Sunday 28 February 2021

இனப்பகையின் சிம்ம சொப்பனம் - இளம் வழுதி

 இனப்பகையின் சிம்ம சொப்பனம் - இளம் வழுதி


முடியரசு காலந்தொட்டுக் குடியரசு காலம்வரை அதிகாரம் யார் கையில் இருக்கிறது என்பதைப் பொறுத்தே அம்மக்களின் வாழ்வு தீர்மானிக்கப்படுகிறது அதிகாரம் என்பதே உலகின் எல்லாவற்றையும்விடப் பெரிதாக உள்ளது சர்வ வல்லமை பொருந்திய அமைப்பாகவும் இருந்துவருகிறது ஒரு மன்னன் தன் ஆளுகைக்கு உட்படாத இடங்களைப் போர் முறையிலோ ராஜதந்திர முறையிலோ சூழ்ச்சி முறையிலோ கைப்பற்ற அதற்காகப் பல காரியங்களையும் அமைப்பையும் உருவாக்கி அதன் மூலம் தன் எண்ணத்தை நிறைவேற்றிக் கொள்ள ஆளுகையை விரிவுபடுத்திக் கொள்ளச் செய்தார்கள். இதுவே இன்றைய குடியரசு காலத்திலும் நடைபெறுகிறது என்று சொன்னால் ஆச்சரியமாகத்தான் இருக்கும் ஆனால் அதுவே உண்மை ஆகும் அன்றைய அதிகாரத்திற்காக நடைபெற்ற போர்களே இன்றைய அரசியல் போராட்டங்களாகத் தங்களை உருமாற்றிக் கொண்டுள்ளது இதனை நுட்பமாகக் கவனித்தால் பல ஆயிரம் ஆண்டுகளாக இதில் தொட்டுத் தொடர்ந்து வரும் ஒரு இனப்பகை நம்மால் உணர முடியும்.


இந்தியத் துணைக் கண்டத்தின் வரலாறு என்பது ஆரிய திராவிடப் போர் ஆகும் முடியரசு காலம் தொட்டுக் குடியரசு காலம் வரை அது தொட்டுத் தொடர்ந்து வருகிறது இந்த இனப் பகையின் அழிவிலிருந்து மக்களைக் காக்க பல்வேறு காலங்களில் பல்வேறு தலைவர்கள் உருவானார்கள் இந்த இனப் பகைக்கும் அதிலிருந்து மக்களைக் காக்கும் தலைவர்களுக்கும் ஒரு கதை இருக்கிறது வாங்க அந்தக் கதையைச் சொல்கிறேன்.


உலகத்தில் ஆதிமனிதன் தோன்றிய காலத்திலிருந்து வேட்டையாடும் சமூகமாக இருந்தது எதிரில் இருக்கிற மிருகத்தை மனிதன் வேட்டையாடினால் அது மனிதனுக்கு இரை அதுவே மனிதனை மிருகம் வேட்டையாடினால் மனிதன் அந்த மிருகத்துக்கு இரை என்கிற காலத்திலேயே மனிதனுக்குத் தன்னுடைய எண்ணத்தை வெளிப்படுத்த ஒரு மொழி தேவைப்பட்டது அந்த மொழிதான் "தமிழ்" இன்னைக்கும் ஸ்டைலா, கெத்தா, மாஸா, கம்ப்யூட்டர்லயும் விளையாடுற மொழி, உலகத்தோட மூத்த மொழி செம்மொழி தமிழ் அந்த மொழியைப் பேசிய வாழ்ந்த மக்கள் தான் திராவிடர்கள்.அந்த மக்கள் எல்லாத் துறைகளிலும் சிறந்து விளங்கினார்கள் சமதர்மமும் சமூகநீதியும் சகோதரத்துவமும் கொண்டு மகிழ்ச்சி நிறைந்து இருந்த அந்த மக்களைப் பிரித்து விளையாட, வேட்டையாட ஒரு ஓநாய் கூட்டம் வருமென்று அவர்கள் எதிர்பார்க்கவில்லை ஆனால் அது நடந்தது.


