Saturday 30 January 2021

கலைஞர் அப்படி என்னதான் செய்தார்? - சா. மெர்லின் ஃபிரிடா

 கலைஞர் அப்படி என்னதான் செய்தார்? -  சா. மெர்லின் ஃபிரிடா 


ம் நாட்டின் அரசியல் வரலாற்றின் எந்த பக்கத்தை திருப்பி பார்த்தாலும் அதில் கலைஞர் என்ற பெயர் நிச்சயம் இடம் பெற்றிருக்கும். அதிலும் குறிப்பாக தமிழ்நாட்டின் அரசியல் நகர்வுகளில் முன்னோடியாக விளங்கும். சமூக நீதி, சுயமரியாதை என்ற சொற்களை வெறும்    வாய்ச்சொல்லாக மட்டும் இல்லாமல் அதை ஆக்கப்பூர்வமன செயல்திட்டங்களாய் வடிவமைத்து பிற மாநிலங்கள் நம்மை பார்த்து வியக்கும்படி செய்தவர் கலைஞரே! அப்படி என்னதான் கலைஞர் செய்தார்? என்று கேள்வி  எழுப்புவோருக்கு இக்கட்டுரை முடிவில் நிச்சயம் பதில் கிடைக்கும் என்பதை நம்புகிறேன். 


அனைவருக்கும் எளிய வகையில் கல்வி கிடைக்க வழி வகுத்தவர்:

சத்தான சத்துணவு திட்டம்:  எளிய மாணவர்கள் படிக்க வர வேண்டும் என்பதற்காக அவர்களுக்கு சத்துணவு திட்டத்தின் மூலம் உணவு வழங்கி படிக்க வைத்தது நம் தமிழ் மாநிலம். அதில் சத்தான உணவை கொடுப்பதற்காக கலைஞரால் கொண்டு வர பட்ட திட்டம் தான் மதிய உணவில் முட்டை வழங்கும் திட்டம். இதில் முட்டை உண்ணும் பழக்கம் இல்லாத மாணவர்களுக்கு வாழைப்பழம் வழங்கி திட்டத்தை இன்னும் சத்தாக மாற்றினார். 


இலவச பஸ் பாஸ் திட்டம்: அணைத்து தரப்பு மாணவர்களும் படிக்க வர சத்தான சத்துணவோடு கலைஞர் நின்று விடாமல் அவர்கள் வந்து செல்வதற்கு போக்குவரத்து வசதி ஏற்படுத்தி தர கொண்டு வரப்பட்ட திட்டம் தான் இலவச பஸ் பாஸ் திட்டம். இதன் மூலம் பல தொலைவில் இருந்து வரும் எளிய மாணவர்கள் கல்வி கற்க வழியாய் அமைந்தது. 


சமசீர் கல்வி திட்டம்:  தனியார் பள்ளி மாணவர்களுக்கும் அரசு பள்ளி மாணவர்களும் படிக்கிற பாடத்திட்டத்தில் வேறுபாடு இல்லாத வகையில் அனைவருக்கும் சரி சமமான கல்வி என்ற அடிப்படையில் கொண்டு வரும் வகையில் கொண்டு வரப்பட்ட திட்டம். இதற்கு பல எதிர்ப்புகள் வந்தாலும் நீதிமன்றம் அணுகி செயல்திட்டமாக கொண்டு வந்து ஒவ்வொரு வகுப்பில் படிக்கும் அனைத்து மாணவர்களும் நல்ல தேர்ச்சி பெற வைத்தவர். இதனால் மாணவர்களின் 10 ஆம் வகுப்பின் தேர்ச்சி விகிதம் உயர்ந்தது நாம் அனைவரும் கண்கூடாக பார்த்தவையே. 


முதல் பட்டதாரி மாணவர்களுக்கு ஊக்கத்தொகை: பள்ளி கல்வி முடித்து, மேற்கொண்டு கல்லூரியில் பயில்வதற்கு வரும் மாணவர்கள் அவர்கள் வீட்டலேயே முதல் பட்ட படிப்பு படிக்கும் மாணவராக இருந்தால் அவர்களுக்கு ஊக்கத்தொகை அளிக்கும் வகையில் கொண்டு வரப்பட்டது. இதனால் பயன்பெற்ற மாணவர்கள் ஏராளம். இன்று நாம் பார்க்கும் இளம் பட்டதாரிகளில் பெருபாலானவர்கள் இந்த திட்டத்தின் மூலம் படித்தவர்கள். பட்டப்படிப்பு பற்றி யோசிக்க கூட முடியாத நிலைமையில் உள்ள குடும்பத்திலிருந்து படித்த இளைஞர்களை உருவாக்கி அவர்கள் வாழ்வாதாரம் மேம்பட வைத்தது கலைஞர். 


