Saturday 30 May 2020

இந்தியாவில் பார்ப்பனீயமும் அதன் செயல்பாடுகளும் - வெ. பா. செல்வக்குமரன்

இந்தியாவில் பார்ப்பனீயமும் அதன் செயல்பாடுகளும் - வெ. பா. செல்வக்குமரன்

முன்னுரை:
ந்தியாவில் அரசு ரீதியாக அங்கீகரிக்கப்பட்ட பிரதமர், ஜனாதிபதி போன்ற பதவிகளை தாண்டிய உச்சபட்ச அதிகாரமிக்க பதவி உண்டென்பது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்!? ஆம், ராஷ்ட்ரிய ஸ்வயம் சேவக் எனப்படும் ஆர். எஸ். எஸ்'ஸின் தலைமை பீடமே அது. இந்த ஆர். எஸ். எஸ் என்றால் என்ன!? அதன் சித்தாந்தங்களும், நோக்கங்களும் என்ன!? என்பதை பற்றி இக்கட்டுரையில் பார்க்கலாம்.

ஆரியர்கள் எனப்படும் பார்ப்பனர்கள்:

"மனுதர்மம்" என்னும் நூலில், பிரம்மனின் தலையில் இருந்து பிறந்ததாக தாங்களே எழுதி வைத்து கொண்டு, இல்லாத 'கடவுள்' என்ற ஒருவரால் அந்த மனுதர்மம் எழுதப்பட்டதாகவும், நாங்கள் கடவுளின் பிரநிதிகள் என்றும், மற்றவர்கள் பிறப்பின் அடிபடையில் தங்களுக்கு கீழானவர்கள் எனவும், அந்த கீழானவர்கள் தங்களுக்கு கட்டுபட வேண்டுமென்றும், தங்களை மீறி எதுவும் செய்துவிட கூடாதென்றும், போன்ற ஆதிக்க மானோபான்மை சிந்தனையுள்ளவர்களே 'பார்ப்பனர்கள்' எனப்பட்டனர். இவர்களின் தொழில், இறைவனுக்கு பூஜை செய்வதும், திருமணம் போன்ற சுபகாரியங்களுக்குற், இறந்தவர்களுக்கான திதி போன்ற காரியங்களை நடத்துவதாகவும் இருந்தது. காலபோக்கில் இவர்களது சிந்தனைகள் ஒன்றிணைந்து மனுதர்மத்துடன் ஒன்றிணைந்து பார்ப்பனீய சித்தாந்தந்தம் என்ற பெயரில் அரசியலில் இறங்க வழி ஏற்படுத்தியது.


நிகழ்கால பார்ப்பனீயத்தின் தோற்றம்:
'கேசவ பலிராம் ஹெட்கேவர்' என்பவரால் 1925ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 27ம் தேதி மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் தோற்றுவிக்கபட்ட 'ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கம்' என்ற இந்துமகாசபையின் மறு பிறப்பானது, இந்தியா என்னும் மதசார்பற்ற நாட்டை இந்துத்வா நாடாக மாற்றுவதென்னும் பார்ப்பனீய குறிகோளுடன் தொடங்கபட்டு, இயங்குகின்றது. ஆர். எஸ். எஸ்'ஸின் தேர்தல் அரசியல் பிரிவாக பாரதீய ஜனதா கட்சியும், கல்வி பிரிவாக அகில பாரதிய விஷ்வ பரிசீத்தும், ஏணைய இணை அமைப்புகளாக இந்து மகாசபா, இந்துமுண்ணனி, இந்து மக்கள் கட்சி, விஸ்வ இந்து பரிசீத், பஜ்ரங்தள் என பல்வேறு அமைப்புகள் உள்ளன.

பார்ப்பனீயத்தின் செயல்பாடுகள்:

பார்ப்பனீயம் அதன் சித்தாந்தத்தை நிறைவேற்றும் பொருட்டு எல்லா வழிகளிலும் உழைத்து வருகின்றது. இந்தியாவில் அடிதட்டு துறைகளில் கூட உச்சபட்ச அதிகாரத்தில் ஏதேனும் ஒரு பார்ப்பனரோ, அல்லது பார்ப்பனீயத்திற்கு கட்டுபட்ட கைகூலிகளோ இருப்பர். அவர்களின் வேலை, ஒருபக்கம் சாமானியர்கள் முதற்கொண்டு அனைவரிடமும் பார்ப்பனீய சித்தாந்தகளை பிரயோகித்து அவர்கள் கஷ்டபடுவதை கண்டு ரசித்து கொண்டே மறுபக்கம் "இந்துத்வா இந்தியா" என்ற அவாள்களின் கனவினை நிறைவேற்ற முயன்று கொண்டிருப்பர். எவ்வாறெல்லாம் அவர்கள் செயல்படுகின்றனர் என்பதை இனி பார்க்கலாம்.

