Sunday 28 February 2021

தலைவர் தளபதி! - கோபிநாத் கணேசன்

 தலைவர் தளபதி! - கோபிநாத் கணேசன்


அவர் ஏன் நம் தலைவர்?


வணக்கத்திற்குரிய சென்னை மேயராக,உள்ளாட்சித்துறை அமைச்சராக,துணை முதல்வராக அவரது நிர்வாகத் திறன் முன்னமே நிரூபிக்கப்பட்ட ஒன்று என்பதால் அவர் நம் தலைவர்.

தலைவர் கலைஞரே சொன்னது போல்,"ஸ்டாலின் என்றால் உழைப்பு உழைப்பு உழைப்பு" என்ற வாக்கிற்கிணங்க இந்த இனத்தின் மீட்சிக்காக ஓயாமல் உழைக்கிறார் என்பதால் அவர் நம் தலைவர்.


நாளுக்கொரு வடிவில் ஆதிக்கம் நம்மை அச்சுறுத்தும் போதெல்லாம் அதை எதிர்த்துத் தடுத்து நிறுத்த அவரால் மட்டுமே முடியும் என்பதால் அவர் நம் தலைவர்.

நுழைவுத்தேர்வை ஒழித்த கலைஞர் வழியில் நீட்டை ஒழித்துக் கிராமப்புற மாணவர்களின் மருத்துவக் கனவை நிறைவேற்ற அவரால் மட்டுமே முடியும் என்பதால் அவர் நம் தலைவர்.

கலைஞர் கொடுத்த இலவச மின்சாரம் பறிபோகாமல் உழவு செழிக்க வைக்க அவரால் மட்டுமே முடியும் என்பதால் அவர் நம் தலைவர்.


நூறாண்டுகளாய்க் கட்டிக்காத்து வந்த இடஒதுக்கீட்டு உரிமை பறிபோகாமல் நம் கல்வி வேலைவாய்ப்பு உரிமையை அவரால் தான் பாதுகாக்க முடியும் என்பதால் அவர் நம் தலைவர்.

ஒன்றிய அரசு ஊழியர்களுக்கு இணையாகத் தமிழ் நாட்டு அரசு ஊழியர்களும் நிலையான ஊதியம் பெற்றுப் போராட்டச் சூழலுக்குத் தள்ளப்படாமல் வேலை செய்ய வைக்க அவரால் மட்டுமே முடியும் என்பதால் அவர் நம் தலைவர்.


தமிழ் நாட்டின் உரிமையை டெல்லியிடமிருந்து போராடிப் பெற்றுத்தர அவரால் மட்டுமே முடியும் என்பதால் அவர் நம் தலைவர்.


அண்ணாவின் மாபெரும் தமிழ்க் கனவான மாநில சுயாட்சியை நிலைநாட்ட அவரால் மட்டுமே முடியும் என்பதால் அவர் நம் தலைவர்.


இன்னமும் எளிமையாகச் சொல்ல வேண்டுமென்றால்,ஒரு நடுத்தரக் குடும்பத்தில் பிறந்த நான் என் வாழ்வாதாரப் பிரச்சனைக்குப் போராடுவதா இல்லை அதைச் சகித்துக் கொண்டு பிழைப்பைப் பார்ப்பதா என்று குழம்பும் போதெல்லாம்,எனக்காகவும் என் சந்ததிக்காகவும் போராட " நான் இருக்கிறேன் " என்று ஒரு தகப்பன் ஸ்தானத்தில் அவர் இருப்பதால் அவர் நம் தலைவர்.


மூன்று ஆண்டுகளுக்கு முன்,கலைஞர் செய்திகள் தொலைக்காட்சியில் தளபதி பற்றிய சிறப்பு நிகழ்ச்சி ஒன்றில் பேசும் வாய்ப்புக் கிடைத்தது.


அதில் தளபதியிடம் ஏதேனும் கோரிக்கை இருக்கிறதா என்ற நெறியாளர் கேள்விக்கு என் பதில், "கோரிக்கை எதுவுமில்லை. ஏனெனில் எதைச் செய்ய வேண்டும் என்று தளபதிக்குத் தெளிவாய்த் தெரியும்".


கோரிக்கை வைத்துத் தெரிந்து கொள்ள அவர் மற்றுமோர் அரசியல் தலைவர் இல்லை.

மாபெரும் தமிழ் இனத்தின் தலைவர் அவர்!


- கோபிநாத் கணேசன்



“தம்பி ஸ்டாலின் திரையால் அல்ல; சிறையால் பதவிக்கு வந்தவர். ஆம். மிசாச் சிறைவாசம் தான் ஸ்டாலினைத் தீவிர அரசியல்வாதி ஆக்கியது. மொட்டுச் சிறைக்குள் அகப்பட்ட காற்று நறுமணமாகி உலவுவது போல், ஸ்டாலினும் இன்று நறுமணமாகி உதவுகிறார். கூட்டுக்குள் இருக்கும் புழு சிறகுகள் பெற்றுப்பறப்பதைப் போல் ஸ்டாலின் இன்று சிறை வளர்த்த சிறகுகளால் உயரங்களில் பறக்கிறார்.


எரிமலைக்குப் பிறந்த இந்த அக்கினிக்குஞ்சைச் சிறைக்குள் அணைக்கப் பார்த்தார்கள். முடியவில்லை. இன்று அந்த அக்கினிக்குஞ்சு சென்னை நகரத்துத் தீபமாய் ஒளிவீசிக்கொண்டிருக்கிறது. பந்தை அடித்தால் அது மேலே எழும். ஸ்டாலின் பந்தாக இருந்தார். அவரை அடித்தார்கள். அவர் மேலே எழுந்துவிட்டார்.


ஸ்டாலின் இன்று பெற்றிருக்கும் உயர்வு வெறும் விலாசத்தால் கிடைத்ததல்ல. அவருடைய வியர்வையால் கிடைத்தது.”

- கவிக்கோ அப்துல் ரகுமான்




No comments:

Post a Comment