Friday 2 April 2021

ஏன் மலர வேண்டும் திமுக ஆட்சி – கவிஞர் சொ . கார்த்திக்

 ஏன் மலர வேண்டும் திமுக ஆட்சி – கவிஞர் சொ . கார்த்திக் 


மிழகத்தில் சமூக நீதியை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு திராவிட முன்னேற்றக் கழக ஜனநாயக கூட்டணிக்கு உள்ளது என்பதாலும், பி.ஜே.பி அரசிற்கு கைகூலியாக இருந்து சநாதன அரசியலை செய்துக் கொண்டிருக்கும் அதிமுக மக்கள் விரோத அரசிற்கு  பதிலடி கொடுத்து தக்க பாடம் புகட்ட வேண்டும் என்பதற்காகவும், தமிழகத்தில் திமுக ஆட்சி மலர வேண்டும்.

             ஏன் அதிமுக ஆட்சியை மக்கள் விரோத அரசு என்று குறிப்பிடுகிறேன் என்றால் அம்மையார் செல்வி.ஜெ.ஜெயலலிதா அவர்கள் மேடையில் தன்னுடைய தவறினை ஒப்புக்கொண்டு மக்களிடம் உரையாற்றி இருக்கிறார் அது என்னவென்றால் நான் முன்பு ஒரு தவறு செய்துவிட்டேன் பிஜேபி உடன் தேர்தல் கூட்டணி வைத்துக்கொண்டேன் என்று சொல்லிவிட்டு பிறகு அந்த தவறுக்கு பரிகாரமாகத்தான் நானே பிஜேபி ஆட்சியை கலைத்தேன் என்று கூறிவிட்டு பின்பு செல்வி.ஜெ.ஜெயலலிதா அவர்களே இனி எந்தக் காலத்திலும் பிஜேபி-யோடு எந்த தொடர்பிலும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் வைத்துக் கொள்ளாது.என மூர்க்கமாகவும்,சொன்னதை சிறிதும் பொருட்படுத்தாமல் மக்களின் முன்னாள் அம்மாவின் உன்மையான விசுவாசி(தொண்டன்)என்று சொல்லிக்கொண்டே அம்மாவின் ஆட்சியை பிஜேபி-க்கு அடகு வைத்துவிட்டு அவர்கள் சொல்வதற்கெல்லாம் கடந்த 4 ஆண்டுகளாக தலையாட்டிக் கொண்டிருக்கும் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் ஆட்சி மக்கள் விரோத ஆட்சிதானே?

             இதுவரை எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக ஆட்சியில் மக்களுக்கு பயன்படுகின்ற புதுமையான திட்டங்கள் நன்மை பயக்கும் வகையில் நடைமுறை படுத்தியது உண்டா???

              இந்தியா சுதந்திரம் அடைந்த 1947-ம் ஆண்டு முதல் 2010-11 ஆம் ஆண்டு வரையிலான தமிழ்நாட்டின் மொத்த கடன் தொகை ரூ.1.01 லட்சம் கோடி மட்டுமே இருந்தது.

               தற்போது மோடியின் தலைமையில் இயங்கும் பிஜேபி கைக்கூலி எடப்பாடி பழனிச்சாமியின் ஊழல் நிறைந்த அதிமுக அரசியலால் தமிழகத்தின் தற்போதைய 2019-20-ஆம் ஆண்டில் இதுவரையான கடன் தொகை 4.56 லட்சம் கோடியாக உயர்ந்து 2019-20-ம் ஆண்டின் கடன் தொகைக்கு செலுத்திய வட்டி தொகை மட்டும் சுமார்  31,950,19 கோடியாகும்.

           இந்நிலையில் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் வெற்றிநடை போடும் தமிழகமே என்று சொல்லிக் கொள்வதனால் மக்கள் அவர்களுக்கு ஏற்பட்ட அநீதிகளை மறந்து விடுவார்களா ?

             நீட் தேர்வில் மாணவி அனிதாவை தொடர்ந்து 13 மாணவ/மாணவிகள் இதுவரை இறந்துள்ளதை மக்கள் மறந்து விடுவார்களா ?

             சல்லிக்கட்டு தடியடி ,தூத்துக்குடி துப்பாக்கிச் சூடுகளையும் ,எட்டுவழிச்சாலையால் விவசாயிகளுக்கு நேர்ந்த கொடுமைகளையும், ஸ்டெர்லைட் ஆலை பிரச்சினைகளை மறந்து உழைக்கும் விவசாய மக்கள் அதிமுக-வை ஆதரிப்பார்களா ?

