Friday 2 July 2021

விடியல் வந்தாச்சு! - மெர்லின் ப்ரீடா

 விடியல் வந்தாச்சு! - மெர்லின் ப்ரீடா


                         கடந்த 10 ஆண்டுகளாய் தமிழ்நாடு பட்ட துயரத்திற்கு எல்லாம் என்று தீர்வு காலம் வருமோ?   என்று காத்துக்கொண்டிருந்த மக்களுக்கு இனிப்பாய் வந்து அமைந்தது கழகம் ஆட்சியை பிடித்த செய்தி. தேர்தல் நடைபெற்று கிட்ட்டத்தட்ட ஒரு மாத காலமாக முடிவிற்கு காத்திருப்பு, மக்களை தேர்தல் முடிவு அன்று ரொம்ப ஆர்வமாக தங்கள் தொகுதியில் யார் வெற்றி பெற போகிறார், குறிப்பாக தலைவர் ஸ்டாலின் ஆட்சியை பிடிச்சிரணும் என்ற எண்ணம்தான்  பல தமிழ் மக்களின்  எண்ணங்களாக ஓடி கொண்டிருந்தது. இந்த வெற்றி சாதாரமாக கிடைத்து விடவில்லை. இதற்கு பின் தலைவரின் உழைப்பு எல்லாம் அளப்பரியது. தமிழக அரசியல் வாழ்க்கையில் கிட்டத்தட்ட 40 ஆண்டுகள் தன்னை ஈடுபடுத்தி கொண்ட தலைவர் சமகாலத்தில் இவர் ஒருவரே. தன் வாழ்வில் எத்தனையோ இழி சொர்க்கள்! பழி பேச்சுகள்! எத்தனையோ போராட்டங்கள்! ஆனால் அதை எல்லாவற்றையும் பொறுமையோடு சகித்து கொண்டு, தன்னுடைய செயலாற்றளாளும், ஆளுமை திறனாலும், சாமானியர்கள் பக்கம் என்றும் துணை நிற்கும் அந்த நற்பண்புகள் எல்லாமே இன்று  மாபெரும் தலைவராய் நமக்கு கிடைக்க பெற்றிருக்கிறார். காலத்துக்கு ஏற்றாற்போல கட்சி கூட்டங்கள் எல்லாம் தொழில்நுட்ப அணுகுமுறையோடு நடத்தி, காலத்துக்கும் மக்கள் திமுக சார்பில் நடத்தப்பட்ட பிரச்சார கூட்டங்களை ஆச்சரியதோடு பேசிக்கொள்ளும் வகையில் எல்லார் மனதிலும் ஆழமாக பதிய வைத்துவிட்டார் தளபதி. தேர்தல் தேதி அறிவிக்க பட்ட நாளில் இருந்து சென்னை அண்ணா அறிவாலயத்தில் முன் பகுதியில் வைக்கபட்டிருந்த  'count down' எல்லாம் ரொம்ப வித்தியாசமான அணுகுமுறை. அதை சமூக வலைத்தளங்களில் பலர் பகிர்வதை பார்க்கும் போது எல்லாம் ரொம்ப ஆர்வத்தையும், உற்சாகத்தையும் ஏற்படுத்தியது. சொல்லி அடிப்பார் கில்லி மாறி என்ற சொற்றொடர்க்கு இணங்க இந்த countdown யில் எண்ணிக்கை பூஜியம் வர அன்றைய தினத்தில்  நாங்க தான் ஆட்சி பீடத்தில் இருப்போம் ! அந்த மாதிரி தன்னம்பிக்கை எல்லாம் இந்த காலத்தில்  வேற எந்த கட்சி தலைவருக்கும் இல்லை. ரொம்ப நெருக்கடியான காலகட்டத்தில் சரியான தலைவர் நமக்கு கிடைத்திருக்கிறார் என்று பலரும் பேசுகிறார்கள். ஆம் ! உண்மையும் அதுதான். ஆட்சியில் அமர்ந்ததால் கொரோனா 2 ஆம் அலையை முதல்வரின் நிர்வாக திறமையால் மேற்கொண்டு விடுவோம் என்ற நம்பிக்கையும் பலரிடம் உதித்திருக்கிறது.தலைவரின் பதவி ஏற்பு விழா கொரோன காலகட்டம் ஆனதால் எளிய முறையில் நடந்தாலும் அனைவரின் கவனத்தையும் ஈர்த்திருக்கிறது. நிறைய பேர் எதிர்பார்க்கவில்லையா என்று தெரியவில்லை அவர் ' முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் என்னும் நான் ' சொல்வார்   என்று ! அந்த வார்த்தையை கேட்டதும் பலர் கண்களில் கண்ணீர் வழிந்தது என்று சமூக வலைதளத்தில் சந்தோசத்தை பரிமாறி கொண்டார்கள்.  அறிவாலயதில் கால் வைக்காத கடை கோடி தொண்டர்கள் நிச்சயம் மகிழ்ச்சியில் கண்கலங்கி இருப்பார்கள் என்பது உறுதி. நானும் என் மனதில் நினைத்தேன் கண்டிப்பாக தலைவர் ' முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் என்னும் நான்' தான் சொல்வார் என்று ! ஆனாலும்   கேட்டதும் ஏனோ தெரியவில்லை கண்கள் மகிழ்ச்சியில் கலங்கியது.பதவி ஏற்த முதல்வர் முதல் கொண்டு அமைச்சர்கள் அனைவரும் உளமார உறுதி மொழி ஏற்கிறேன் என்று சொல்லி பதவி ஏற்று கொண்டனர். இது பெரிய பேச்சு பொருளாக மாறி விட்டது.கொரோனா என்பதால் எளிய முறையில் பதவி ஏற்பு விழா நடந்தாலும் அதை காலத்துக்கும் பேசும் விழாவாக அமைந்துவிட்டது. திமுக என்றால் எப்பொழுதுமே மாஸ் தான் !


