Sunday 31 October 2021

தந்தை பெரியார் பிறவாமல் இருந்திருந்தால்? - வ மு சு நித்தியானந்தம்

 தந்தை பெரியார் பிறவாமல் இருந்திருந்தால்? - வ மு சு நித்தியானந்தம்



1. பண்ணை அடிமைகளாகவே பெருவாரியான மக்கள் இருந்திருப்பார்கள்.

2. கல்விக் கிடைத்து இருக்காது. அதிகபட்சமாக எழுதப் படிக்க மட்டுமே தெரிந்து இருக்கும் மக்களுக்கு .

3. சாதிய பின்னொட்டு இருந்திருக்கும்.

4. அந்திய மொழித் திணிப்பு உச்சபட்சமாக இருந்திருக்கும்.

5. கும்பிடுறேன் சாமி நீடித்திருக்கும்.

6. ஆங்கிலம் படித்திருக்க முடியாது.

7. இப்போது பலர் மேற்கொள்ளும் சர்வ சாதரணமான விமானப் பயணம் கனவில் மட்டுமே நடந்திருக்கும்.

8. உடல் உழைப்பு வேலைகளில் மட்டுமே மக்கள் இருந்திருப்பார்கள்

9. கோபுர தரிசனம் மட்டுமே கிடைத்து இருக்கும்

10. பெண்களுக்குக் கல்வி அறவே கிடைத்து இருக்காது.

11. பெண்களின் வளர்ச்சி பற்றியான விழிப்புணர்வு ஏற்பட்டு இருக்காது .

12. சமத்துவம் என்பதைப் பற்றிய சிந்தனையே மக்களிடம் ஏற்பட்டுவிடாமல் பார்த்திருப்பார்கள்.

13. இட ஒதுக்கீடு இருந்திருக்காது.

14. தேசிய கட்சிகள் மாநிலத்தில் ஆட்சி செய்து இருப்பார்கள்.

15. மாநில சுயாட்சி பற்றிய சிந்தனை கூட இல்லாமல் இருந்திருக்கும்.

16. தேவதாசி முறை நீடித்திருக்கும்.

17. திருமணத்தைப் புரோகிதர் தான் செய்ய வேண்டும் எனக் கட்டாயமாக்கி இருப்பார்கள்

18. பெண்களுக்குச் சொத்துரிமைச் சட்டம் வந்திருக்காது .

19. சுயமரியாதையின் முக்கியத்துவத்தை உணரும் வாய்ப்பு குறைவாக இருந்திருக்கும்

20. தீண்டாமைக் கொடுமைகள் அதிகமாக இருந்திருக்கும்

21. சட்டமன்றத்தில் நமக்கு எதிரான சட்டங்கள் நமக்குத் தீங்கானச் சட்டங்கள் அதிகமாக நிறைவேற்றப்பட்டிருக்கும்.


- வ மு சு நித்தியானந்தம்

No comments:

Post a Comment