Friday 10 January 2020

ஹோமியோபதியும், அலோபதியும் ஒரு ஒப்பீடு - மருத்துவர் நந்தினி ஸ்ரீ


AYUSHன் ஒரு குறிப்பிட்ட துறை ஹோமியோபதியில் சில சந்தர்ப்பங்களில், வெற்றிகரமாக நோய்களுக்கு சிகிச்சையளிக்கப் படுகிறது. இங்கு அதன் வரலாறு, செயல்பாட்டு வழிமுறைகளை ஆராய வேண்டும்.

         17ஆம் நூற்றாண்டில், ஒரு ஜெர்மன் மருத்துவர் சாமுவேல் கிறிஸ்டியன் ஹேன்மேன், ஹோமியோபதியைக் கண்டுபிடித்தார்இந்தக் கண்டுபிடிப்பு உடற்கூறியல், நுண்ணுயிரியல் மற்றும் நோய்க்கான கிருமிக் கோட்பாட்டிற்கு முன்னர், நவீன மருத்துவத்தின் அடிப்படை நுட்பங்களைக் கண்டறியும் முன்னரே வகுக்கப்பட்டது.

         பல தோல்வியுற்ற சோதனைகளுக்குப் பிறகு, சின்சோனா மரத்தின் பட்டையிலிருந்து கிடைத்த குயினைனை மலேரியாவுக்கு சிகிச்சையளிக்கப்  பயன்படுத்தினார். குயினைன் மலேரியா போன்ற அறிகுறிகளை உண்டாக்கியது. இந்த மருந்தின் முரண்பாடுகளை அறியாமலே அவர் ஹோமியோபதியின் முதல் விதியை உருவாக்கினார்.

1.   The Law of Similitude:

ஒரு குறிப்பிட்ட நோயைப் பிரதிபலிக்கும் அறிகுறிகளை உருவாக்கும் மருந்துகள் அதே அறிகுறிகளை ஏற்படுத்தும் நோய்களுக்கு சிகிச்சையளிக்கப் பயன்படுத்தப்படலாம்.

 2. The Law of Single Remedy:
         ஒரு கட்டத்தில் ஒரு நோய்க்கு ஒன்றுக்கு மேற்பட்ட தீர்வுகளை வழங்கக்கூடாது  அது வேலை செய்யவில்லை என்றால் அடுத்த தீர்வுக்கு செல்ல வேண்டும்ஒரே நேரத்தில் பல சிகிச்சைகள் வழங்கப்பட்டால், எந்த சிகிச்சை  தீர்வளித்தது என்று முடிவு செய்வது கடினம்.

 3. The Law of Minimum Dose:
குணப்படுத்தும் செயல்முறையைத் தூண்டுவதற்கு மிகச்சிறிய அளவிலான மருந்தையே ஒருவர் எடுக்க வேண்டும். எந்தவொரு தீர்வும் காணப்படுவதற்கு முன்னரே ஒரு மருந்தை அதிகமாகப் பயன்படுத்துவதால் அறிகுறிகள் மோசமாகிறது.

 4. The Law of Direction of Cure:
ஒரு நோய்க்கு சிகிச்சையளிக்கப்படாமல் விட்டுவிட்டால் அது எதிர்த் திசையில் நகரும்.

 5. The Law of Infinitesimal Doses:

         இந்த விதியின்கீழ், சின்சோனா மரத்தின் பட்டைகளிலிருந்து எடுக்கப்படும் சாறு போன்ற மருந்துகள் தண்ணீர் அல்லது ஆல்கஹாலில் dilute செய்யப்படும்போது அவற்றின் சிகிச்சை திறன் அதிகரிக்கின்றன என்று ஹோமியோபதி கூறுகிறது

         அதாவது ஒரு தொடர் நீர்த்த செயல்முறை (serial dilution process) சக்திவாய்ந்த மருந்தை உற்பத்தி செய்கிறது. இதில் 1:100 என்ற நீர்த்த அளவு 6 முதல் 30 முறை வரை மீண்டும் மீண்டும் நீர்க்கப் படுகிறது. ஒவ்வொரு நீர்த்தலுக்குப் பின்னும் அதை நன்றாக குலுக்குவதன் மூலம் மருந்தின் செயல்திறன் ஊக்குவிக்கப் படுவதாகச் சொல்கிறது.