வாக்கு எண்ணிக்கை முடிந்து திமுக வெற்றி என்று அறிவிக்க பட்ட நாளிலிருந்து விடியல் ஆரம்பம் ஆகிவிட்டது என்று தான் சொல்லணும். அடுத்த நாளில் இருந்தே நாம படிப்படியாக விடியல் பாத்துகிட்டே இருக்கோம். எதிர்பாக்கவே இல்லை, 1212 MRB ஒப்பந்த செவிலியர்களுக்கு  பணி நிரந்தரம் செய்வார் என்று.அவர்களின் நீண்ட நாள் கோரிக்கை இது .திமுக வாக்குறுதிகளில் ஒன்றை பதவி ஏற்பிற்கு முன்பே தலைவர் செய்து விட்டார். அதற்கு பிறகு 7-05-2021 அன்று காலை திமுக தலைவர் திரு.மு.க ஸ்டாலின் பதவி ஏற்கிறார். அன்று மாலையிலே தலைமை செயலகத்தில் மூன்று முக்கிய அம்சங்களுக்கு கையெழுத்து இடுக்கிறார். 


                                        1) கொரோனா குடும்ப அட்டை தாரர்களுக்கு ரூ. 4000  வழங்குவதற்கான திட்டம்( இரு தவணைகளாக வழக்கும் ).

                                       2)உள்ளூர் அரசு  பேருந்துகளில் பெண்களுக்கு பயணம் இலவசம். 

                                       3) பால் கொள்முதல் விலையை உயர்த்தியும் அதே சமையம் விற்பனை விலை ரூ. 3 குறைத்தும் அரசானை. 


உள்ளூர் அரசு பேருந்துகளில் அரசாணையில் கையெழுத்திட்ட அன்று இரவே ஒட்டிகள்  பேருந்து முகப்பில் ஒட்டப்படுகிறது. அதில் தனி சிறப்பு என்னவென்றால், தலைவரின் புகைப்படம் என்று எதும் இடம்பெறவில்லை.பயன்பாட்டிற்கு வந்த மறுநாளில் அந்த திட்டத்தின் மூலம் பயணித்த பெண்கள்  மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார்கள்.