இடஒதுக்கீடு:   இனம், மதம், ஜாதி வாரியாக பலருக்கு கல்வி என்பது மறுக்கப்பட்டிருந்தது. அதை எல்லாம் உடைத்து எல்லா தரப்பில் இருந்தும் பட்டதாரிகளை ஏழுப்பும் வண்ணம் கொண்டுவர பட்டது இடஒதுக்கீடு பிரதிநிதிதுவம். எந்த ஜாதி, சமூதாயத்தை வைத்து படிக்கும் உரிமை ஒடுக்க படுகிறதோ அதே ஜாதி சான்றிதழ் மூலமும் அவர்களின் உயர்நிலை பள்ளி படிப்பின் மதிப்பெண்ணையும் அடிப்படையாக வைத்தும் பட்டபடிப்பு படிக்க வைக்க அன்று ஆட்சியில் இருந்த மத்திய அரசின் மூலம் சட்டமாக கொண்டுவர வழி வகுத்தவர் கலைஞர். இங்கு பலர் இடஒதுக்கீடு என்பதை தவறாக புரிந்து கொண்டு உள்ளனர். இந்த அடிப்படை மூலம் படித்து, நல்ல நிலையில் இருந்துகொண்டு எதிர்ப்பவர்கள், இதன் முக்கியத்துவத்தை புரிந்து கொள்ள வேண்டும். அந்தந்த வகுப்பில் உள்ளவர்கள் அவர்கள் பெரும் மதிப்பெண்களை அடுப்படையாக வைத்துதான் இடங்கள் நிரப்பப்படுகிறது. அவரவர்களுடைய உயர் நிலை பள்ளி படிப்பின் மதிப்பெண்களுக்கு ஏற்ப இடம் கிடைக்குதே தவிர, எந்த சமூதாயத்தை/ஜாதி வைத்து  எந்த வித பாரபட்சம் இதில் பார்கவடவில்லை. ஒரு குறிப்பிட்ட பிரிவை சார்ந்தவர்கள் மட்டும் படித்து கொண்டு இருப்பதை மாற்றி எல்லாரையும் படிக்க வைத்தவர் கலைஞர். இடஒதுக்கீடு என்ற ஒன்று இல்லையென்றால் நாம் யாரும் இங்க படித்திருக்க மாட்டோம், நானும் இந்த கட்டுரையை எழுதியிருக்க முடியாது. 

 



                                

தொழில்நுட்ப பூங்காக்கள்: கல்வி அனைவருக்கும் கிடைக்கிறதோடு நின்று விடாமல் நல்ல வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தும் நோக்கில் பல தொழில்நுட்ப பூங்காக்களை ஏற்படுத்தினார். கிராம புறங்களில் ஏழ்மையில் வாழ்த்த பல மாணவர்களை நல்ல AC ரூமில் அமர்ந்து வேலை பார்க்கும் படி வழி வகுத்து கொடுத்தார். 


பெண்களுக்கு சமூதாயத்தில் சம உரிமை கொடுத்தவர்:

குடும்ப சொத்தில் பெண்களுக்கு சம உரிமை:  பெண்களுக்காக உரிமை, சுயமரியாதை போன்றவற்றிற்கு போராடும் பெரியார் செங்கல்பட்டில் 1929 ஆம் ஆண்டு நடந்த சுயமரியாதை மாநாட்டில் குடும்ப சொத்தில் ஆண்களை போல் பெண்களுக்கும் சரிசமம் உரிமை உண்டு என்ற தீர்மானத்தை கொண்டு வந்தார். ஏறத்தாழ 60 ஆண்டுகள் கழித்து 1989 ஆம் ஆண்டு தலைவர் கலைஞர் அதை சட்டமாக மாற்றினார் . கடந்த ஆண்டில் உச்ச நீதிமன்றம் சொன்ன ஒரு முக்கியமான பெண்களுக்கான தீர்ப்பை பார்த்திருப்போம். பெண்களுக்கு சொத்தில் சம உரிமை உண்டு என்பது! இவர்கள் 31 ஆண்டு கழித்து யோசித்த காரியத்தை அன்றே செயல் திட்டமாக கொண்டு வந்தார் கலைஞர். நான் இந்த கட்டூரையின் முன் குறிப்பிலே கூறியவாறு தமிழகம் மற்ற மாநிலங்களை காட்டிலும் முன்னோடியாக இருக்கிறது என்பதில் இது ஒரு சான்று.