இப்படி மகிழ்ச்சியா இருந்த மக்கள் வீரமும் வானளாவிய கட்டிடங்களைக் கட்ட அறிவும் அதேசமயத்தில் மரணத்தோடு விளையாடும் விளையாட்டை ரசித்து விளையாடுபவர்களாகவும் இருந்தார்கள் இதைப்பார்த்து ஆரியக்கூட்டம் இவர்கள் அறிவைக் கொண்டும் வீரம் கொண்டும் வீழ்த்த முடியாது என்கிற முடிவுக்கு வந்தாங்க அப்ப அவங்க கையில் எடுத்த ஆயுதம் தான் சூழ்ச்சி மரணத்தோடு விளையாடும் மக்களை மந்திரம் சொல்லி பயமுறுத்தினார்கள் அந்தப்பயம் மக்களோட முடிஞ்சிருந்தா பரவால்ல இது மன்னர்கள் வரை போச்சு அதோட விளைவு மக்களும் மன்னர்களும் மந்திரத்துக்கு, ஆரியர்களுக்குப் பயந்து கொஞ்சம் கொஞ்சமா மக்கள், மன்னர்கள், ஆட்சி அதிகாரம் எல்லாம் ஆரியர்களின் சூழ்ச்சிக்கு முன்னாடி மண்டி போட்டு மக்கள் அடிமையாகவும் மன்னர்கள் வெறும் தலையசைக்கும் பொம்மையாகவும் மாறினார்கள். வேதம், புராணம், இதிகாசம், அவங்களோட சட்ட, திட்டங்களை எல்லாம் ஆட்சி அதிகாரத்தைக் கொண்டு செயல்படுத்தினார்கள் இதனால அந்தத் திராவிட மக்களுடைய மொழி கொஞ்சம் கொஞ்சமா சிதைக்கப்பட்டது வரலாறு திரிக்கப்பட்டுப் பொய்யான வரலாறு அவர்களுடைய பிள்ளைகளுக்குக் கற்பிக்கப்பட்டுக் கலையும், அறிவியலும் மாசுபட மொத்தத்துல அந்த மண்ணும் மக்களும் சூனியத்தால் ஒரு நாள் ரெண்டு நாள் இல்ல 2000 வருஷம் சூழப்பட்டது கேட்கவே பயமா இருக்கு இல்ல ஆமா அது நடந்துச்சு.


நடந்தது ஆரியர்களால் அதைத் தட்டி கேட்க யாராவது வர மாட்டார்களா என்று அந்த மக்கள் தவித்துக் கண்ணீரும் ஏக்கமும் அந்த மக்களின் முகத்தில் எப்போதும் இருந்துகொண்டே இருந்துச்சு. இரண்டாயிரம் வருஷத்துக்குப் பிறகு வாராது வந்த மாமணி இருளைக் கிழித்துச் சூரியனா எதிரிகளிடம் செங்குருதி எடுத்துப் போர் புரிந்த மக்களை விடுவிக்க வந்த ஒரு கிழவன் ஆமா ஒரு கிழவன்"வந்தார் அவரைப் பார்த்து இந்த ஆரியக் கூட்டம் கிழவன் தானே நம்மள என்ன செய்யப் போறானு நினைச்சானுக ஆனால் அந்தக் கிழவன் செஞ்சதுதான் 2000 வருஷத்திலேயே நடந்த பெரிய சம்பவம் தரமான சம்பவம் இன்றைக்கு வரைக்கும் அந்தச் சம்பவத்தைப் பத்தி தான் ஊருக்குள்ள பேச்சு.