 இதன் பொருள் 10,00,00,00,00 லிட்டர் கலவையில் உண்மையான மருந்து 1 மில்லி மட்டுமே இருக்கும், மீதமுள்ளவை தண்ணீர் அல்லது ஆல்கஹால் ஆகும்.

THE PLACEBO (மருந்துப்போலி) THEORY:

         இந்த நீர்த்த திரவம், பெரும்பாலும் சிறிய குளுக்கோஸ் பந்துகளில் ஊற்றப்படுகிறது, அவை ஒரு நாளைக்குப் பல முறை உட்கொள்ளப்பட வேண்டும்ஒரு நாளைக்கு 4-5 doses தருவதன் மூலம்  இது ஒரு மருந்துப்போலி போன்ற விளைவைத் தூண்டக்கூடும்.

         பல புகழ்பெற்ற அறிவியல் பத்திரிகைகள் ஹோமியோபதி முறை மருந்துப்போலியாக செயல்படக்கூடும் என்பதையும் அதற்கு எந்த அறிவியல் அடிப்படையும் இல்லை என்பதையும் மீண்டும் மீண்டும் உறுதிப்படுத்தும் ஆய்வுகள்  வெளியிட்டுள்ளன.

         ஹோமியோபதியின் The theory of disease with three miasmsன் படி எல்லா மனித நோய்களுக்கும்

Sychosis
Syphilis
Psora

என்ற மூன்று miasms (predispositions) தான் காரணமாக இருக்கின்றன, அவற்றையே மூலமாகக் கொண்டு சிகிச்சைகள் இயக்கப்படுகின்றன. எனவே, மூலக்காரணத்தை அறியாமல் அறிகுறிகளை நோக்கி சிகிச்சைகள் இயக்கப்படுகின்றன.

TREATING SYMPTOMS, NOT DISEASES.

ஹோமியோபதியின் அடிப்படைக் கொள்கைகளைப் பார்க்கும்போது, எந்தவொரு கோளாறிற்கும் சிகிச்சையளிக்க போதுமான மருந்து இல்லை என்பது தெளிவாகிறது.

எனவே, நவீன விஞ்ஞான விளக்கத்தின்படி, சில நோய்களில் ஹோமியோபதியின் செயல்திறன் அதன் மருந்துப்போலி விளைவுக்கு மட்டுமே காரணமாக இருக்க முடியும்.

ஆனால் முழுமையாக ஆராய்ச்சி செய்யப்பட்ட evidence based pharmacologyஇன் படி, மருந்தின் செயல்திறனுக்கு முக்கியக் காரணி உடலில் மருந்தின் OPTIMUM DOSAGE ஆகும்.

HOMEOPATHY IS SYMPTOM BASED, ALLOPATHY IS EVIDENCE BASED

ஆனால், பொதுப்புத்தியில் நவீன மருத்துவத்தைத் தவிர்ப்பதற்கான முக்கிய காரணமாக முன்வைக்கப் படுவது, 'அதிக மாத்திரைகள் உட்கொண்டால் உடலுக்குக் கேடு'.

நவீன மருத்துவத்தில், ஒரு மருந்து கண்டுபிடிக்கப் பட்டு பயன்பாட்டுக்கு வருவதற்கு குறைந்தது 10 வருடங்கள் ஆகின்றன. இந்த 10 வருடங்களில் அம்மருந்து குறிப்பிட்ட நோயைத் தீர்க்கக் கூடிய தன்மை உள்ளதா என்று அதன் செயல்திறன், அதன் செயல்பாட்டு வழிமுறைபக்கவிளைவுகள், முரண்பாடுகள் பற்றியெல்லாம் பல்வேறு கட்டங்களாக ஆய்வுகள் மேற்கொள்ளப் படுகிறது. ஆய்வுமுடிவில் நிரூபிக்கப் படாத மருந்துகள் அங்கேயே கழிக்கப் படுகின்றன.