பார்ப்பனீயத்தின் ஆன்மிக செயல்பாடுகள்:

பார்ப்பனீயம் பெரும்பாலும் கடவுள் என்னும் ஆன்மீக கற்பனையை ஆணிவேராக மையம் கொண்டு சாதரண பாமர மக்களிடமும் இலகுவாக சென்று சேர்கின்றது. உள்ளொன்று பேசி, புறமொன்று இயங்கும் பார்ப்பனீயமானது; கடவுளின் நேரடி உதவியாளர்கள் நாங்கள், எங்களை தவிர மற்றவர்கள் கடவுளை தொடுவது தீட்டு அது கடவுளின் புனிதத்தை கெடுக்கும் என்று பாமர மக்களிடம் கூறி கொண்டே அதே கடவுளின் கருவறையில் அபசகுணமான காரியங்களை மேற்கொள்கின்றனர். எடுத்துகாட்டாக இறைவனின் புனிதம் கெடும் என்று தாழ்த்தபட்ட சமூகத்தை சார்ந்த நந்தனை கருவறைக்குள் விட மறுத்த அதே பார்ப்பனீயத்தை சார்ந்த ஒருவர் கருவறையில் பெண்களோடு காம கலியாட்டத்தில் ஈடுபட்டு கருவறையின் புனிதத்தை கேள்விக்குள்ளாக்கினார்! இதுவே, அவாளுக்கு ஒரு நீதி, அவர்களுக்கு ஒரு நீதி என்றியங்கும் பார்ப்பனீயத்தின் ஆன்மீக செயல்பாடாகும்.

பார்ப்பனீயத்தின் வணிக செயல்பாடுகள்:

பார்ப்பனீயம் தன் வணிக முறைகளிலும் முரண்பட்ட முறையையே பின்பற்றுகின்றது. அவாள்களின் புனித நூலான ரிக்வேதத்திலும் சரி, மனுநீதியிலும் சரி மாட்டுகறி எத்தனை அவசியமானது என்று அவாள்களே குறிப்பிட்டுருப்பர். இன்று இந்தியாவில் முண்ணனியில் இருக்கும் மாட்டுகறி ஏற்றுமதியில் முண்ணனியில் இருக்கும் நிறுவனங்கள் யாவும் பார்ப்பனீய பனியா கும்பல்களுக்கு சொந்தமானது‌. ஆனால், பண்ணைகளிலும், விவசாய பணிகளிலும் ஈடுபடுத்தபட்டு வயது முதிர்ந்து கடைசியாக விற்கபடும் நிலையில் இருக்கும் மாடுகளை வைத்திருப்பவர்களை தேடி பிடித்து தெருவில் இழுத்து போட்டு அடித்து கொலை செய்யும் ஆட்கள் எல்லாம் யாரென்று பார்த்தால் பார்ப்பனீய தலைமையகமான ஆர். எஸ். எஸ்'ஸின் துணை அமைப்புகளான பஜ்ரங் தள் போன்றவையாகும். ஏனெனில், புத்த, சமண சமயங்களின் காலத்தில் யாகத்தில் உயிர்பலியிடும் நிகழ்வை மக்கள் விமர்ச்சிக்க தொடங்கினர். உடனடியாக சுதாரித்த பார்ப்பனீயம் உயிர்பலியிடல் எங்களுக்கும் ஆகாதென்று பச்சோந்தியை விட படுவேகமாக மாறியதோடு அல்லாமல் "கோமாதா எங்கள் குலமாதா" என்று அன்று முதல் இன்று வரை சந்தில் சிந்து பாடிகொண்டுள்ளது.

மேலும், உடல் நோகா வேலையில் ஈடுபடுவதற்கு ஏதுவாக, 'பார்ப்பனர்கள் கடல் கடந்து போக கூடாது' என்று மனுநீதியில் எழுதி வைத்திருந்தனர். ஆனால், இன்று அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்களில் 87% பேர் பார்ப்பனர்களே. காரணம் கேட்டால் எங்களவாவிற்கு நல்ல திறமை, நல்ல புலமை, நல்ல ஆளுமை என்று பீற்றிகொள்வர்.

