Tuesday 31 August 2021

அறிஞர் அண்ணா - விருதை சசி

 அறிஞர் அண்ணா  - விருதை சசி


ளையருக்கு மட்டுமின்றி இவ்வுலகை ஆளவரும்

நாளைய தலைமுறைக்கும் அண்ணா ஆனவன்

தடுக்கின்ற கயவர் கூட்டத்தை எந்நாளும்

அடுக்குமொழி உரையாலே சாய்க்கின்ற வீரனவன்…


பாரதத்தின் பெருமைகளை பாமரனும் படித்தறிய

திராவிட எழுத்தினிலே எளிமை புகுத்தவன்

மும்மொழித் திட்டத்தை முடக்கிவிட்டு நலமிகு

முதன்மை இருமொழிக்கு அதிகாரம் அமைத்தவன்…


மடமையான பாக்களை மக்களாக்க முயல்வதையே

கடமையெனக் கருதி கதைக்களம் கண்டவன்

குறள்நெறி சென்று கட்டுப்பாட்டு விதிகளை

அறங்குன்றாது அகத்தாலே முன்னம் காத்தவன்…


மொழிப்பற்றுடனே பெயர் சூட்டி அயல்மொழி

ஒழித்து திராவிடத் தேசத்தை தந்தவன்

வழியெங்கும் திரண்ட தொண்டர்கள் கண்ணீரும்

கழிந்த நாட்பெருமை நவில்கின்ற சரித்திரம்வன்…


எண்ணில் பிறர் உயர்வுதனை நிலைப்படுத்த

எண்ணாத் துறைதோறும் மேம்பாடு வகுத்தவர்

கண்ணியக் கொள்கையினில் குறைபாடு ஏதுமின்றி

கண்ணிமையாய் தற்காத்து அகிலம் ஆண்டவன்…



புண்ணிய தலப்பெருமை பாடாமல் வறுமைப்

புண்படராது மக்களைக் காத்து மன்னனவன்

அண்ணத்தின் நடுவமர்ந்த அடியேன் நாவினிலே 

அண்ணாத்துரை புகழுக்கு நிகரான வார்த்தையில்லை.



இரா.சசிகலா(விருதை சசி)

கெளரவ விரிவுரையாளர்,

தமிழாய்வுத்துறை,

அரசு மகளிர் கலைக் கல்லூரி,

சிவகங்கை.

9080033131

rsasivnr1989@gmail.com



No comments:

Post a Comment