Tuesday 29 December 2020

சட்டமன்றத்தில் அண்ணா

 சட்டமன்றத்தில் அண்ணா

 

1957 தேர்தலில் சட்டமன்றத்தில் திமுக நுழைந்ததும் மக்கள்கூர்ந்து கவனிக்கலாயினர்அமைச்சர்கள்மன்ற உறுப்பினர்கள்நாட்டு மக்கள் அனைவரின் கண்களும் காதுகளும் அண்ணாவைநோக்கி திரும்பின

 

சட்டமன்ற தலைவராக டாக்டர் யுகிருஷ்ணராவ்தேர்தெடுக்கப்பட்டபோது அண்ணா அவர்கள் அவரை வாழ்த்திப்பேசிய கண்ணியம் மிக்க உரை வருமாறு

 

தாங்கள்உடல் இளைத்தோர் அருகில் இருந்து அவர்களுக்குப்பலம் ஊட்டுவது போலசட்டசபையில் இளைத்திருக்கும் (15 பேர்கொண்டஎங்களுக்கு அருகில் இருந்து பலம் ஊட்ட வேண்டும்எங்களைப் பொறுத்தவரையில் சட்டமன்ற அனுபவத்தையும்ஆற்றலையும் அதிகம் பெற்றுவிட்டோம் என்று கூறுவதற்கில்லைஅரசியல் என்னும் இந்த இரயில் வண்டிக்குள் ஆதிக்கம்வாய்ந்தவர்கள் (ஆளும் காங்கிரஸ் கட்சியினர்இருப்பார்கள்எங்கள் வருகையைக் கண்டு அவர்கள் முகம் சுருங்கும்அவர்களைப் பார்த்துகாலை மடக்கிக் கொள்ளுங்கள் என்றுநாங்கள் கூறுவதற்குமுன்தாங்கள் தங்களுடைய கருணைப்பார்வையினாலயே அவர்கள் காலை மடக்கிக்கொண்டுஎங்களுக்கு இடம் தரச் செய்ய வேண்டும்

 

நியாயத்திற்காகக் கருணை உள்ளத்தோடு தாங்கள் தீர்ப்பளிக்கவேண்டும் என்று பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்தங்களுடையஆட்சியின் கீழ் இந்த மன்றத்தின் கண்ணியம் உண்மையிலேயேசிறப்புறும் என்று சொல்லிஇந்த மன்றத்தின் கண்ணியத்தையும்கௌரவத்தையும் காப்பதில் எங்களுக்கு ஏதாவது பங்குகிடைக்குமானால் மகிழ்ச்சி அடைவோம் என்று கூறி வணக்கம்தெரிவித்துக்கொள்கிறேன்

 

பெருமிதம் மிக்க இந்த உரை மூலம்ஓர் ஆளுங்கட்சி எப்படிநடந்துக்கொள்ள வேண்டும்எதிர்க்கட்சி எப்படிநடந்துக்கொள்ள வேண்டும்சட்ட மன்றத் தலைவர் எப்படிநடுநிலையுடன் நடந்துக்கொள்ள வேண்டும்என்பவனவற்றையெல்லாம் அண்ணா எடுத்துரைத்த பான்மைபலரது பாராட்டுதலைப் பெற்றது

 

No comments:

Post a Comment