Sunday 28 February 2021

மு.க. ஸ்டாலினாகிய நான்.... - ரைஸ்

மு.க. ஸ்டாலினாகிய நான்.... - ரைஸ்


ட்டாயம் ஒலிக்க வேண்டும்

ஆரியத் திமிர் மண்ணோடு மண்ணாய் மாய்த்துப் போக!

திராவிடமும் தமிழும்

வாழையடி வாழையாய்த் தழைத்தோங்க!


ஆரிய அடிமை ஆட்சி

அடியோடு ஒழிந்து போக!

தலை நிமிர் தமிழனின்

தலைமையில் தமிழகம் மிளிர!


சாதி மதத் துவேசம்

மடிந்து மாண்டு போக!

மத ஒற்றுமையும் நிம்மதியும்

இம்மண்ணில் மீண்டும் மலர!


NRC CAA எனும்

மனித எதிரி பதங்கள்

அகராதியிலிருந்தே

அடியோடு ஒழிந்து போக!


கற்றோர்கள் மீண்டும் கண்

போலப் போற்றப் பட!

கல்வியின் தரம் மலை போல்

மீண்டும் ஏற்றம் பெற!


NEET எனும் அரக்கன்

நாதியற்று ஓடிப் போக!

அனிதாக்களின் கனவுகள்

தடையின்றி நிறைவேற!


மூட நம்பிக்கையும் போலி மருத்துவத்தையும்

ஓட ஓட விரட்டிட!

பகுத்தறிவும் அறிவியலும்

பாலர் முதல் பாட்டன் வரை

அறிந்து தெளிந்திட!


வளர்ந்த நாடுகளுக்கு இணையாக

நம் தமிழகம் மென்மேலும் வளர!

அது உலகே வியக்கும் மாநிலமாய்

உயரப் போவதைக் காண!


மு.க. ஸ்டாலினாகிய நான்....

கட்டாயம் ஒலிக்க வேண்டும்!


-ரைஸ்


அவரை “துணை முதல்வர்” என்று சொல்வது கூட, நீங்கள் எல்லாம் அவரைப் பாராட்டுவதைப் பார்த்தால், போற்றுவதைப் பார்த்தால், பத்திரிக்கைகளிலே அவரைப் பற்றி எழுதுவதைப் பார்த்தால் அவர் உழைப்பைப் பார்த்தால், "துணை முதல்வர்” என்பதற்கு ஆங்கிலத்தில் "டெபுடி சீப் மினிஸ்டர்” என்று கூறுவீர்கள். ஆனால் எனக்குத் "துணையாக இருக்கின்ற அமைச்சர்” என்றுதான் நான்

கருதுகின்றேன். (பலத்த கைத்தட்டல்) அந்த அளவிற்கு எனக்குத் துணையாக அவர் செயல்படுகின்றார்.


நான் என்ன கருதுகிறேன் என்பதை, என்ன நினைக்கிறேன் என்பதை அறிந்து கொண்டு அந்த நினைப்பை நிகழ்ச்சியாக ஆக்குவதற்கும்; நான் கருதுவதைக் காட்சியாகக் காட்டுவதற்கும்; நான் எண்ணுவதை அப்படியே திண்ணியமாகச் செய்து முடிப்பதற்கும் அவர் தன்னுடைய திறமையைக் காட்டி வருவதைத்தான் இங்கே நீங்கள் கண்டீர்கள். அதைத்தான் நீங்கள் போற்றுகின்றீர்கள்."

- கலைஞர் கருணாநிதி


No comments:

Post a Comment