 பயன்பாட்டிலும் ஒவ்வொரு மருந்தும் Risk-benefit ratio அடிப்படையிலே வழங்கப் படுகிறது. அதாவது அந்த மருந்தை உட்கொள்ளாமல் நோய் உண்டாக்கும் விளைவுகள், அந்த மருந்தை உட்கொள்வதினால் ஏற்படக் கூடிய பக்கவிளைவுகளைக் காட்டிலும் மோசமானதாக அமைந்துவிடும் என்னும் நிலையிலே மருந்துகள் பரிந்துரைக்கப் படுகின்றன.

 பல நேரங்களில் அந்தப் பக்கவிளைவுகளை கட்டுப்படுத்துவதற்காக இன்னொரு மருந்தும் சேர்த்து தரப்படுகிறது. இங்கு ஒரே மருந்து தரும்போது நோய் மட்டும் தீர்ந்தாலும், இரண்டு மருந்துகள் உட்கொள்ளும்போது பக்கவிளைவுகள் இருந்தால் அவையும் தீர்க்கப்பட்டு அதிகம் நன்மையே ஏற்படுகிறது. 'அதிக மருந்துகள் எடுத்துக் கொண்டால் உடலுக்குத் தீங்கு' என்கிற பொதுப்புத்தி இங்கேயே உடைபடுகிறது.

மேலும் தொடர்சிகிச்சை தேவைப்படும் நீரிழிவு, ரத்தக் கொதிப்பு போன்ற நோய்களின் சிகிச்சைக்கு பொதுவான protocol வடிவமைக்கப் பட்டு செயல்படுத்தப் படுகின்றன. அதன் அடிப்படையில், நோயின் தீவிரத்தையும், நோயாளியின் இதர உடலுபாதைகளையும் கணக்கில் கொண்டே, மருந்துகளின் எண்ணிக்கை, ஒவ்வொன்றுக்குமான dosage எல்லாம் முடிவு செய்யப்பட்டு வழங்கப்படுகின்றன. சிகிச்சை காலத்தில் நோயின் response பொறுத்து எண்ணிக்கையும் dosageஉம் குறித்த காலஇடைவெளிகளில் titrate செய்யப்படுகின்றன. இந்த protocols,  ஆய்வுகளின்படி The Best Cure தரக் கூடியதாக நிரூபிக்கப் பட்டதாகவே  வடிவமைக்கப் படுகின்றன

இந்த அடிப்படையை உள்வாங்காமல் அதிக மருந்துகள் உட்கொள்வது தீங்கு என்னும் பொதுப்புத்தியில் உழலாமல், நவீன மருத்துவத்தை எல்லா வழிகளிலும் பயன்படுத்திக் கொள்வதே  அறிவுடைமை ஆகும்.

 ஆயினும், ஆயுஷின் அனைத்து நடைமுறைகளும் போலி கைவைத்தியம் என்று பரிந்துரைக்கவில்லை. ஆனால் அவற்றுடன் தொடர்புடைய அறிவியல் சான்றுகள் இல்லை.

நவீன மருத்துவத்தில் எங்கேனும் எல்லா பதில்களும் இல்லாத நிகழ்வுகளில், பதில்கள் கிடைக்கும்வரையில் இந்த நடைமுறைகள் செயல்படக்கூடும். ஆனால் அவை அலோபதிக்கு ஒரு complementary சிகிச்சையாகப் பார்க்கலாமே அன்றி, அதற்கு மாற்றாகப் பார்க்க முடியாது!


No comments:

Post a Comment