Sunday 31 October 2021

சீமான் வீட்டு செல்ல பிள்ளை (செல்வச்_சீமான்) - விருதாச்சலம் உயர்திரு ஐயா M.S (எ) M_செல்வராஜ் EX.MLA

சீமான் வீட்டு செல்ல பிள்ளை (செல்வச்_சீமான்) - விருதாச்சலம்

உயர்திரு ஐயா M.S (எ) M_செல்வராஜ் EX.MLA 


முன்னாள் திமுக அமைப்புச் செயலாளர் முன்னாள் விருதை சட்டமன்ற உறுப்பினர் அவர்களுக்கு 24 ஆண்டு நினைவு_அஞ்சலி


நெய்வேலி நகரில் ஐயா அவர்களின் நினைவாக வட்டம் :26 ல்  படிப்பகம் இன்றும்  செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.


ஐயா அவர்களுக்கு நம்முடைய இதயபூர்வமான இதய அஞ்சலி செலுத்துவோம்


அய்யா பற்றிய சிறப்பு பார்வை


கழக முன்னாள் அமைப்புச் செயலாளர்.


கழக முன்னாள் தணிக்கை குழு உறுப்பினர்.


கழக முன்னாள் ஒருங்கிணைந்த தென்னார்க்காடு மாவட்ட  செயலாளர்.


விருத்தாசலம் தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்

.

குறிஞ்சிப்பாடி தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்

.

ஒருங்கிணைந்த தென்னார்க்காடு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி முன்னாள் தலைவர்


1957ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று தலைவர் கலைஞர் பொதுச் செயலாளர் பேராசிரியர் இவர்களோடு கழகத்தின் முதல் 15 சட்டமன்ற உறுப்பினர்களில் ஒருவராக பணியாற்றியவர்.


நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் தொழிலாளர் முன்னேற்ற சங்க ஸ்தாபகர்களில் ஒருவர்

.

நெய்வேலி தொமுச வின் முதல் பொதுச் செயலாளர்.


இவரது பெயரில் நெய்வேலி நகரம் வட்டம்-26ல் செல்வராசு மன்றம் 1967 ல் துவக்கப்பட்டு இன்றுவரை சிறப்பாக செயல்பட்டு வருகிறது.


நெருக்கடி கால சிறைக் கொடுமைகளை அனுபவித்தவர் சென்னை சிறைச்சாலையில் 

மிசா கைதியாக தளபதியோடு ஓராண்டு சிறை தண்டனையை அனுபவித்தவர்

இப்படி அவரது செயல்பாடுகளை பெருமைகளை சொல்லிக் கொண்டே போகலாம்.


எளிமையானவர் இனிமையானவர் 

தொண்டர்களை மதிக்கக்கூடிய தூய மனம் படைத்தவர்.


விருத்தாசலம் பேருந்து நிலையம் விருத்தாசலம் மார்க்கெட் கமிட்டி உழவர் சந்தை மற்றும் பல அரசு அலுவலங்கள் இவரின் சொந்த இடத்தில் இயங்கி வருகிறது.

அது அனைத்தும் அரசாங்கத்திற்கு தானமாக அவர் வழங்கியது.

No comments:

Post a Comment