நாம் கொரோனா என்ற கொடிதான காலகட்டத்தை சந்தித்து கொண்டு வருகிறோம். இந்த நேரத்தில் அரசாங்கம் எந்த அளவுக்கு துரிதமாக செயல்பட முடியுமோ அவ்வளவு வேகமாக மக்களை காப்பாற்றும் பணியில் தீவிரமாக இறங்கி இருக்கிறார்கள். ஊரடங்கு போட்டால் தான் கொஞ்சம் நிலைமையை கைக்குள்ள கொண்டு வர முடியும் என்பதன் அடிப்படையில் தான் இரண்டு வார ஊரடங்கை பிறப்பித்திருக்கிறார்கள். அதுவும் மக்களுக்கான அன்றாட தேவைகளுக்கு தடை வந்து விட கூடாது என்ற நோக்கத்தோடு தான் தெளிவாக  அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டும்  குறிப்பிட்ட நேரம் ஒதுக்கீடு செய்து  பாதிப்பு வந்து விட கூடாது என்ற வகையில் அடிப்படையில் தளர்வு விட்டிருக்குறார்கள்.ஒன்றிய அரசிடம் இருந்து மருத்துவ வசதிகளை பெற்று கொண்டு இருக்கிறார்கள்.முதலாவதாக 'கொரோனா வார் ரூம் ' என்பதை ஏற்படுத்தினார். அதன் மூலம் மக்கள் ஆக்சிஜன் உடன் கூடிய படுக்கைகள், நோயாளிகள் மருத்துவ உதவியை அணுகி கொள்ளவும் பேருதவியாய் செயல்பட்டு  வருகிறது.  சர்வதேச அளவில் 5 கோடி தடுப்புசிகளை இறக்குமதி செய்ய ஒப்பந்தம் செய்திருக்கின்றனர்.நெதர்லாந்தில் உள்ள ஆம்ஸ்டர்டம் நகரில் இருந்து 20 மெட்ரிக் டன் கொள்ளவு கொண்ட நான்கு தாழ் வெப்ப கொள்கலன்கள் மூலமாக திரவ ஆக்சிஜன் விமானம் மூலம்  கொண்டுவந்திருக்கின்றனர். ஸ்டெர்லைட் ஆளை மூலம் ஆக்சிஜன் உற்பத்தி செய்ய வழி வகுத்துள்ளனர். தொழிற்ச்சாலைகளில் உற்பத்தி செய்யப்படுகிற ஆக்சிஜன் வைப்பதற்கு காலி சிலிண்டர் / கண்டைனர் ஜெர்மன், பிரிட்டன் போன்ற நாடுகளில் இருந்து கொண்டுவரப்பட்டு தொழிற்சாலைகளுக்கு அனுப்பப்பட்டிருக்கின்றன. மூடி கிடக்குக் தொழிற்சாலைகளில் இருந்து  ஆக்சிஜன் உற்பத்தி செய்வதற்கான நடவடிக்கைளை தொழில்துறை அமைச்சர் திரு. தங்கம் தென்னரசு அவர்கள் மேற்கொண்டு வருகிறார். மருத்துவமனைகளில் படுக்கை தட்டுப்பாடை குறைக்க ஒரு வாரத்தில் சுமார் 1000 படுகை வசதி ஏற்பாடு செய்திருக்கிறார்கள். இன்னும் குறிப்பாக மண்டலம் வாரியாக அமைச்சர்களுக்கு பொறுப்பை குடுத்து நோய் தோற்றின் பாதிப்பை கண்காணிக்கவும்,  உதவிகள் தேவைப்படுவோருக்கு உதவியும் வழங்கி வருகிறார்கள். மக்களை காப்பாற்றுவதில் அரசாங்கம்  முழு வீச்சில் செயல்பட்டு வருகிறது என்பதில் எந்தவித  மாற்றுக்கருத்தும் இல்லை. 


சரி, கொரோனா காலம் என்பதால் அந்த காரியத்தில் மட்டும் தான் மிகவும் கருத்துடன் செயல்படுகிறார் என்று பார்த்தால்..... தேர்தலுக்கு முன்பு திமுக சார்பில் தலைவர் நடத்திய ' உங்கள் தொகுதியில் ஸ்டாலின் ' என்ற நிகழ்சியின் மூலம்  தமிழகம் எங்கும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்களின் கோரிக்கைகளை பெற்று கொண்டார். அந்த கோரிக்கைகளை எல்லாம் ஆட்சி அமைந்ததும் நூறு நாளுக்குள் சரி செய்வேன் என்று வாக்குறுதியும் கொடுத்தார். இந்த கொடிய நோய் தோற்று காலத்தில் அதை செயல்படுத்துவது கொஞ்சம் கடினம் என்று எண்ணினோம் ஆனால் பாருங்க அதற்காக தனி அதிகாரிகளை நியமித்திருக்கிறார். வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டான் என்ற ஊரில் ஒருவர் அவர்கள் ஊரில் பைபாஸ் சாலை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை நிகழ்ச்சியின் போது வைத்திருக்கிறார். அவர் முன்வைத்த கோரிக்கைக்கான தகவல் அவருக்கு குறுஞ்செய்தியின் மூலம் வந்திருக்கிறது. சமூகவலைத்தளத்தில் அதை பகிர்ந்தும் உள்ளார். இதை போல் பலரின் கோரிக்கைகளுக்கான நடவடிக்கைளையும் கொரோனா நடவடிகளுக்கு இணையாக செய்து கொண்டுருக்கிறார். இனகுளத்தூரில் பரமாரிக்கப்படமால் கிடப்பில் கிடந்த ஆரம்ப சுகாதார நிலையத்தை ஆய்வு செய்து வெறும் ஐந்தே மணி நேர அளவில்  சரிசெய்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவந்துள்ளார் ஸ்ரீரங்கம் தொகுதி MLA.இப்படியாக மக்களுக்காக என்ன செய்ய வேண்டுமோ?  அதை தவறாது செயல் படுத்தி கொண்டிருக்கிறார் தலைவர். 