பார்ப்பனீயமும் கல்விதுறை, கல்விமுறை செயல்பாடுகளும்:

இந்தியாவில் பார்ப்பனீய தலைமையகமான ஆர். எஸ். எஸ் சார்பில் அதன் கல்வி பிரிவான "வித்யா பாரதி" என்ற அமைப்பு அதன் கட்டுபாட்டின் கீழ் நாடு முழுவதும் பள்ளிகளை நடத்துகின்றது. அங்கு, லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் பயில்கின்றனர். பெரும்பாலும் மத்திய அரசின் கல்விமுறைக்குட்பட்ட பாடதிட்டத்தில் அப்பள்ளிகள் இயங்குனாலும்; அங்கு இந்துத்வா மதவெறியூட்டும் சிந்தனைகளும், இந்துத்வா வெறியூட்டும் உணர்வு செயல்பாடுகளும் நடைபெற தவறுவதில்லை. அப்பள்ளிகளில் பிராந்திய மொழிகளுக்கு ஈடாக இந்தி அல்லது சமஸ்கிருத மொழிகளுக்கு சிறப்பு முக்கியத்துவம் கொடுக்கபடுகின்றது. இதை தவிர, அரசு கட்டுபாட்டில் மற்றும் ஆர். எஸ்‌. எஸ் சாராத தனியார் அமைப்புகள் நடத்தும் பள்ளிகள், கல்லூரிகள் போன்ற கல்விநிறுவனங்களிலும் ஆசிரியர், பேராசிரியர் என்று பணிக்கு வரும் பெரும்பாலானோர் ஆர். எஸ். எஸ்'ஸின் அடிவருடிகளே‌. அவர்கள் மூலமும் அந்தந்த கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவர்களுக்கு இந்துத்வா நஞ்சுணர்வு கடத்தபட்டு தங்கள் பயிலும் கல்வி நிறுவனங்களில் அமைப்பு ஆரம்பித்து பிரிவினைவாத செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். உதாரணமாக டெல்லி ஜேஎன்யூவில் செயல்படும் ஏவிபி மாணவர் அமைப்பு.

பார்ப்பனீயமும் அரசு மற்றும் சமூக, அரசியல், மற்றும் நுண்ணரசியல் செயல்பாடுகள்:

இன்று இந்தியாவில் இருக்கும் அத்தனை மத்திய, மாநில அரசு பணிகளின் உயர்பதவியிலும் ஒன்று பார்ப்பனர்கள் அல்லது, பார்ப்பனீய சித்தாந்தத்தை ஏற்று கொண்டு அவாள்களுக்கு உழைப்பதையே மூச்சாக கொண்டு செயல்படும் அவாள்களின் அடிவருடிகளே இருப்பர். காரணம், தனக்கு கீழிருக்கும் அனைவரையும் விட பிறப்பின் அடிபடையில் தாங்கள் மேலானவர்கள் என்பதோடு, திறமை, தகுதி அடிபடையிலும் தாங்கள் மேலானவர்கள் என்பதை காட்டி கொள்வதற்காக! ஆனால், உண்மையில் அவர்கள் குறுக்கு வழியில் முயன்றே அந்த இடங்களுக்கு வந்திருப்பர் என்று அந்தந்ந துறையில் அவர்களின் செயல்பாடுகளையும், அவாள் தனக்கு கீழானவர்களாக நினைப்போரின் செயல்பாடுகளையும் ஒப்பீடு பார்த்தால் தெரியும்.

அடுத்ததாக, பார்ப்பனீயத்தின் சமூக, அரசியல், நுண்ணரசியல் செயல்பாடுகள்... ஏமாறும் பாமர மக்கள் அறிய வேண்டிய முக்கிய பகுதி; பார்ப்பனீயத்தின் தலைமை ஆர். எஸ். எஸ்'ஸின் நேரடி தேர்தல் அரசியல் பிரிவு "பாரதீய ஜனதா கட்சி" என்றழைக்கபடும் தற்போதைய மத்திய ஆட்சி பொறுப்பிலிருக்கும் பீஜேபி ஆகும். இது நேரடி பார்ப்பனீய சித்தாந்தம் கொண்டுள்ள கட்சியாகும். 2014 ஆண்டு இந்தியாவில் அறுதி பெரும்பான்மை பெற்று ஆட்சிக்கு வந்த இவர்களின் முதல் குறிக்கோள் "ஒரே தேசம்", அதாவது, ஒரே மொழி, ஒரே இனம், ஒரே மதம், ஒரே சித்தாந்தம் என்ற ரீதியில் நாட்டை கொண்டு செல்ல தயாராகினர். பிராந்திய தேர்தல்களில் வாக்கு இயந்திர முறைகேடு, ஆட்கடத்தல், அதிகார மிரட்டல் ஆகிய துஷ்பிரயோகங்கள் மூலம் குறுக்கு வழியில் வென்று பல்வேறு மாநிலங்களை கைபற்றி அங்கே வாழும் பாமர மக்களை விடுத்து மாட்டுக்கும், சாதுகளுக்குமான காட்டாச்சியை நடத்தி வருகின்றது. இதுபோக பிராந்திய கட்சிகள் பலவற்றின் உயர்மட்ட பொறுப்பிலும் ஆர். எஸ். எஸ் அமைப்பின் அடிவருடிகள் உள்ளனர். இவர்கள் பல நேரம் அமைதியாக இருந்தாலும், சமயம் கிடைக்கும் போதெல்லாம் தங்களின் வன்மம் நிறைந்த சர்ச்சை பேச்சுகளின் மூலம் சமூகக்தில் பிரிவினையை ஏற்படுத்த முயல்வார்கள். நேரடி பார்ப்பனீயத்தை விட இவர்கள் சற்று ஆபத்தானவர்கள்.

