Saturday 30 January 2021

அது வெறும் பெயரல்ல கடந்த நூற்றாண்டு தமிழர்களின் தீர்க்க ரேகை! - மு.ரா. விவேக்

அது வெறும் பெயரல்ல கடந்த நூற்றாண்டு தமிழர்களின் தீர்க்க ரேகை! - மு.ரா. விவேக்


"மு.கருணாநிதி எனும் நான்....." என்ற வைர வாக்கியம் தமிழகத்தில் ஒலித்த பொழுதெல்லாம் தமிழன் தலை நிமிர்ந்தான்-இந்த வரலாற்று வாக்கியம் 5 முறை தமிழகத்தில் மின்னலாய் /இடியாய் ஒலித்து ஒவ்வொரு முறையும் சனாதன- ஆதிக்கச் சமுதாயதிற்கு எதிராய் ,அழகாய் கத்தியின்றி ரத்தமின்றி அறுவை சிகிச்சையை அரசாணை மூலமாய் நிகழ்த்தியது என்று சொன்னால் மிகையாகாது ...


1969-1971 / 1971-1976 / 1989-1991 / 1996-2001 / 2006-2011.


இந்தக் காலகட்டம் அதாவது , 18 வருடம் 290 நாட்கள் தலைவர் கலைஞர் தமிழகத்தின் தலைமை அமைச்சராகப் பொறுப்பு வகித்தார்,ஒவ்வொரு காலகட்டத்திலும் படிப்படியாக…..

தொலைநோக்குத் திட்டங்கள்- தொழிற்புரட்சி!


கல்வித் துறை!

மின்சாரம்!

சமூகநீதி திட்டங்கள்!

சுயமரியாதை பிரச்சாரம்!

மாநில உரிமை முழக்கம்!

பகுத்தறிவு கொள்கை!

மொழி உணர்வு!

மக்கள் நலத் திட்டங்கள்!

ஒடுக்கப்பட்டோருக்கான அமைச்சகங்கள்!

மகளிருக்கான உரிமைகள்!

விவசாயப் புரட்சி சாதனைகள்!

உள்கட்டமைப்பு- காவல்!

இலக்கியம்!

புதினம்!

கவிதைகள்!

திரைக்காவியங்கள்!

உடன்பிறப்புக் கடிதங்கள்,

எழுத்தோவியங்கள்!


என்று ஒவ்வொரு தலைப்பிலும் அசராமல் ஜனநாயக வாளேந்தி தனக்குட்பட்ட அதிகாரம் என்னவென்று அறிந்து அணுவணுவாகத் தமிழகத்தைச் செதுக்கிய மகத்தான ஆளுமை தான் கலைஞர் என்னும் ஆயுத எழுத்து!


ஆம்! சுதந்திர இந்தியாவில்.... தமிழ்நாட்டை ஆரியத்திடம் இருந்து காத்து நின்ற -தமிழர்களின் ஆயுதம் தான் கலைஞர்!


அது வெறும் பெயரல்ல கடந்த நூற்றாண்டு தமிழர்களின் தீர்க்க ரேகை!


மேற்பட்டியலிட்டுள்ள ஒவ்வொரு தலைப்பிலும் அவரின் பங்கைப் பக்கம் பக்கமாய் எழுதலாம், முதல்வராக அவர் பேனா மைக்கொண்டு எழுதிய அவரின் பெயரெல்லாம் சட்டமானது -அதனால் வாழ்க்கை பெற்ற மக்கள் /சமுதாயம் இன்னமும் ரத்தமும் சதையுமாய் நிகழ்காலச் சாட்சியமாய் இன்றும் நம்மிடையே வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார்கள் ,அப்படி நன்றி மறவாமல் வாழ்பவர்களில் கடைசிக் கோடியில் நிற்கும் நானும் ஒருவன் ....


பீடிகை போலத் தோன்றலாம் -பொருத்தருள்க!


அனைத்து சாதனைகளையும் சொல்வதை விடச் சிலவற்றைச் சொல்லி -இதையெல்லாம் ஒரு மனிதன் சிந்தித்தார் என்பதே ஆச்சரியம் தான்-இவையெல்லாம் இன்னமும் இந்திய ஒன்றியத்தில் எட்டாத கனியாய் அல்லது இன்றைய காலகட்டங்களில் தான் நடைமுறைக்கு வந்து கொண்டும் இருக்கிறது!


சிலவற்றை மட்டும் மனதிற்குப் பட்டத்தைச் சொல்கிறேன் ....


