Saturday 30 January 2021

கை கொடுத்த கலைஞர்! - Raiz

கை கொடுத்த கலைஞர்! - Raiz


ந்த கீழ் நடுத்தர குடும்பத்தின் முதல் பட்டதாரி ஆகக் காத்துக் கொண்டிருக்கிறேன் + 2 முடித்த மாணவனான நான். 


1993 ஆம் வருடம் காத்திருப்போர் பட்டியலில் இருந்த நான் அப்படியொரு நற்செய்தியை சுமந்து கொண்டு ஒரு தந்தி வருமென்றுநினைத்துக் கூட பார்த்திருக்கவில்லை. இத்தணூண்டு தந்தித் துண்டில் அவ்வளவு பெரிய (முக்கிய) செய்தி. “you have been selected for a MBBS seat in Tirunelveli Medical College, immediately report”. 


Wow!  என துள்ளிக் குதித்து் விட்டு, கடகடவென கையில் இருந்த 1000 ரூபாயை எடுத்துக் கொண்டு ADJ பஸ்ஸில்காயல்பட்டணத்திலிருந்து திருநெல்வேலி கிளம்பி போய்கிறேன். (மெடிக்கல்காலேஜில் ஒரு வருட ஃபீஸ் 900 ரூயாய் தான் என எனது எதிர்த்த வீட்டு சீனியர்ஹசன் சொல்லி இருந்தார், ஆனால் சென்ற வருடம் ஆரம்பித்த அதிமுக ஆட்சியில் அந்த 900 ரூபாய் என்பது 4000 ரூபாயாக சடாரென உயர்த்தப்பட்டது எனக்குத்தெரியாது, 

பாவம்!) 


அவசரத்தில் படபடத்ததால் எனது ஒரே தோல் செருப்பு அறுந்து போக, வெள்ளைரப்பர் 

செருப்புகளை காலில் அணிந்து கொண்டு கிளம்பி இருந்தேன். 


(அதைஅன்று கவனித்த சீனியர் சீனிவாசன் பின்னர் அடிக்கடி சொல்லிக் காட்டி பலமுறை 

என்னை கிண்டலடித்தது வேறு விசயம்)


அங்கு போன பிறகு,3000 ரூபாய்க்கு என்ன செய்வது என கண்களில் கண்ணீர்கசிய 

முழித்துக் கொண்டிருந்தேன் நான். அப்போது அதிர்ஷ்டவசமாக எனக்குஏற்கனெவே 

கவுன்சிலிங்கில் அறிமுகமாகி இருந்த விஜய் ஆனந்திடம் (அவனுக்கும் அன்று தான் சீட்டு 

கிடைத்திருந்தது) மிகுந்த தயக்கத்துடனும் சங்கடத்துடனும் கேட்க, அவனும்தயங்காமல் உடனே 3000 ரூபாயை 

கொடுத்து உதவினான். நன்றி் நண்பா! 


பின்னர் அந்த கடனை அடைத்து விட்டு, ஒவ்வொரு வருடமும் எப்படி 4000 ரூபாய்கட்டுவது 

எனத் தெரியாமல் விழித்துக் கொண்டிருந்த எனக்கு நண்பன் ஶ்ரீராம் ஒருநற்செய்தியை சொன்னான். அது எது? 


கலைஞர் ஆட்சியில் அறிமுகப் படுத்தப்பட்ட அழகான ஒரு திட்டமான ‘முதல் பட்டதாரி 

உதவித் தொகைத் திட்டம்’ தான் அது. அதன்படி, நாம் கட்டிய வருடஃபீஸ் அனைத்தும் 

நமக்கே திரும்ப கொடுக்கப்படும். எவ்வளவு தெளிவான, உண்மையிலேயே நன்மை பயக்கும் திட்டம்? அதனால் பயனடைந்த நான், நன்றாகப் படித்து MBBS படித்து முடித்தேன். 

கலைஞருக்கு நெஞ்சார்ந்த நன்றி! 


இன்னும் எத்தனையோ நன்மை பயக்கும் கல்வித் திட்டங்கள் கலைஞரால்அறிமுகப் 

படுத்தப்பட்டிருக்கின்றன. அவற்றால் பயனடைந்த பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் 

இன்று நல்ல நல்ல பதவிகளில் உயர்ந்த தகுதிகளுடன்வாழ்ந்துக் கொண்டிருக்கிறார்கள். 

வாழ்க கலைஞர்! வாழ்க அவரின் என்றும். மங்கா புகழ்! 


நன்றி


Raiz 


ஆனால் ஒன்று உடன்பிறப்பே! உண்மையான உறுதியான - திராவிடர் இயக்கங்கள் எவை என்பதையும் பெரியார், அண்ணா கொள்கை வழிநடப்பவர்கள் யார் என்பதையும் கலையாத ஓவியமாக - அழியாத சித்திரமாக அவரையும் அறியாமல் தமிழ் மக்களுக்குத் தீட்டிக்காட்டியமைக்காக சோவுக்கு நன்றி கூறி - இந்த தொடர் கடிதங்களை முடிக்கிறேன்.


அன்புள்ள,

மு.க

(யாரால்? யாரால்? யாரால்? புத்தகத்தில் இருந்து)


No comments:

Post a Comment