித்தவர் மன்னை நாராயணசாமி அவர்கள்.


கழகத்தலைவருக்கு மட்டுமில்லாமல் பகுதி கழகத் தொண்டர்களுக்கும் உறுதுணையாக இருந்த அய்யாவை தொகுதி, பகுதி, மாவட்டம் என்றில்லாமல் மாநிலமே மறவாமல் இருக்க வேண்டும். 


அய்யாவிற்கு நினைவஞ்சலி.

No comments:

Post a Comment