ரோட்டில் போய்கிட்டு இருக்காரு, சாலையில் தார் போட்டுத் தொழிலாளர்கள் வேலை செய்துகொண்டு இருக்கிறார்கள்,சூடு தாங்காமல் கையிலும் காலிலும் ,கோணியையும் இலைகளையும் கட்டிக்கொண்டு பணி செய்துகொண்டு இருக்கிறார்கள் - அடுத்த நாள் அரசாணை வருகிறது ரப்பரில் கால் கவசம் கையுறை (Hand gloves and Safety Gumboots) இலவசமாக வழங்க வேண்டும் என்று!


தன் சிறு வயதில் மனிதனை வைத்து மனிதனே கால்நடையாக இழுத்துச் சொல்லும் கை ரிக்க்ஷாவைப் பார்க்கிறார், பல காலம் கழித்து அந்த நிலையை ஒழித்துச் சைக்கிள் ரிக்க்ஷா திட்டத்தைக் கொடுக்கிறார்!

கண் புரையால் பாதிக்கப்பட்ட மக்களைக் காண்கிறார்,எல்லா மக்களுக்குமான கண்ணொளி திட்டத்தைக் கொண்டு வருகிறார்!


அரவாணிகள், xxxகள் என்று சமூகத்தால் கேலி கிண்டலுக்கு உள்ளவர்களைக் காண்கிறார் அவர்களை "திருநங்கை" என்று அழைத்து அரசாணை மூலம் மூன்றாம் பாலினத்தவர்களுக்குத் தனி நலவாரியம் அமைக்கிறார்!


உடல் ஊனமுற்று,பார்வை குறைபாடு உள்ளவர்களைக் குருடன்-நொண்டி என்று சமுதாயத்தில் சொல்லி வந்த நிலையை மாற்றி "மாற்றுத்திறனாளிகள்" என்று அழைத்து அவர்களுக்கு ஒதுக்கீடும்- உதவித் தொகைகளை வழங்க அரசாணை வெளியிடுகிறார்!

முதுமையாலும்-உற்றார் உறவினர்களாலும் கைவிடப்பட்டு நிர்க்கதியாய் கோவில்களிலும்,ஊர்களில் உணவுக்குக் கையேந்தி பிச்சை எடுக்கும் மக்களைக் காண்கிறார்-அரசனாய் அரசாணை பிறப்பிக்கிறார் பிச்சைக்காரர்கள் மறுவாழ்வு திட்டம் என்று! (இது மீண்டும் நடைமுறைக்கு வரவேண்டும்)


அது வரை பள்ளிகளில்,என்ன தான் வயதில் அனுபவத்தில் -முதன்மையானவர்களாக இருந்தாலும் தமிழ் ஆசிரியர்களால் அந்தப் பள்ளிக்குத் தலைமை ஆசிரியராக ஆகா முடியாது என்ற நிலை இருந்தது. அதை ஒரே அரசாணையில் உடைத்து எறிந்தார்,தமிழ் ஆசிரியர்களும் தலைமை ஆசிரியராக இருக்க முடியும் என்று சட்ட வழி வகைச் செய்தார் !


பல ஒடுக்கப்பட்ட சாதிகளுக்கு இட ஒதுக்கீடு அமையக் காரணமாக இருந்தாலும், மிக மிகக் கொடுமையான சாதிய ஒடுக்குமுறைக்கு உள்ளாகி உலகவெளிச்சமே படாமல் வாழ்ந்துகொண்டு இருந்த "புதிரை வண்ணார்" என்று அழைக்கப்பட்ட உழைக்கும் மக்களுக்குத் தனி ஒதுக்கீடு கொடுத்துச் சமூகத்தில் கைதூக்கி விட்டார்!


அதே போல் அருந்ததியின மக்களுக்கு உள் ஒதுக்கீடு சட்ட அரசாணை அமைத்துக் கொடுத்தார்!


பெரும் பண்ணையார்களிடம் குவிந்துள்ள நிலங்களைச் சமநிலை ஆக்க/செய்ய நில உச்சவரம்பு திருத்த சட்டம் கொண்டு வந்தார்!


அதே போல் பெரும் பணம் படைத்துக் கோலோச்சி இருந்து வந்த போக்குவரத்துத் துறையை அரசுடைமை ஆக்கி எளியோருக்கும் அடிப்படை வசதியினை நிறைவு செய்து சீர்படுத்தினார்!


இது போல் எண்ணற்ற திட்டங்கள் உண்டு கலைஞரால் திமுகவால் என்று சொல்ல...!