மகளீர் சுய உதவி குழு:  பெண்கள் சொந்தமாக உழைக்க 1989 ஆம் ஆண்டில் தருமபுரி மாவட்டத்தில் முதல் முதலாக திட்டத்தை துடங்கி வைத்தவர் கலைஞர். அரசாங்கம் கொடுக்கும் பணத்தை வைத்து அவர்கள் தொழில் செய்து வருமானம் பார்க்க பேருதவியாய் அமைந்தது. இத்திட்டத்தின் மூலம் பல எளிய மற்றும் நடுத்தர பெண்கள் தாங்களே கைத்தொழில் செய்து வருமானம் ஈட்டி கொண்டனர்.  மாவட்டம் தோறும் பல சுயஉதவி குழுக்களை ஏற்படுத்தினார். அவர்கள் செய்யும் பொருள்களை விற்பனைப்படுத்த மாவட்டம் தோறும் அரசு சார்பில் பொருள்காட்சி நடத்தி அவர்கள் சுயமரியாதையோடு வாழ வழி வகுத்தவர் கலைஞரே. 


காவலர் பணிகளில் பெண்களை அமர்த்தியவர்: காவல் பணிகளை ஆண்கள் தான் பார்க்க வேண்டுமா?  என்ற கேள்வியை மாற்றி, பெண்களும் காவல் பணி பார்க்கலாம் என்ற திட்டத்தை 1973 ஆம் ஆண்டு நடைமுறைக்கு கொண்டுவந்தவர்.  ஆண்களுக்கு நிகராக பெண்களும் காவல் பணிகளை தேர்வு செய்யலாம் என்ற அங்கீகாரத்தை கொடுத்தார். 


திருமண நிதி உதவி தொகை திட்டம்:  எளிய பெண்களின் திருமண உதவி பெற திட்டமாக இது இருந்தாலும் அவர்களை படிக்க வைக்க ஊக்குவிக்கும் வகையாக அமைந்தது. இதன் மூலம் நிதி பெற வேண்டுமென்றால் பெண்கள் பட்டதாரிகளாக இருக்க வேண்டும் என்ற நிபந்தனைகள் உண்டு. இதனால் பெண்கள் படித்து கல்வி அறிவு பெறுவதற்கான நோக்கத்துடன் திட்டத்தை அறிமுக படுத்தியவர் கலைஞர். 


இலவசங்கள் மூலம் தமிழ்நாட்டை மேம்படுத்தியவர் 


வண்ண தொலைக்காட்சி திட்டம்: இப்போதெல்லாம் தொலைக்காட்சி இல்லாத வீட்டை பார்க்க முடியாது. ஆனால் ஒரு 10 வருஷத்துக்கு முன்னோக்கி போய் பாருங்கள் எந்த வீட்டில் தொலைக்காட்சி இருந்தது என்று! ஏழை எளிய மக்கள் தொலைக்காட்சி பார்க்க வேண்டும் என்றால் அருகில் யாராவது வசதி படைத்தவர் வீட்டிற்கு சென்றுதான் பார்க்கிற அவலநிலை இருந்தது. அப்படிப்பட்ட நிலையை உடைத்து தள்ளி ஒவ்வரு குடும்ப அட்டைதாரருக்கும் இலவச வண்ண தொலைக்காட்சி கொடுக்கும் திட்டம் கொண்டுவந்தார். இதன் மூலம் அவர்கள் தங்கள் வீடுகளில் இருந்தே விவரங்களை தெரிந்து கொள்ளும் வண்ணம் அமைந்தது. இப்பொழுது இருக்கும் காலகட்டத்தில் LED TV வாங்குவது ஓரளவுக்கு சுலபமான காரியம் தான் ஏனென்றால் பொருளாதாரம் மேம்பட்டது. அதற்கு காரணம் ஒவ்வரு வீட்டிலேயும் படித்து நல்ல வேளையில் இருக்கும் இளம் தலைமுறையினர். அந்த படிப்பையும் எல்லாருக்கும் சமமாக கொடுத்தது கலைஞர்தான் எனபதை இங்கு நினைவுக்கரவேண்டி இருக்கிறது.