அந்தத் தடியோடு வந்த கிழவன் தான் "தந்தை பெரியார்"போருக்கு வந்தாச்சுச் சும்மாவா போக முடியும் ஆயுதம் வேண்டாமா அதைப் பயன்படுத்திச் சண்டை செய்ய ஆட்கள் வேண்டாமா இதை யோசிச்ச பெரியார் ஊருக்கு ஊருக்கு போனாரு இளவட்ட பசங்கள்ள இருந்து பெரியவங்க வரைக்கும் அத்தனை பேர் கிட்டேயும் இந்த ஆரிய பயலுக செஞ்ச அநியாயத்தை எடுத்துச் சொன்னார் கூட்டத்தைக் கூட்டி சண்டைக்குத் தயாரானார் அறிவு ஆயுதத்தை எடுத்துக் கொடுத்து தன்னோட சிறந்த மாணவன் மூத்த பிள்ளையான பேரறிஞர் அண்ணாவ களத்தில் இறக்கினார் பெரிய சண்டை சும்மாவா இரண்டாயிரம் வருஷத்துப் பகை ஆட்சிக்கட்டிலில் வெளியே பெரியாரும் ஆட்சிக்கட்டிலில் அண்ணாவும் போட்ட சண்டையில் ஒருத்தனும் மிஞ்சல ஓடி ஒளிய ஆரம்பிச்சது ஆரியக்கூட்டம் முதல் முறையாக அண்ணா தலைமை ஆரியர்களே இல்லாத அதாவது பார்ப்பனர்களே இல்லாத ஆட்சி அமைந்தது பல பார்ப்பனர்கள் ஏமாற்றப்பட்ட அந்த மக்களுக்குப் பொழுது விடிஞ்சதும் உதயசூரியனால் இப்படிப் போராடிக் கிடைத்த சுதந்திரத்தைச் சமூகநீதியை சமதர்மத்தைப் பெரியாரும் அண்ணாவும் இல்லாத சமயத்தில் அபகரிக்க வந்த ஆரியக் கூட்டம் திரும்பவும் முயற்சி செய்தது அப்பத்தான் அண்ணாவுக்குத் தம்பி பெரியாரின் மாணவர் கலைஞர் வந்தார் ஒரு பக்கம் சண்ட செய்யணும் இன்னொரு பக்கம் இந்த மக்களைக் காப்பாத்தணும் வாழ்வாதாரம் இல்லாத மக்களுக்கு வாழ்வு கொடுக்கணும் இவங்க உரிமையை மீட்டுக் கொடுக்கணும் இப்படி ஒருபுறம் ஒரு சண்டையும் ஒருபுறம் மக்களைக் காப்பாற்ற பணியில் கலைஞர் ஓடிக்கொண்டே இருந்தார் ஓடி ஒழிந்து வந்தவனெல்லாம் திரும்பி தலையைக் காட்ட ஆரம்பிச்சான் கலைஞர் தானே என்ன செஞ்சுருவாரு அப்படின்னு வெளியில் வர ஆரம்பித்த கூட்டத்திற்குத் தலையைக் காட்டாமல் ஓடி ஒழியிர மாதிரி சம்பவங்கள் தலைவர் செஞ்சுக்கிட்டு இருந்தாரு. தலையைக் காட்டினால் தான் வாழ ஒட்ட நறுக்கிவிடுவார் என்று தெரியுமே இப்படியே கொஞ்ச நாள் போச்சு ஊருக்கு உள்ள சில்லற பசங்கள சேர்த்துக்கிட்டு சீன் போட ஆரம்பிச்சாங்க இந்த ஆரியக் கூட்டம் அதுக்கெல்லாம் அசராம கலைஞர் நின்னாரு இன்னும் எத்தனை நாளைக்குத்தான் கலைஞர் அவர்களைக் காப்பாற்ற முடியும் இவனுங்க ஒவ்வொரு நாளும் பாத்துக்கிட்டு இருந்தானுங்க ஒருநாள் கலைஞரும் போய்த்தானே ஆகணும் அப்படின்னு காத்துக்கிட்டு இருந்தாங்க அந்த நாளும் வந்துச்சு ஆமா கலைஞர் இப்போ இல்லை.