              தற்போது அதிமுக கட்சியுடன் கூட்டணி வைத்துள்ள பா.ம.க கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் அவர்கள் ஆளுநரை சந்தித்து எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக கட்சியில் இருக்கும் அமைச்சர்களின் மீது 200 பக்கங்கள் கொண்ட 24 புகார்களை விசாரிக்க கொடுத்துவிட்டு தற்போது அதிமுக கட்சியுடன் கூட்டணி சேர்ந்திருப்பது மக்களை ஏமாற்றுவதற்காகவும், அதிமுக ஊழலில் உழைக்கும் பெரும்பாலான பாட்டாளி மக்களை அடகு வைத்து பங்கு வாங்குவதற்கே என்று மக்கள் அறிந்துக்கொண்ட பிறகு எப்படி அதிமுக கூட்டணிக்கு ஓட்டு போடுவார்கள்?

               ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் மதுரை மாநகராட்சியில் பொருத்தப்பட்டுள்ள ஒரு தெருவிளக்கின் விலை ரூ.21,666 என அரசு நிதியில் கணக்கு காட்டப்பட்டுள்ளதை தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் மதுரை மக்கள் அதிர்ச்சியுற்று நிற்கிறார்களே மக்கள் எப்படி இது அம்மா ஆட்சிதான் என்று சொல்லும் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக ஆட்சியியை நம்பி இதற்கு மேல் ஏமாறுவார்கள் ?

                அதுமட்டுமல்லாமல் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலம் 2015-16-ல் திருப்பூர் மாநகராட்சியில் கூத்தம்பாளையத்தில் கட்டப்பட்டுள்ள 5 இலட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டீர்க்கு ரூ.250 கோடி என அரசு நிதியில் கணக்கு காட்டப்பட்டுள்ளது தெரிந்தும் அதிமுக அரசை மக்கள் ஏற்பார்களா ?

                எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் விதி 110-ன் கீழ் அரசு ஊழியர்கள் ஓய்வுப்பெரும் வயதை 60-ஆக உயர்த்தி படித்த இளைஞர்கள் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துவிட்டு வேலைக்காக காத்திருக்கும் 80 லட்சம் இளைஞர்களின் வாழ்க்கையில் அடிக்கும் அதிமுக ஆட்சியை நிச்சயமாக ஏற்கமாட்டார்கள்.

              மின்சார வாரியத்தை தனியாருக்கு தாரைவார்த்துக் கொடுத்துவிட்டு ஏப்ரல் 1-ம் தேதி முதல் விவசாயிகளுக்கு 24மணி நேரமும் மும்முனை மின்சாரம் வழங்கப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்ட எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக அரசை இனியும் மக்கள் நம்ப போவதில்லை.

              இட ஒதுக்கீட்டில் 10.5சதவீதம் உள் ஒதுக்கீடு என்ற பேரில் வன்னியர் உழைக்கும் விவசாய மக்களை முட்டாளாக்கி 6 மாதத்திற்க்கு மட்டுமே என்றுச் சொல்லி சட்டமன்றத்தில் மசோதா நிறைவேற்றி வெறும் ஓட்டுக்காக அரசியல் தந்திரம் என்ற பெயரில் பா.ம.க கட்சிக்கு 23 தொகுதிகளை கொடுத்து வன்னியர் பெருந்திரள் மக்களை ஏமாற்றினால் ஏமாற்றுவார்களா?

             தற்போது அதிமுக ஆட்சியில் நடந்துள்ள அரசின் ஊழல் பட்டியலில் . , 

1) மின்வாரியத்தில் நத்தம் விஸ்வநாதன் 2,000 கோடி ஊழல். 

2) சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பணி மாற்றுதல் மற்றும் நியமனங்களுக்காக ரூ.20.75 கோடி லஞ்சம் மற்றும் கல்குவாரி மூலம் அரசுக்கு பெரும் இழப்பையும் ஏற்படுத்தி இருக்கிறார்.

3) மின்வாரியத்துறை அமைச்சர் பி.தங்கமணி அவர்கள் நிலக்கரி இறக்குமதி போலி மின்சார கணக்கு ஆகியவற்றால் ரூ.950 கோடி ஊழல் செய்துள்ளார்.