சமத்துவபுர திட்டம்:  எல்லா சமுதாயத்திலும் இருக்கிற எளிய மக்கள் எந்தவித பாகுபாடும் இன்றி ஒரே இடத்தில் வசிக்கும் படியாக அவர்களுக்கு வீடுகள் அமைத்து தர திட்டமாய் அமைந்தது. பெரியார் விரும்பிய சமத்துவபுரத்துக்கு   செயல் வடிவம் கொடுத்தவர் கலைஞர். வசிக்கும் இடத்தில் சமத்துவத்தை உண்டு பண்ணி பலர் மனம் வியக்கும் வண்ணம் நடைமுறை படுத்தினார். 

இலவச சைக்கிள் ரிக்ஷா மனிதனை மனிதனேதான் கைகள் மூலம் இழுத்து செல்லும் அவலநிலை இருந்தது. இத்தனை உணர்த்த கலைஞர் கைரிக்ஷாக்களை ஒலித்து இலவச சைக்கிள்ரிக்ஷாக்களை கொடுத்தார். அவர்களுக்கு உரிய இழப்பீடும் கொடுத்து, கைரிக்ஷாசிலை வடிவத்தை எழும்பூர் அருங்காட்சியத்தில் நினைவாக வைத்தார். புரட்சிகரமாக திட்டத்தை கொண்டுவந்து பல மாநிலங்கள் பார்த்து வியக்கும் வகையில் நடத்தி காட்டியவர் கலைஞரே. 

இலவச எரிவாயு வழங்கும் திட்டம்: விறகு மூலம் சமையல் செய்து கொண்டிருந்த ஏழை எளிய இல்லத்தரசி இல்லங்களுக்கு இலவசமாக எரிவாயு கொடுத்து அழகு பார்த்தவர் கலைஞர். சமையல் அறையை நவீனமயமாக மாற வழி வகுக்கும் திட்டமாக இந்த திட்டம் அமைந்தது. 


விவசாயிகளை காத்த கலைஞர்:

விவசாய கடன் தள்ளுபடி: 2006 ஆம் கழக ஆட்சி அமைந்த போது தலைவர் கலைஞர் அவர்கள், கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய 7000 கோடி கடனை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். ஆட்சி அமைந்ததும் அதிரடி திட்டமாக அறிவித்தார். கடன்களை தள்ளுபடி செய்து விவசாயிகள் வாழ்வில் ஒளி பிரகாசிக்க செய்தார்.

உழவர் சந்தை திட்டம்: விவசாயிகள் தங்கள் நிலத்தின் மூலம் விளைந்த காய்கறிகளை இடைத்தரகர்கள் இன்றி அவர்களே வாடிக்கையாளர்களிடம் விற்பனை செய்ய வழியாய் அமைந்தது தான் இந்த திட்டம். 

விவசாய கல்லூரி: தமிழ்நாட்டில் முதல் விவசாய கல்லூரியை கோவையில் கலைஞர் ஏற்படுத்தியதால் பல மாணவர்கள் விவசாயம் சார்ந்த படிப்புகளில் பட்டபடிப்பு பெற முடிந்தது. இந்த கல்லூரியின் மூலம் விவாசிகளுக்கு நெல் கொடுத்து ஒரு ஏக்கருக்கு 35 முதல் 50 மூட்டை உற்பத்தி செய்ய வழி வகுத்தார். 