ஒளிஞ்சிருந்த ஓநாய் கூட்டம் இன்றைக்கு ஊருக்குள்ள வெளியே தலை காட்ட ஆரம்பித்தது சில சில்லறைகளைச் சேர்த்துக் கொண்டு வந்து கோட்டையை திறந்து விட, இந்தச் சின்னப் பசங்க அந்த ஆரியக் கூட்டத்திற்குப் பின்னாடி துணையாக நிற்க அவர்கள் ஆட்சி, அதிகாரம், பணம், படை என எல்லாத்தையும் ஆரியர்கள் கைக்குள் வைத்துக்கொண்டு விட்டார்கள். ஊரே பயப்படும்படி உள்ள வந்த அந்தச் சத்தத்தில் பயந்து ஊருக்குள் இருந்த மக்கள் ஓடி ஒளிய அதற்கு இடமும் கிடைக்கல இந்த ஓநாய்களுக்கு இரையாகிவிடுவோமோ என்கிற கவலையில் வெளியில் தலை காட்டவே இல்லை அப்பதான் ஒரு சிங்கத்தோட கர்ஜனை சத்தம் கேட்டுச்சு ஒட்டுமொத்த கூட்டமும் ஒரு நிமிஷம் பயந்து உறைந்து நின்று பார்த்துவிட்டு மக்களெள்லாம் அந்தச் சிங்கத்துக்குப் பின்னாடி சென்றார்கள்.


அந்தச் சிங்கம் தான் தளபதி மு க ஸ்டாலின் கலைஞரின் மகன். என்னடா இது பெரியார் போன பிறகு அண்ணா வந்தாரு அண்ணா போன பிறகு கலைஞர் வந்தார் இப்ப கலைஞர் போன பிறகு இப்போ தளபதி ஒருத்தர் வந்து நிற்கிறார் யாருடா இந்தத் தளபதினு கேட்டால் அப்போ தான் இங்க இருக்கிற அடிவருடி சில்லரபசங்க சொன்னாங்க அவர்தான் கலைஞரோட தளபதி. தளபதியா? மு க ஸ்டாலின் தளபதி தான். 14 வயசுல அண்ணாவை அழைத்துக் கூட்டம் நடத்தினார் காமராஜர் அண்ணா எம்ஜிஆர் பல திராவிடத் தலைவர்கள் கூட நல்ல அறிமுகம் பெற்ற இந்தியத் துணைக்கண்டத்தில் மிசா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு ஓராண்டு காலம் சிறையில் இருந்து இன்னைக்குத் தலைவராகத் திகழ்கிறார்.

இந்தியாவில் முதன்முதலில் ஒரு கட்சிக்கு இளைஞர் அணியை உருவாக்கி ஒரு படை தயாரித்துக் கொடுத்தவரும் இந்த மு க ஸ்டாலின் தான். இவர் ஒருத்தர் தான் ஆட்சி இருக்கும் போதும் ஆட்சியில் இல்லாத போதும் மக்களுடன் நேரடி தொடர்பில் இருப்பார். மேயராக, சட்டமன்ற உறுப்பினர், அமைச்சர், துணை முதலமைச்சர் என்று ஆட்சியிலும் அதிகாரத்திலும் எல்லா இடங்களில் சென்றாலும் மக்களைத் தேடிப்போவது இவர்தான் இவர் எதிர்க்கட்சியாக இருந்தாலும் இவர் தான் முதலமைச்சர் ஆளும் கட்சியாக இருந்தாலும் இவர் தான் முதலமைச்சர். கலைஞர் தான் 50 ஆண்டுகளாக இந்த மக்களைக் காப்பாற்ற பெரும் பொறுப்பு ஏற்றுக் கொண்டிருக்கும் போது அவர் கையில் செங்கோல் இருந்தது எழுதுகோல் இருந்தது ஆனால் இவர் கையில் இருந்ததோ போர்வாள் ஒரு தளபதியாய் இந்த மக்களோட ஒவ்வொரு உரிமைக்காகவும் போர்க் குரல் எழுப்பக் கூடிய அந்தப் போர் வாளை வெச்சுக்கிட்டுக் கூட்டம் கூட்டி மேடையேறி ஒவ்வொரு கூட்டத்திலும் இளைஞர்களைச் சேர்த்து இளைஞர்களை வைத்து அரசியல் படுத்தி அந்த அரசியல் மூலமாகச் சிறந்த நிர்வாகி என்ற பட்டம் பெற்றவர். நிர்வாகத்தில் சிறந்து விளங்கியவர்.


