Saturday 30 January 2021

தொழில்நுட்ப ஆர்வலர்


தொழில்நுட்ப ஆர்வலர்


மக்களுடன் தொடர்பு கொள்ளும் கருணாநிதியின் ஆர்வம் அவரது வயதுக்கும்,

முதிர்ச்சிக்கும் இணையாக வளர்ந்து கொண்டிருந்தது. மக்களின் குறிப்பிட்ட பிரிவினரின் எண்ணங்களை அளவிடவும், அவர்களைத் திட்டமிட்டு அணுகவும், நவீன தொழில்நுட்பம் அசத்தலான கருவி என்பதை அவர்உணர்ந்து கொண்டார். இதன் காரணமாகவே எட்டு ஆண்டுகளுக்கு முன்பே முகநூலில்

தன்னை இணைத்துக் கொண்டார்.


முகநூல் எவ்வாறு செயல்படுகிறது என்று அவரது நிர்வாகி விளக்கியதைத் தொடர்ந்து தனது பதிவுகள்

தொடர்பான கருத்துகளைக் காணவும், தெரிந்து கொள்ளவும், கீழ்க்காணும் கேள்விகளைக் கேட்டார்.

இருவருக்கும் இடையே நடைபெற்ற உரையாடலின் போது நான் உடனிருந்தேன். விவரம் பின்வருமாறு:


'அதிக எண்ணிக்கையில் சாதகமான கருத்துகளே பதிவாகி உள்ளன. என்ன செய்து

கொண்டிருக்கிறீர்கள்?


'கருத்துப் பதிவுகளைக் கட்டுப்படுத்திக் கொண்டிருக்கிறோம்'.


'அப்படியென்றால்?' குழப்பத்துடன் கேட்டார் கருணாநிதி.


'பாதகமான கருத்துகளை நீக்கிவிடுகிறோம்.'


'ஏன்?”


'அவை நமக்கு எதிரானவை, சாதகமாக இல்லை என்பதால் ...."


'அப்படிச் செய்யக்கூடாது.'


'சரி ஐயா. ஆனால் சில கருத்துகள் மட்டமாக உள்ளனவே.’'


'பரவாயில்லை. மக்கள் என்னை நேருக்கு நேர் முகத்தில் அடிப்பதுபோல பலமுறை விமர்சித்துள்ளனர்.


மட்டமான கருத்தைப் பதிவு செய்தால் அது அவர்களின் குணத்தையே பிரதிபலிக்கிறது என்றுதான் அர்த்தம்.’


உரையாடல் நிறைவடைந்தது.



அரசியலில் சாதியின் ஆதிக்கத்தை ஒழிக்கவே முடியாதா?


சாதியின் ஆதிக்கத்தை மட்டுமல்ல; மதத்தின் ஆதிக்கத்தையும் ஒழித்தாக வேண்டும். இதை அனைத்து கட்சிகளும், சமுதாய இயக்கங்களும் அப்பழுக்கற்ற ஆர்வமும், செய்தே தீர வேண்டும் என்ற பிடிவாதமும் கொள்ளவேண்டும். அப்போதுதான் நிலைமையைச் சீர்திருத்த வழி உண்டு.


உங்களிடம் உள்ள சமூகநீதி தொடர்பான இந்தப் பிரக்ஞை அடுத்த தலைமுறை திமுகவினரிடமும் இருக்கிறதா?


இன்றைக்கு ஊற்றப்படுகிற தண்ணீரும், தொடர்ந்து இடப்படுகிற உரமும் எதிர்காலத்தில் நிச்சயமாகப் பயன்படும் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு.


கருணாநிதி - சிறுகுறிப்பு வரைக?

மானமிகு சுயமரியாதைக்காரன்!


- கலைஞர் கருணாநிதி

No comments:

Post a Comment