கலைஞரின் பிரமாண்டங்கள் 

திருவள்ளுவர் சிலை:  தமிழ்நாடு என்ற பெயரை சொல்லும் போது சின்னமாக காமிப்பது திருவள்ளுவர் சிலைதான். அப்படிபட்ட வரலாற்று சின்னமாக அமைந்து விட்டது. உலக பொதுமறையாம் திருக்குறளை இயற்றிய வள்ளுவருக்கு பெருமை சேர்க்கும் வண்ணம் குமரி முனையில் வங்க கடலும், அரபி கடலும், இந்திய பெருங்கடலும்   சந்தித்து அலையை அள்ளி வழங்கும் இடத்தில் வள்ளுவருக்கு 133 அதிகாரத்திற்கு ஏற்ப 133 அடி உயரத்தில் கற்களில் செதுக்கிய சிலையை நிறுவியவர். 

கத்திப்பாரா மேம்பாலம்:  சென்னை நகரில் கிண்டி பகுதியில் போக்குவரத்துக்கு நெருச்சலுக்கு நிரந்தர தீர்வு காணும் நோக்கில் கலைஞரால் திறந்துவைக்கப்பட்டது. சென்னையை காட்சி படுத்தும் போதெல்லாம் கண்டிப்பாக கத்திபாரா மேம்பாலத்தை காட்டுவார்கள் அவ்வளவு சிறப்பு மிக்க பிரமாண்டத்தை கொண்டிருக்கிறது. இதனால் வாகன ஓட்டிகளின் வாகன நெரிசலில் சிக்காமல் பயணிக்க வழி வகுத்தது. 

வள்ளுவர் கோட்டம்:  இது வள்ளுவரை நினைவகமாக கட்டப்பட்டது. திருவாரூர் கோவில் தேர் போன்று வடிவமைப்பு பெற்றதால் ithin   சிறப்பு கூடியது. 1973 ஆம் ஆண்டு கலைஞர் அவர்கள் அடிக்கல் நாட்டி, 1976 யில் பணிகள் முடிவு பெற்றது. இந்த தேரில் திருவள்ளுவர் சிலை வைக்கப்பட்டுள்ளது. இங்கு உள்ள அரங்கத்தில் 1330 குரள்களும் கற்பலகையில் செதுக்கி மக்களுக்கு காட்சிகாக வைக்கபட்டுள்ளது. இதில் அறத்து பாலில் அடங்கிய குறள்கள் கறுநிற பளிங்கு கற்களிலும், பொருள் பாலில் உள்ள குறள்கள் வெள்ளை பளிங்கு கற்களிலும், இன்பதிற்குள் அடங்கிய குறள்கள் செந்நிற பளிங்கு கற்களிலும் பொறிக்கப்பட்டிருக்கிறது. 

தலைமை செயலகம்:  தலைவர் கலைஞர் அவர்கள் ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட பிரமாண்டமான கட்டிடம். தற்போது இது அரசு பன்னோக்கு உயர் சிறப்பு   மருத்துவமனையாய் செயல்பட்டு வருகிறது ஆட்சிமாற்றத்தினால். இந்த வளாகத்தில் உள்ள கட்டிடங்கள் எல்லாம் பசுமை கட்டிடங்களாக வடிவமைக்க பட்டிருப்பது கூடுதல் சிறப்பு. கொரோனா காலத்தில் சிறந்த மருத்துவமனையாய் செயல்பட்டது. சட்டமன்ற அரங்கமாக செயல்பட கட்டப்பட்ட கட்டிடம் தற்போது அரசு பல்நோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையாக செயல்படுவதில்தான் கலைஞரின் கைவண்ணம் அடங்கி இருக்கிறது. அவர் என்ன செய்தாலும் அது என்றும் மக்களுக்கு பயன்படும் வகையில் இருக்கும் என்பதற்கு இந்த கட்டிடம் மிக பெரிய சான்று.


தமிழ் மொழிக்கு ஆற்றிய தொண்டு:

தமிழ்நாடு அதிகாரபூர்வ அரசு பாடல்: நம் மாநிலத்தில் நடைபெறும் அணைத்து அரசு விழாக்களில், பள்ளி நிகழ்ச்சிகளில் மனோன்மனியம் பெ. சுந்தரனார் எழுதிய தமிழ் பாடலை அதிகாரபூர்வ வாழ்த்து பாடலாக பாடும் படி சட்டத்தை அறிவித்தார். நம் தாய் மண்ணை போற்றும் வாழ்த்து பாட்டாய் இது அமைந்தது. 