இன்னைக்குச் சர்சர்னு நீங்க போற பாலம் எல்லாம் இந்த ஸ்டாலின் கட்டியதுதான் ஒருவேளை ஒரு மழைக்காவது சென்னை கார்ப்பரேஷன் இன்னைக்கு இருக்குதுன்னா? சென்னை முழுக்கப் பாதாள சாக்கடை திட்டம் இவர் போட்டதுதான். சென்னையில் இருக்கிற கார்ப்பரேஷன் ஸ்கூல் தான் சிறந்ததுனு சொன்னா அது இவரோட காலத்தில் இவர் மேயராக இருக்கும்போது செய்த நல திட்டங்கள் தான் இன்னைக்குச் சென்னை சிங்காரச் சென்னை மாறியது. அந்தச் சிங்கார சென்னையில் தான் நம்ம ஒய்யாரமாகக் காரில் சார் சார் என்று போய்க் கொண்டிருக்கிறோம்.


இவர் மேல ஏகப்பட்ட புகார் ஏகப்பட்ட குற்றச்சாட்டுகள் ஏகப்பட்ட கேலி கிண்டல் நக்கல் நையாண்டி எல்லாத்தையும் பார்த்தவர் ஆனால் எப்போதுமே அசராதவர் எதுக்குமே கலங்காத ஒரு சண்டை செய்வதற்கு எப்போதும் களத்திலேயே நிற்கிறார் மோடியா இருந்தாலும் சரி லேடியா இருந்தாலும் சரி கெத்து அரசியல் செஞ்சவரு அந்த அலெக்சாண்டருக்கு நிகராக ராஜேந்திர சோழனுக்கு நிகராக ராஜராஜ சோழனுக்கு நிகராகச் சண்டை செஞ்சுக்கிட்டே இருப்பாரு தமிழர்களுக்காகத் தமிழ்நாட்டுக்காகத் தமிழ்மொழிக்காக. மொழிக்கு ஒரு பிரச்சனையா முதலில் குரல் கொடுப்பார் மக்களுக்கு ஒரு பிரச்சினையாக முதலில் குரல் கொடுப்பார் மாநில உரிமையை மீட்டுக் கொடுக்கப் போராடுவார் இடப்பிரச்சனை நீதிமன்றம் போவாரு சட்டத்தின் துணைகொண்டு அத்தனையையும் செய்து முடிப்பார் இவர் கையில் இருப்பது அறிவாயுதம், அண்ணா கொடுத்த அறிவாயுதம், கலைஞர் கொடுத்த அறிவாயுதம் அந்த அறிவாயுதம் இருக்கும் இடம் அண்ணா அறிவாலயம் இவர் வெறும் ஒரு அரசியல் கட்சிக்கு மாத்திரம் தலைவர் கிடையாது திராவிட இனத்தின் நூறாண்டு காலத் தத்துவத்தின் தலைவர் பார்ப்பனரல்லாதார் மக்களின் இன விடுதலைக்காகத் தொடங்கப்பட்ட நீதிக்கட்சியின் தொடர்ச்சி திமுக என்றால் அதன் நான்காவது பேரரசர் திராவிட இனத்தின் ஒப்பற்ற தளபதி இன்றைய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்.


-இளம் வழுதி
“பந்தை அடித்தால் மேலே எழும்

உன்னை அடித்தார்கள் - நீ

அக்கினிக் குஞ்சாய் எழுந்திருக்கிறாய்!

உன்னை ஊதி அணைத்து விடுவது எளிதல்ல

நீ ஆயிரம் விளக்காய் எரிகிறாய்!”


கவிக்கோ அப்துல் ரகுமான்No comments:

Post a Comment