தலைவர் செயல்பாடுகள்,  எல்லாருமே பார்த்து பிரமிக்கும் வகையில் தான் இருக்கிறது. குறிப்பாக அரசியல் நாகரிகம் என்றால் என்ன என்பதை ஒவ்வொரு செயலாற்றிலும் வெளிப்படுத்தி கொண்டிருக்கிறார். பதவி ஏற்பு விழா அன்று எதிர்க்கட்சி ஒருங்கிணைப்பாளர் உடன் ஒரே மேசையில் அமர்ந்து தேநீர் அருந்திய காட்சி எல்லாம் மக்களை வெகுவாக கவர்ந்துள்ளது.கொரோனா பேரிடருக்காக தமிழக அரசின் மூலம் நிதி திரட்ட படுகிறது. அதில் பணம் செலுத்துவோர் அவர்கள் பெயருடன் எவ்ளோ பணம் செலுத்தியுள்ளார்கள் என்பதோடு வெளியாகிறது. இந்த வெளிப்படை தன்மையால் பலரும் நிதி குடுக்க முன்வந்திரிகிறார்கள். எந்த மறைபொருளும் இல்லை, அரசாங்கம் மக்களுக்கு எல்லா விதத்திலும் வெளிப்படையாக செயல்படுகிறது. இந்த வெளிப்படைத்தன்மை மக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. இன்னும் ஆழமாக நோக்கி பார்த்தால் தலைவர் பல இதயங்களை கைப்பற்றிக்கொண்டு வருகிறார் என்று தான் சொல்லணும்.சிறுவன் ஒருவன் தான் மிதிவண்டி வாங்குவதற்க்காக  சேமித்து வைத்திருந்த பணத்தை  முதல்வர் கொரோனா நிவாரண நிதியாக வழங்கியுள்ளான். அச்சிறுவனை தொலைபேசியில் அழைத்து பாராட்டியதோடு அவருக்கு மிதிவண்டியையும் வாங்கி கொடுத்துள்ளார். யாரும் எதிர்பாராத நேரத்தில் இரவு 10 மணி அளவில்  கொரோனா வார் ரூமிற்கு சென்று அங்கு வந்த தொலைபேசி அழைப்பில் மக்களோடு கலந்துரையாடல் செய்திருக்கிறார்.  தலைவர் அவர்களின் செயலாற்று திறனையும், அவரது பண்பையும் பார்த்து தமிழக மக்கள் பாராட்டிக்கொண்டுவருகிறார்கள். 


                              " ஸ்டாலின் தான் வராரு ! விடியல் தர போறாரு ! "

என்ற பாடலின் வரிகளை சற்றும்  மிகையாகாதபடி  மின்னல் போன்ற விடியலை கொடுத்து கொண்டிருக்கிறார். சொல்ல போனால் ரொம்ப விடியலாக போய்ட்டு இருக்கு, கண்கள் கூசுகின்றது !பல இணைய கழக ஆதரவாளர்களுக்கு தலைவர் விடுக்கும் ஒரு அரசாணையை   சமூகவலைத்தளங்களில் பதிவு செய்வதற்குள்  அடுத்த அதிரடி அறிவிப்பு வந்துவிடுகிறதை வைத்து கொஞ்சம் எங்க சமூகவலைத்தள பக்கங்களுக்கு  ஓய்வு வேண்டும் என்று சொல்லும் அளவுக்கு மாறிவிட்டது அவரின் அதிரடி ! இந்த தலைமுறை பார்க்காத நல்ல ஆட்சியை கொடுக்கப்போகிறார் என்பது மட்டும் உறுதி !


    உழைப்பு ! உழைப்பு ! உழைப்பு ! அதற்கு பெயர் தான் ஸ்டாலின் - தலைவர் கலைஞர் 

உண்மையை சொன்னால் இந்த வரிகளை எழுதும் போதோ, குறிபிட்டு பேசும்போதோ இருக்கும் உணர்வை விட அதை தற்பொழுது நாம் கண்கூடாக பார்க்கும் போது ரொம்ப அதிகமாக உணர முடிகிறது !

                                                                                                                    - சா. மெர்லின் ஃபிரிடா 

                                          

No comments:

Post a Comment