தமிழ் மொழிக்கு செம்மொழி அந்தஸ்து: ஒரு மொழி செம்மொழியாக விளங்க வேண்டுமென்றால் அதற்கு தொன்மை, தலைமைபண்பு, நடுவுநிலைமை, பழமொழிகளுக்கு தாய் போன்ற தன்மைகளை உள்ளடக்கி இருக்கவேண்டும். இவை அனைத்தும் தமிழ் மொழிக்கு இருப்பதால் கலைஞர், தமிழ் மொழி செம்மொழி தான் என்றும், மத்திய அரசு செம்மொழி அந்தஸ்து தர வேண்டும் என கோரிக்கை வைத்தார். அதன் பிறகு மத்திய அரசு தமிழ் மொழிக்கு செம்மொழி அந்தஸ்து கொடுத்து அரசாணை பிறப்பித்தது. 


அரசு பணியில் தமிழ் மொழிக்கு ஒதுக்கீடு: தமிழ் வழியில் படித்த மாணவர்களுக்கு 20% இடங்களை அரசு பணியில் ஒதுக்கீடு செய்து அரசாணை பிறப்பித்தவர் கலைஞர். 

உலக தமிழ் செம்மொழி மாநாடு: தமிழ் மொழிக்கு பெருமை சேர்க்கும் நோக்கில் உலகம் மக்கள் யாவரும் பார்த்து வியக்கும் வண்ணம் கோவை மாநகரில் உலக தமிழ் செம்மொழி மாநாட்டை நடத்தினார். பல நாடுகளில் வசிப்பவர்கள் இங்கு வந்தும், தொலைக்காட்சியில் பார்த்தும் தமிழ் மொழியின் வரலாறை அறிந்து கொள்ள வழி வகுத்தது. 


இப்படி எண்ணற்ற காரியங்கள் மற்றும் திட்டங்கள் கலைஞர் செய்திருக்கிறார். மொழி, கல்வி, வேலைவாய்ப்பு, தமிழக வளர்ச்சி பணி, நாட்டின் முதுகெலும்பான விவசாயம் போன்ற எல்லா துறையிலும் தமிழகம் தனித்து விளங்கும் படியாகவும், அனைவருக்கும் சமத்துவமாக எல்லாம் கிடைக்க அடித்தளம் போட்டார். இன்னும் எண்ணற்ற காரியங்களை செய்திருக்கிறார். இப்படிப்பட்ட வரலாறு படைத்த ஒப்பற்ற அரசியல் தலைவரை பற்றி யாவரும் அறிந்து கொள்ள வேண்டும் என்பது அவசியம். 


                               -----------!!  வாழ்க வாழ்க வாழ்க கலைஞர் வாழ்கவே !!---------

                                                                                                                     

-  சா. மெர்லின் ஃபிரிடா 




அரசியலில் நண்பராக இருக்கும்போதும் சரி, எதிரியாக இருக்கும்போதும் சரி; தன் நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பவர் திமுக தலைவர் கருணாநிதி

- இந்திரா காந்தி



இந்திய அரசியலில் மிக உயர்ந்த தலைவர்களில் ஒருவர் கருணாநிதி. ஏழைகள், சமூகத்தின் அடிநிலையில் உள்ள மக்களில் குறைகளைக் கேட்பதற்காக அவ்ருடைய வீட்டுக்கதவும், அவருடைய காதுகளும் எப்போதும் திறந்தே இருக்கும். சமூக நீதிக்கான பயணத்தில் எனக்கு உறுதியான கூட்டாளியாக அவர் திகழ்ந்தார். தன்னுடைய ஆட்சியையும் இழக்கத் தயாராக இருந்தார். அதற்காக என் வாழ்நாள் முழுக்க அவருக்கு நன்றிக்கடன் பட்டிருக்கிறேன்.

- வி.பி. சிங்




கருணாநிதி தமிழகத்தின் தலைவர் மட்டுமல்ல, நவீன இந்தியாவை உருவாக்கிய சிற்பிகளில் ஒருவர். அவரது வாழ்வும் செயல்பாடுகளும் நாடு முழுவதிலும் இருக்கும் எண்ணற்றோரை உத்வேகம் கொள்ளவைக்கிறது.

- மன்மோகன் சிங்


No comments:

Post a Comment