குறிப்பாய் மேற்படி திட்டங்களைச் சொல்ல ஒரு காரணம் உண்டு!

இவற்றையெல்லாம் வெறும் அரசாணை கொண்டு ஒரு முதல்வரால் செய்துவிட முடியும்!

ஆனால் எந்த ஒரு முதல்வராலும் சிந்திக்கக் கூட முடியாது- இப்படி இவர் இதையெல்லாம் சிந்தித்து அரசாணையால் செயல்படுத்தியதால் வாக்கு அரசியலில் அவருக்கு எந்த ஒரு பலனும் இல்லை ,மேலும் இவற்றால் எதோ ஒரு வகையில் ஆதிக்கச் சிந்தனை வாதிகள் /சாதிய நோக்கர்கள் / பண முதலாளிகள் எல்லோரையும் பகைத்துத் தான் கொண்டார், அதையும் தாண்டி செய்தார், காரணம் தமிழ் மக்களை எப்பாடுபட்டாலும் முன்னேற்றி விட்டுடனும் என்கிற எண்ணமும் பெரியாரின்/அண்ணாவின் பட்டறையில் கற்ற மனிதமும் தான்!


எளிதில் சொல்லலாம்-கலைஞரின் "பெண்களுக்கும் சொத்தில் சம உரிமை" என்ற அரசாணையால் எவ்வளவு பெரிய சமூக மாற்றம் இங்கே நடந்தது-அதாங்க கலைஞர்!

முதல்வராக எண்ணிக்கை இருந்தால் யார் வேண்டுமானாலும் அமரலாம் ,கலைஞராக அமர ஒரு தகுதி /சுய அறிவு/ சமூக அக்கறை வேண்டும்.,இன்று யாரை எல்லாம் சொந்தம் கொண்டாடுகிறார்களோ,அவர்கள் யாரும் கலைஞர் சிந்தித்ததைப் போல் சிந்திக்க அல்ல நினைத்துக்கூடப் பார்த்திருக்கவில்லை!


"இருவர்" என்ற படத்தில் ஒரு உரையாடல் வரும் கலைஞர் பேசுவது போல் "எனக்குச் சுயநலம் தான்! இந்த நாட்டை எனக்கு முன்னாலும் சரி, பிறகும் சரி இவ்வளவு சிறப்பாக யாரும் ஆட்சி செய்யவில்லை என்ற நிலையை நான் உருவாக்குவேன். எனக்குச் சுயநலம் தான்! "என்ற ரீதியில் அமைந்திருக்கும் அதை அப்படியே செய்தும் காட்டிவிட்டு ஓய்வெடுக்கிறார்!


அமையப் போகும் திமு கழக ஆட்சி கலைஞரின் கனவுகளை மேலும் சிறப்பாய் மக்களுக்காக விஞ்சி நிற்கும்!


கலைஞர் ஆட்சியை யாரும் அமைக்க வேண்டாம், அமைக்கவும் முடியாது-அதை தி.மு. கழகம் செய்யும், சொல்லாமல் தளபதி ஸ்டாலின் செய்வார்!


முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும்..... நான் என்று ஒலிக்கும் நாளில் கலைஞர் மறுபிறப்பெடுப்பார்!


சமத்துவமான தமிழகத்தைக் கலைஞர் வழியில் தளபதி ஸ்டாலின் அமைப்பார் -தமிழகத்தைக் காக்க வந்த துருவநட்சத்திரம் தான் மு.க. ஸ்டாலின்! ஆம் "மு. க" வின் ஸ்டாலின் அவர்!


வெல்வோம்-தமிழகம் காப்போம்


தி.மு. கழக ஆட்சியமைப்போம்-கலைஞரின் ஆட்சியைப் படைப்போம்!


நன்றியுடன்

மு.ரா. விவேக்
திராவிட இயக்கத்தின் செயல்பாடுகள் மீது மிகுந்த மதிப்பு கொண்டவன் நான். இந்த மண்ணில் சாதி, மத அடையாளங்களை எல்லாம் கடந்து நாம் அனைவரும் உணர்வால், "தமிழர்" என்று உணரவைத்த இயக்கம் அது. இதில் கலைஞரின் பங்கு மகத்தானது. அவர் செம்மொழி மாநாட்டுக்காக எழுதிய பாடலுக்கு இசை கோக்க  என்னைத் தேர்ந்தெடுத்தது, வாழ்வின் சந்தோசங்களில் ஒன்று!


- ஏ. ஆர். ரகுமான்No comments:

Post a Comment