அடுத்ததாக, பின்வருபவர்கள் மிகவும் ஆபத்தான, அதே சமயம் பாவமானவர்கள்! தானும் தனது நேரடி அடிமைகளும் நேரடியாக நுழைய முடியாத இடங்களில் பார்ப்பனீயம் தனது சாயலில் ஒரு கைகூலியை ஏற்பாடு செய்து உள்நுழைக்கும். அந்தந்த பிராந்திய அரசியல் சூழ்நிலைகளை பொறுத்து தன் பச்சோந்திதனத்தை மேற்கொள்ளும். உதாரணமாக, மனிதம் பேசும் திராவிட சித்தாந்தம் ஆழமாக உள்வேரூன்றி பரவியுள்ள இந்தியாவின் தென்கிழக்கு பகுதியாம் திராவிட தமிழ்நாட்டில் பார்ப்பனீயமானது தன் நேரடி மத, சாதீய ரீதியாக வேரூன்ற முடியாத நிலை இன்று வரை தொடருகின்றது. ஏனெனில், அது பகுத்தறிவு பெற்ற மண், அது மனிதம் பேசும் திராவிட சித்தாந்தங்களால் பண்படுத்தப்பட்ட மண். திராவிட சித்தாந்தத்தை மீறி அணுவளவும் நுழைய முடியாத பார்ப்பனீயம் இன, மொழியுணர்வை தூண்டும் அரசியல் நிலையை பயன்படுத்தி தமிழுணர்வு என்னும் போலி தமிழ்தேசிய அரசியலை தூண்டிவிட்டது. சாதீ பார்த்து தமிழர்/தமிழரல்லாதோர் என்று பிரிவினை ஏற்படுத்த முயன்றது. சுருக்கமாக சொல்வதனால், திராவிட சித்தாந்தம் பேசி கொண்டிருக்கும் அரசியல் கட்சியை போலி தமிழ்தேசியம் பேசும் அரசியல் கட்சி கொண்டு தாக்க வைத்து, அதற்கு எதிர்வினை என்ற பெயரில் திராவிட கட்சியும், போலி தமிழ் தேசிய கட்சியும் அடித்து கொள்வதை வேடிக்கை பார்த்து கொண்டே மற்றொரு பக்கம் தனது இன்னொரு அடிமை மூலம் இந்த மண்ணில் தனது "ஒரே நாடு" என்ற திட்டத்தின் பாதி பகுதிகளை அமல்படுத்த முயல்கின்றது. அதை தடுக்க வேண்டிய நாமோ, யார் பெரியவர் என்ற‌ மோதலில் அடித்து கொண்டிருக்கின்றோம்! அதுவே அவாள்களின் பலம்!

முடிவுரையும் நாம் செய்ய வேண்டியதும்:

உணர்வுகளை தூண்டிவிடுதல், குழுக்களை தூண்டாடுதல் என்ற முறையில் நம்மை உளவியல் ரீதியாக நம்மவர்கள் கொண்டே தூண்டிவிட்டு நம்மவர்களோடு மோத வைத்து அந்த நேரத்தில் அது தன் காரியத்தை சத்தமின்றி நிறைவேற்றிவிடும்! நாமும், உணர்ச்சிபூர்வத்தில் சிந்திக்கும் திறன் அற்று, நம்மை அறியாது பார்ப்பனீயத்தின் கோரத்திற்கு இரையாகி கொண்டிருப்போம்!
பகுத்தறிவென்னும் யார், எங்கு, என்ன, எப்போது, எதை, ஏன், எவ்வாறு என்ற வினாக்களுக்கு சற்று நேரம் கொடுத்து சிந்தித்து, ஆராய்ந்து செயல்படும் போது பார்ப்பனீயம் விரிக்கும் ஆக்டோபஸ் கரங்களில் சிக்காமல் தப்பிக்கலாம்!

-                 வெ. பா. செல்வக்குமரன் B. Com CA., திராவிட சிந்தனையாளர்.

No comments:

Post a Comment