          லாக்டவுன் காலத்தில் ஆட்டோ ஓட்டுனர்கள் முதல் சலவைத் தொழிலாளிகள் வரை எவ்வளவு இக்கட்டான நிலையில் கிடந்தார்கள் என்று தெரிந்தும் ரூ.1000 மட்டுமே கொரோனா நிவாரணத்தொகை என்று கொடுத்துவிட்டதுடன் கண்டுக்கொள்ளாத அதிமுக அரசு இப்போது தேர்தல் என்றவுடன் பொங்கல் பரிசாக ரூ.2500 அரசுப்பணத்தை எடுத்து எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக தருவதாக அத்தனை நியாயவிலை கடைக்கு முன்பும் தன் புகைப்படங்களை பேனர்களாக வைத்து வழங்கியது நாட்டு மக்கள் நலனுக்காகவா? இல்லை மக்களின் ஓட்டுக்காகவா? என்று மக்கள் அறியமாட்டார்களா?

             நியாயவிலைக் கடைகளில் அரசு வழங்கும் அரிசி முதல் மண்ணெண்ணெய் வரை தற்போது 30 முதல் 40 சதவீதம் மட்டுமே எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக அரசு வழங்கி வருகிறது என்று தருமபுரி மாவட்டம் அரூர் வட்டம் மொரப்பூர் ஒன்றியத்தில் போளையம்பள்ளி கிராமத்தில் நியாயவிலை கடையில் பணிபுரியும் குமார் என்பவர் வாக்குமூலம் கொடுத்ததை மக்கள் கேட்டுவிட்ட பிறகும் அதிமுக அரசிற்கு வரும் சட்டமன்றத் தேர்தலில் ஓட்டு போடுவார்களா?

               இதனையெல்லாம் மக்கள் சிந்தித்தால் அதிமுக அரசுக்கு ஓட்டு போடுவார்களா?

              கடமையை செய்பவனுக்கு கடமை இருந்துக்கொண்டு தான் இருக்கும்.என்பதைப்போல மக்களை ஏமாற்றி ஊழல் செய்வதையே குறிக்கோளாக வைத்து ஆட்சி நடத்தும் அதிமுக அரசை நம்பி இனியும் மக்கள் கவலைப்பட்டுக் கொண்டிருக்க மாட்டார்கள்.வரும் சட்டமன்ற தேர்தலில் நல்ல பாடத்தை புகட்டுவார்கள்.

            இதனையெல்லாம் பார்க்கின்றபோது எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான ஆட்சி அதிமுக ஆட்சியே இல்லை என்றுதான் சொல்ல வேண்டியுள்ளது.மக்கள் விரோத ஆட்சி என்றும்கூட சொல்லலாம் . ஏனென்றால் 1935-36-ல் இந்தி மொழி கட்டாயமாக்கப்பட்ட நேரத்தில் அப்போது எதிர்கட்சி தலைவராக இருந்த ராஜா-வை எதிர்த்து போராட்டம் நடைபெற்றது அப்போது அந்த போராட்டத்தில் கலந்துகொண்டு எதிர்ப்பு தெரிவித்த அறிஞர் அண்ணா அவர்கள் கடைசிவரை இந்தி எதிர்ப்பை மூர்க்கத்தனமாக எதிர்த்தார்.

 அவரின் வழியில் வந்த அதிமுக ஆட்சியை எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் இந்தி திணிப்பிற்கு வரவேற்று சிவப்பு கம்பளம் விரிக்கும் பொழுது அது எப்படி அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமாக இருக்க முடியும் என்று சிந்திப்பீர்...

 எதிர்க்கட்சியான திமுக தலைமையிலான ஜனநாயக கூட்டணி கட்சிகள் மட்டுமே நீட் தேர்வை எதிர்கிறது, மாநில உரிமைக்காக குரல் கொடுக்கிறது, வேளாண் சட்டங்களை எதிர்க்கிறது, காவிரி ஆறுக்கான பிரச்சினைக்காக போராடுகிறது,ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்க்கிறது, சுற்றுச்சூழல் பிரச்சனைகளில் தலையிடுகிறது, சிறுபான்மையினர் நலன்களில் அக்கறை காட்டுகிறது,வடநாட்டவர்களால் தமிழ்நாட்டு இளைஞர்களின் அரசு வேலை பறிபோவதை எதிர்க்கிறது,CAA,NPR,NRC போன்ற சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கிறது மற்றும் சமூக நீதியை பாதுகாக்கப்பட வேண்டும் என போராடுகிறது. ஆதலால் திமுக ஆட்சி தமிழகத்தில் மலர் வேண்டும்.

 
- கவிஞர்.சொ.கார்த்திக்
(7695941760)
(
தருமபுரி மாவட்டம் போளையம்பள்ளி)

No comments:

Post a Comment